Home /News /trend /

வெறும் ரூ.1.5 லட்சத்துக்காக குழந்தையை விற்ற பெற்றோர் - காரணம் என்ன தெரியுமா?

வெறும் ரூ.1.5 லட்சத்துக்காக குழந்தையை விற்ற பெற்றோர் - காரணம் என்ன தெரியுமா?

கோப்புப் படம்

கோப்புப் படம்

குழந்தை இல்லாமல் எத்தனையோ பெற்றோர்கள் ஏங்கி தவித்து வருகின்றனர்.

  • News18
  • Last Updated :
உத்தரபிரதேசம் மாநிலம், கன்னௌஜ் மாவட்டத்தில் உள்ள கோத்வலி காவல் நிலையத்தில் இரண்டு வயதான தம்பதியினர், தங்கள் மகளும் அவரது கணவரும் அவர்களது குழந்தையைத் தொழிலதிபர் ஒருவருக்கு ரூ.1.5 லட்சம் பணத்துக்காக விற்றுள்ளனர். அதற்கான காரணம் தான் பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

அதாவது தனது மகளும் அவரது கணவரும் குழந்தையை ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட கார் ஒன்றை வாங்குவதற்காக விற்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து அவர்கள் இருவரையும் போலீஸார் விசாரித்து வருகின்றனர். குழந்தை இல்லாமல் எத்தனையோ பெற்றோர்கள் ஏங்கி தவித்து வருகின்றனர். ஒரு பக்கம் கொரோனா வைரஸின் தாக்க்தினால் உறவினர்களை இழந்து, உடல் நலம் பாதிக்கப்பட்டு, வேலையிழந்து அல்லாடி வரும் வேளையில் ஒரு கார் வாங்க, அதுவும் வெறும் ரூ.1.5 பணத்துக்காக தனது சொந்த குழந்தையையே விற்றுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த மாதிரி சம்பவங்கள் நடப்பது முதன்முறை அல்ல. இதுபோன்ற விசித்திரமான சம்பங்கள் ஏற்கனவே அரங்கேறியுள்ளன. கடந்த வருடம் கர்நாடகாவை சேர்ந்த விவாசாயத் தொழிலாளி ஒருவர் தனது 3 வயது மகளை விற்று, புதிதாக பைக், செல்ஃபோன் வாங்கியுள்ளார். இதனை அவரது வீட்டுக்கு அருகில் உள்ளவர்கள் கண்டு அதிர்ச்சியடைந்து போலீில் புகார் அளித்துள்ளனர்.

இதே போல் ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் ஒரு பெற்றோர் தனது மூத்த மகளின் மருத்துவ செலவுக்காக இளைய மகளை விற்றுள்ளனர். கார் வாங்குவதற்காக குழந்தையை விற்றுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் விமர்சனத்துக்குள்ளாக்கியது. பலரும் குழந்தையின் பெற்றோரை கடுமையாக தாக்கிப் பதிவிட்டு வருகின்றனர். ஆனால் கார் வாங்க, செல்போன், பைக் வாங்க, மருத்துவ செலவு உள்ளிட்ட காரணங்களுக்காக பெற்றோர்கள் தங்களது குழந்தையையே விற்க துணிந்திருக்கும் செயல் அவர்களின் பொருளாதார நிலையை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.

Also read... வீட்டு வாசலில் சடலம் - விரைந்து வந்த காவல்துறையினருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

தற்போது கொரோனா வைரஸ் நோயின் தாக்கம் அவர்களின் பொருளாதார நிலையை இன்னமும் மோசமடையச் செய்துள்ளது. இந்தியாவில் பல மாநிலங்களில் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு அமலில் இருக்கிறது. இந்த நிலை குறைந்தது ஒரு வருடத்துக்கு மேல் நீடிக்கும் என்றும் குறைந்தது இரண்டுமாதம் ஊரடங்கை நடைமுறைபடுத்தினால் மட்டுமே கொரோனாவை கட்டுப்படுத்துவது சாத்தியம் என்றும் நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஆனால் இது அன்றாடம் கூலி தொழில் செய்து பிழைக்கும் அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை மிகவும் நெருக்கடிக்குள்ளாகும் வாய்ப்பு இருக்கிறது. இதனை அரசு கருத்தில் கொண்டு அவர்களின் வாழ்க்கை தரம் பாதிக்கப்படாத வகையில் கொரோனா பாதுகபாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதே பெரும்பாண்மையானோரின் கோரிக்கையாக உள்ளது. இந்நிலையில் இது அரசுக்குப் பெரும் சவாலான ஒன்றாக இருக்க வேண்டும்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Car, UP, Uttar pradesh

அடுத்த செய்தி