SHOCKING: உடலுறவுக்கு மறுத்த மனைவியை கொலை செய்து, தனது ஆணுறுப்பையும் வெட்டிக்கொண்ட கணவன்

News18 Tamil
Updated: July 7, 2019, 9:03 PM IST
SHOCKING: உடலுறவுக்கு மறுத்த மனைவியை கொலை செய்து, தனது ஆணுறுப்பையும் வெட்டிக்கொண்ட கணவன்
கோப்புப் படம்
News18 Tamil
Updated: July 7, 2019, 9:03 PM IST
உடலுறவுக்கு மறுத்த மனைவியை கொலை செய்த கணவன், தனது ஆணுறுப்பையும் வெட்டிகொண்டுள்ள சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் சித்தார்த்நகர் பகுதியை சேர்ந்தவர் அன்வருல் ஹாசன். இவருக்கு திருமணம் ஆகி ஓராண்டு ஆகியுள்ளது. குஜராத் மாநிலம் சூரத்தில் தங்கியிருந்து வேலை பார்த்து வந்த அன்வருல் அடிக்கடி வீட்டுக்கு வந்து செல்வார். இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன் வீட்டுக்கு வந்தவர் தனது மனைவி மெக்னாசை கொலை செய்துள்ளார். அதுமட்டுமல்லாது தனது ஆணுறுப்பையும் அவர் அறுத்துக்கொண்டுள்ளார்.

அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்து பார்த்தபோது, இருவரும் ரத்த வெள்ளத்தில் இருந்துள்ளனர்


இது குறித்து அறிந்த போலீசார் அவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது, சம்பவத்தன்று அன்வருல் தனது மனைவியை உடலுறவுக்கு அழைத்துள்ளார். இதற்கு அவரது மனைவி மறுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து கோவமடைந்த அன்வருல் தனது மனைவியை கொலை செய்ததாகவும், பின்னர் தனது ஆணுறுப்பையும் வெட்டிக்கொண்டதாகவும் வாக்குமூலம் கொடுத்துள்ளார். அவரை உடனே மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்துள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், அன்வருல் வரதட்சணை கேட்டு அடிக்கடி தனது மகளை துன்புறுத்தி வந்ததாக அவரது மாமனார் போலீசில் புகார் அளித்தார். இது குறித்தும் போலீஸ் விசாரித்து வருகிறது.

Loading...

First published: July 7, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...