ஓடும் பேருந்தில் ஓட்டுநருக்கு வலிப்பு.. சரியான நேரத்தில் காப்பாற்றிய பெண் பயணி - வைரல் வீடியோ
ஓடும் பேருந்தில் ஓட்டுநருக்கு வலிப்பு.. சரியான நேரத்தில் காப்பாற்றிய பெண் பயணி - வைரல் வீடியோ
வைரல் வீடியோ
மகாராஷ்டிரா மாநிலம் பூனேவில் பேருந்து ஓட்டுநருக்கு வலிப்பு நோய் ஏற்பட்டு பேருந்தை இயக்க முடியாமல் போக பெண் ஒருவர் ஓட்டுநரை மருத்துவமனையில் சேர்த்து பேருந்தையும் இயக்கியுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Viral Video: மூளை, நரம்பு தொடர்பான நோய்களில் தலைவலிக்கு அடுத்தபடியாக அதிகம் பேரைப் பாதிப்பது, வலிப்பு நோய். 'காக்காய் வலிப்பு'என்று தவறாக அழைக்கப்படுகிற இந்த நோய் இடம், பொருள், ஏவல் பார்க்காமல் திடீரெனத் தாக்கும். தற்போது பேருந்தை இயக்கிக் கொண்டிருந்த பயணி ஒருவர் வலிப்பு நோயால் அவதியுற அவரை காக்க சிங்கப்பெண்னாய் களம் இறங்கிய பெண் ஒருவரின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.
மகாராஷ்டிரா மாநிலம் பூனேவில் உள்ள சிறூரில் சுற்றுலாவிற்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் சென்று கொண்டிருந்தனர். பின்னர் அவர்கள் வீடு திரும்பிக் கொண்டிருக்கையில் , பேருந்து ஓட்டுநருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டதால் பேருந்தை இயக்க முடியாமல் பேருந்தை நிறுத்தி விட்டார். பின்னர் பேருந்தில் பயணம் செய்த பெண் ஒருவர் பேருந்தை மருத்துவமனைக்கு இயக்கி உள்ளார். ஓட்டுனரை மருத்துவமனையில் சேர்த்து விட்டு பேருந்தில் இருந்த மற்ற அனைவரையும் அவரவர் இடங்களில் நிறுத்தம் செய்துள்ளார்.
A 40-year-old woman, #YogitaSatav saves a driver’s life who suffered a seizure. She drove the bus for around 10 Km to take the ailing driver to a hospital. The bus full of women passengers were returning from a trip. pic.twitter.com/f6SzuuLiGI
40 வயதான அந்தப்பெண்ணின் பெயர் யோகிதா. இவர் ஓட்டுநர் பேருந்தை நிறுத்தியவுடன் 10 கிலோ மீட்டர் வரை பேருந்தை மேலும் இயக்கியுள்ளார். இந்த வீடியோவை @ThePuneMirror எனும் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். பலரும் யோகிதாவிற்கு பாராட்டு தெரிவித்துள்ளனர். செய்திதாள்கள் , யூடியூப் என அனைத்திலும் யோகிதாவின் பெயர் பேசப்பட்டு வருகின்றது.
Published by:Sankaravadivoo G
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.