குடிபோதை கணவருடன் சென்ற கர்ப்பிணி பெண்... பிரசவம் பார்த்த பெண் காவலர்!

மாதிரி படம்

உத்தரப்பிரதேசத்தில் குடிபோதை கணவருடன் சென்ற பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டதால், பணியில் இருந்த பெண் காவலரே பிரசவம் பார்த்த நிகழ்?

  • Share this:
உத்தரப்பிரதேசம் ஜலதாப்பூரைச் சேர்ந்த தினேஷ் குமார், கர்ப்பிணியாக இருக்கும் மனைவி ரேகா குமார் மற்றும் மாமியார் கவுசல்யாவுடன் உறவினர் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது, தினேஷ் குமார் மதுபோதையில் இருந்துள்ளார். பேருந்தில் சென்ற அவர்கள் சாஜன்பூரில் இறங்கி உறவினர் வீட்டுக்கு நடந்து சென்றுள்ளனர். அப்போது எதிர்பாரதவிதமாக ரேகா தேவிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. தினேஷ் குமார் போதையில் இருந்ததால் என்னசெய்வதென்று அவருக்கு தெரியவில்லை. அவர்களுடன் இருந்த மாமியார் கவுசல்யா, உதவி கேட்டு கத்தி கூச்சல்போட்டுள்ளார். அப்போது அங்கிருந்த விகாஸ் குமார் என்பவர் உதவிக்கு வந்து, பிரசவ பெண்களுக்கான ஆம்புலன்ஸூக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

உத்தரப்பிரதேசத்தில் ஆம்புலன்ஸ் டிரைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பதால், யாரும் உதவிக்கு வரவில்லை. காவல்துறையினர் மட்டுமே உதவ முடியும் என நினைத்த விகாஷ் உடனடியாக காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு அழைப்பு விடுத்தார். சூழலைக் கேட்ட காவல்துறையினரும், உடனடியாக நிகழ்விடத்துக்கு வந்துள்ளனர். தலைமைக் காவலர் மன்வீர் சிங் மற்றும் வின்டு புஸ்கர் ஆகியோர், ரேகா தேவியின் நிலையை பார்த்தவுடன் மருத்துவமனைக்கு அழைத்து செல்வதற்குள் நிலைமை மோசமாக வாய்ப்புள்ளது என்பதை யூகித்து, அருகில் இருந்த கடைக்கு அவரை அழைத்துச் சென்றுள்ளனர். பெண் காவலர் வின்டு புஸ்கரே ரேகாவுக்கு பிரசவமும் பார்த்துள்ளார். நல்லபடியாக குழந்தை பிறந்த பிறகு, தாய் மற்றும் சேயை பத்திரமாக மருத்துவமனைக்கு அவர்கள் அனுப்பி வைத்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இது குறித்து பேசிய பெண் காவலர் வின்டு புஸ்கர், பெண் ஒருவருக்கு ஆபத்தான கட்டத்தில் உதவியது மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளார். அழைப்பு கிடைத்தவுடன் 5 நிமிடத்தில் சம்பவ இடத்துக்கு வந்ததாகவும், அங்கு வந்து பார்த்தபோது ரேகா தேவி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் நிலையில் இல்லை எனக் கூறினார். ஒருவேளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முயன்றால் தாய் மற்றும் சேய் உயிருக்கு ஆபத்து ஏற்படும் எனக் கருதி அருகில் இருக்கும் கடை ஒன்றிலேயே பிரசவம் பார்க்க முடிவு செய்ததாகவும், கடைசியில் தாயும் சேயும் நலமாக இருந்தது மிக்க மகிழ்ச்சியை அளித்ததாகவும் வின்டு புஸ்கர் கூறியுள்ளார்.

Also read... பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட விபரீதம் - வைரலாகும் புகைப்படங்கள்!

விகாஸ் குமார் பேசும்போது, "ரேகா தேவி பிரசவ வலியால் துடித்துக்கொண்டிருந்தபோது அவருடைய அம்மா கவுசல்யா உதவி கேட்டு கத்தி கூச்சலிட்டார். நான் அங்கு சென்று பார்க்கும்போது கணவர் தினேஷ் குடிபோதையில் இருந்தார். நான் உடனடியாக 102 என்ற கர்ப்பிணிகளுக்கான ஆம்புலன்ஸூக்கு போன் செய்தேன். அதில் எந்த பதிலும் கிடைக்காததால், காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு அழைத்தேன். சரியான நேரத்தில் உதவி கிடைத்து தாயும், சேயும் நலமாக இருப்பது மகிழ்ச்சி" எனத் தெரிவித்தார். பெண் காவலருக்கு அம்மாநில காவல்துறையினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
Published by:Vinothini Aandisamy
First published: