2022 FIFA உலக கோப்பையில் சுமார் 30-க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றுள்ள நிலையில், 2026-ஆம் நடைபெற உள்ள உலக கோப்பை தொடரில் பங்கேற்கும் அணிகளின் எணிக்கையை 48-ஆக அதிகரிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. பலநாடுகளை சேர்ந்த அணிகள் சர்தேச அளவில் கால்பந்து விளையாடவில்லை அல்லது FIFA உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெறவில்லை என்பதையும் பொருட்படுத்தாமல் இந்த விளையாட்டு மற்றும் அதன் வீரர்களின் மீதான ஆர்வமும், காதலும் எல்லைகளை கடந்து காணப்படுகிறது.
உதாரணமாக கிரிக்கெட்டை மிகவும் நேசிக்கும் நம் நாடு மில்லியன் கணக்கான கால்பந்து ரசிகர்களையும் கொண்டுள்ளது. நம் இந்திய ரசிகர்கள் கிரிக்கெட்டை விட ஒரு படி மேலே சென்று FIFA உலக கோப்பை திருவிழாவை மிகவும் உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள். தென்னிந்தியாவில் குறிப்பாக கேரளாவில் இருக்கும் ரசிகர்களை, ஃபுட்பால் வெறியர்கள் என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு இந்த கேமின் மீது வெறித்தனமான ஆர்வம் கொண்டவர்கள். கேரளத்தை சேர்ந்த எண்ணற்ற ஃபுட்பால் ரசிகர்கள் போட்டிகளை நேரில் கண்டு களிக்க கத்தாருக்கே சென்றுள்ளனர்.
இந்த நிலையில் தான் கத்தாரில் நடந்து வரும் FIFA-வின் உலகக் கோப்பை 2022 தொடர்புடைய வீடியோ ஒன்று சோஷியல் மீடியாக்களில் வேகமாக வைரலாகி நம்முடைய கால்பந்து ரசிகர்களை மகிழ்வித்து வருகிறது. காரணம் வீடியோவில் காணப்படும் கேரளாவை சேர்ந்த ஃபுட்பால் ரசிகர் ஒருவர் தன் உடலில் அர்ஜென்டினா நாட்டின் தேசிய கொடியையும், அர்ஜென்டினாவை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தன் உடலில் நம்முடைய மூவர்ண தேசிய கொடியையும் போர்த்தியுள்ளனர்.
'தேசத்தால் பிரிக்கப்பட்டிருந்தாலும் கால்பந்தால் ஒன்றுபட்டுள்ளோம்' எங்கள் தேசத்தை நேசித்ததற்காக @leticiaestevez அவர்களுக்கு நன்றி என்று yadil_m_iqbal என்ற இன்ஸ்டா அக்கவுண்டில் இருந்து ஷேர் செய்யப்பட்டுள்ள குறிப்பிட்ட வைரல் வீடியோ நெட்டிசன்களின் இதயத்தை மிகவும் கவர்ந்து வருகிறது. ஏனென்றால் ஏன் தன் உடலில் இந்திய கொடியை சுற்றி கொண்டுள்ளார் என்பதற்கான காரணத்தை அந்த வீடியோ வெளிப்படுத்துகிறது. வீடியோவில் லெட்டி எஸ்டீவெஸ் என்ற அர்ஜென்டினா பெண்ணுக்கு அருகில் யாதில் எம் இக்பால் என்ற இந்தியர் நிற்பதைக் காணலாம்.
View this post on Instagram
அர்ஜென்டினாவின் கொடியை தன் உடலில் சுற்றி கொண்டிருக்கும் அந்த கேரள நபரின் அருகில் நிற்கும், அர்ஜென்டினா பெண் தன் தோளில் இந்தியக் கொடியை போர்த்தியுள்ளார். அர்ஜென்டினா பங்கேற்ற போட்டியின் போது தான் leti-யை கண்டதாகவும், அவர் அப்போது நம் தேசியக்கொடியை உடலில் போர்த்தி கொண்டு உற்சாகமாக வலம் வந்ததாக தெரிவித்தார். அவர்களது நாடான அர்ஜென்டினா அணிக்கு நம் இந்தியர்களிடமிருந்து கிடைக்கும் அன்பு மற்றும் ஆதரவிற்கும் பதிலளிக்கும் விதமாக நமது நாட்டின் மூவர்ண கொடியை தன் உடலில் அவர் போர்த்தி இருப்பதாகவும் இக்பால் மலையாளத்தில் கூறி இருக்கிறார்.
Also Read : ஒரே குடும்பத்தைச்சேர்ந்த 600 பேர் வசிக்கும் ஊர் முதல் பாதாள நகரம் வரை - உலகத்தின் 7 விநோத இடங்கள்..!
வீடியோவில் உற்சகமாக பேசி இருக்கும் கேரளத்தை சேர்ந்த அந்த நபர் பிரேசில், போர்ச்சுகல் அல்லது வேறு எந்த நாட்டிலிருந்தும் ஒரு ரசிகரை பார்க்கும் போதெல்லாம் கால்பந்தின் மீதான கேரளாவின் காதலுக்கு சான்றாக பல போட்டோக்களை காண்பிப்பதாக மகிழ்ச்சியுடன் கூறினார். கேரள மாநிலத்தவர்களுக்கு இருக்கும் கால்பந்து விளையாட்டு மீதான வெறி பற்றிய செய்தி ஒருநாள் லியோனல் மெஸ்ஸி, நெய்மர் ஜூனியர் அல்லது கிறிஸ்டியானோ ரொனால்டோ போன்ற மிக பிரபல வீரர்களை சென்றடையும் என்று நம்புவதாக குறிப்பிட்டுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: FIFA World Cup 2022, Trending, Viral Video