Home /News /trend /

அபராதத்திலிருந்து தப்பிக்க நினைத்து பைக்கை வேகமாக ஒட்டிய இளைஞர்... படுகாயமடைந்த போலீஸ்!

அபராதத்திலிருந்து தப்பிக்க நினைத்து பைக்கை வேகமாக ஒட்டிய இளைஞர்... படுகாயமடைந்த போலீஸ்!

மாதிரி படம்

மாதிரி படம்

இருசக்கர வாகனத்தில் அவ்வழியே இரண்டு நண்பர்களுடன் ட்ரிபிள்ஸ் வந்த இளைஞர், போலீஸார் நிற்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

  • News18
  • Last Updated :
போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளை பிடித்து அபராதம் விதிப்பது போலீஸாரின் முக்கிய பணிகளில் ஒன்றாக இருக்கிறது. தமிழ்நாடு உட்பட நாட்டின் பல்வேறு மாநிலங்களில் சாலை விதிகளை மீறுவோரை மடக்கி பிடிக்கும் முயற்சிகளின் போது நிறைய அசம்பாவிதங்கள் நிகழ்கின்றன. பெரும்பாலும் சாலைகளின் குறுக்கே வந்து போலீஸார் வாகன ஓட்டிகளை நிறுத்த முயற்சிக்கும் போது அவர்கள் காவலர்களிடம் சிக்கி விட கூடாது என்பதற்காக வேகமெடுக்கின்றனர். இதனால் விபத்தில் சிக்கி கொள்கின்றனர்.

சில நேரங்களில் போலீஸாரின் செயலால் இருசக்கர வாகனத்தில் வருவோர் நிலைதடுமாறி கீழே விழுந்து உயிர் பலியும் ஏற்படுகிறது. சமீபத்தில் ஹரியானா மாநிலத்தில் நடந்த ஒரு சம்பவத்தில் அபராதத்திலிருந்து தப்பிக்க முயற்சி செய்த இளைஞர் போலீஸ் ஒருவரை தனது பைக்கால் இடித்து தள்ளியுள்ள சமயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தில் அந்த போலீஸ்காரர் படுகாயமடைந்துள்ளார். ஹரியானாவின் ஃபதேஹாபாத் மாவட்டத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இந்த சம்பவம் நடந்தபோது ஹரியானாவின் ஃபதேஹாபாத்தில் சிர்சா சாலையில்(Sirsa Road) போக்குவரத்து விதிகளை மீறியவர்களுக்கு காவல்துறையினர் அபாராதத்திற்கான சலான் வழங்கி வந்தனர். கூடவே தற்போது காயமடைந்துள்ள குறிப்பிட்ட போலீஸ் அதிகாரியும் பொறுப்பற்ற வாகன ஓட்டிகளை பிடித்து அபராதம் விதிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் அவ்வழியே இரண்டு நண்பர்களுடன் ட்ரிபிள்ஸ் வந்த இளைஞர், போலீஸார் நிற்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். ட்ரிபிள்ஸில் வண்டி ஒட்டி வருவதால் போலீஸார் தம்மை மடக்கி பிடித்தால் நிச்சயம் அபராதம் விதித்து விடுவார்கள் என்ற பயம் மற்றும் பதற்றத்தில், சிக்கி விட கூடாது என்று முடிவெடுத்தார்.

Also read... திருட சென்ற இடத்தில் இவ்வளோ பணமா? திருடனுக்கு ஏற்பட்ட ஹார்ட் அட்டாக்!

இதனை அடுத்து பைக்கை வேகமாக ஓட்டி அந்த இடத்திலிருந்து எப்படியாவது தப்பி விடலாம் என்றெண்ணி ஆக்சிலேட்டரை முறுக்கியுள்ளார். ஆனால் தப்பிக்கும் பதற்றத்தில் அவர் இருந்ததால் பைக் மீதான கட்டுப்பாட்டை இழந்தார் அந்த இளைஞர். கட்டுப்பாட்டை இழந்த பைக் நேராக அங்கிருந்த ஒரு காவலர் மீது பயங்கரமாக மோதியது. இதில் அந்த காவலர் படுகாயமடைந்தார். ஆனால் பைக்கை காவலர் மீது மோதிய இளைஞர்கள் மற்ற போலீஸார் சுதாரிக்கும் முன்னரே சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடி தலைமறைவாகி விட்டனர். தொடர்ந்து படுகாயமடைந்த காவலர் சிகிச்சைக்காக அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்பு நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் காவலரை பைக்கால் மோதிய இளைஞரும், அவரது 2 நண்பர்களும் கைது செய்யப்பட்டனர்.

தேசிய குற்றப் பதிவு பணியகத்தின் ஆவணப்படி ,கடந்த 2014 முதல் இந்தியாவில் நடைபெற்று வரும் 83% சாலை விபத்துக்களுக்கு அதிக வேகம் மற்றும் பொறுப்பற்ற முறையில் வாகனம் ஓட்டுவது காரணமாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிகழ்வுகளில் பெரும்பாலானவற்றிற்கு பைக் ஓட்டுனர்கள் காரணம் என்பதும், பெரும்பாலும் அனைத்து வகையான போக்குவரத்து விதிகளையும் மீறி பொறுப்பற்ற முறையில் இருசக்கர வாகனங்கள் இயக்கப்படுகின்றன என்பது அதிர்ச்சி தர கூடிய புள்ளி விவரங்களாக உள்ளது.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Bike Riders, Haryana

அடுத்த செய்தி