• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • கருஞ்சிறுத்தையுடன் கொஞ்சி விளையாடும் நாய் - வைரல் வீடியோ!

கருஞ்சிறுத்தையுடன் கொஞ்சி விளையாடும் நாய் - வைரல் வீடியோ!

கருஞ்சிறுத்தையுடன் கொஞ்சி விளையாடும் நாய்

கருஞ்சிறுத்தையுடன் கொஞ்சி விளையாடும் நாய்

ஆறு அறிவு உள்ள மனிதர்களிடம் பல வேற்றுமைகள் இருந்து வருகின்றது. ஆனால் இந்த 5 அறிவு ஜீவன்கள் எந்த வேற்றுமைகளும் இல்லாமல் ஒவருவரை ஒருவர் நேசித்து வருகின்றன.

  • Share this:
செல்லப் பிராணிகள் என்றால் யாருக்கு தான் பிடிக்காது. வீட்டில் எப்போதும் கலகலப்பான சூழலை உண்டாக்க இந்த செல்லப் பிராணிகள் உதவும். தனிமையில் இருப்போருக்கு செல்ல பிராணிகள் தான் சிறந்த துணை. மிக சிறந்த பொழுதுபோக்கான பல படங்களை செல்லப் பிராணிகளை வைத்து எடுத்துள்ளனர். மனிதர்கள் மேல் இருக்கும் நம்பிக்கையை விட பலருக்கு செல்லப் பிராணிகளின் மேல் அதீத நம்பிக்கையும், பாசமும் உண்டு.

பல்வேறு வகையான பொழுபோக்கு வீடியோக்களை நாம் தினம்தோறும் யூடியூப், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் கண்டு வருகிறோம். அவற்றில் மிகவும் பிரபலமானவை செல்லப் பிராணிகளின் சேட்டைகள் கொண்ட வீடியோக்கள் தான். இது போன்ற ஒரு சூப்பர் வீடியோ தான் இன்ஸ்டாகிராமில் சமீபத்தில் வைரலாகி வருகிறது.

வெவ்வேறு பகுதியை சேர்ந்த இரண்டு செல்லப் பிராணிகள் மிகவும் நட்புடன் பழகி வருகின்றன. அதுவும் இவை இரண்டும் ஒரே வகையை சேர்ந்த செல்லப் பிராணிகள் அல்ல. இவற்றில் ஒன்று லூனா என்கிற கருஞ்சிறுத்தை. மற்றொன்று வென்ஸா என்கிற நாய். சைபீரியா நாட்டில் உள்ள வனவிலங்கு காப்பகத்தில் பிறந்த இந்த லூனா கருஞ்சிறுத்தையை, தாய் சிறுத்தை நிராகரித்து விட்டதாம். அதன் பிறகு இதை ஒரு பெண்மணி தனது செல்லப் பிராணியாக தத்தெடுத்து கொண்டார்.

இவர் ஏற்கனவே வென்ஸா என்கிற நாயையும் செல்லப் பிராணியாக வளர்த்து வந்துள்ளார். மிக சீக்கிரத்திலே இவை இரண்டும் நெருக்கமான நண்பர்களாகி விட்டன. இந்த இரண்டு செல்லப் பிராணிகளும் தினமும் செய்யும் சேட்டை வீடியோக்களை, அவர்களுக்கென்று ஒரு புதிய இன்ஸ்டாகிராம் பக்கத்தை உருவாக்கி அதில் அப்பெண்மணி பதிவிட்டு வந்துள்ளார்.

இவை இரண்டும் ஒன்றாக இந்த உலகை ஆவலுடன் பார்க்கும் வீடியோ; மிக மகிழ்ச்சியாக விளையாடும் காட்சிகள், எப்போதும் சந்தோஷமாக முகத்தை அசைக்கும் வீடியோ போன்றவை இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது. எப்படி ஒரு சிறுத்தையும் நாயும் நட்பாக இருக்க முடியும் என பலர் இவற்றின் நட்பை பார்த்து ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.

Also read... பீட்சாவின் நடுவில் ஒரு சின்ன டேபிள் இருப்பது ஏன்? - வைரலான வீடியோ!

இவற்றின் சேட்டைகளை luna_the_pantera என்கிற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீங்கள் காணலாம். 7 லட்சத்திற்கும் மேலான ஃபாலோவர்ஸ் இந்த பக்கத்தை பின்பற்றி வருகின்றனர். லுனாவும், வென்ஸாவும் கொஞ்சி விளையாடும் பல வீடியோக்களை ஆயிரக் கணக்கான பேர் பார்த்து ரசித்து வருகின்றனர். குறிப்பாக சமீபத்தில் பதிவிட்ட ஆலோவீன் நிகழ்ச்சி வீடியோ பலரின் பாராட்டுகளை பெற்றுள்ளது. இந்த வீடியோவிற்கு சுமார் 85,000 லைக்குகள் கிடைத்துள்ளன. வேடிக்கையான கமெண்ட்களையும் பலர் பதிவிட்டுள்ளனர்.

ஆறு அறிவு உள்ள மனிதர்களிடம் பல வேற்றுமைகள் இருந்து வருகின்றது. ஆனால் இந்த 5 அறிவு ஜீவன்கள் எந்த வேற்றுமைகளும் இல்லாமல் ஒவருவரை ஒருவர் நேசித்து வருகின்றன. லூனாவிடமும் வென்ஸாவிடமும் இருந்து இந்த ஒற்றுமையையும், நேசத்தையும் நாம் கற்றுக்கொள்ள வேண்டியது அவசியம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: