“முதுமையில் இளமை... விரும்பி வரவேற்கும் தாத்தா” - ஊஞ்சலில் துள்ளி விளையாடும் மழலைத்தனம்!

வைரல் வீடியோ

மழலைத் தனம் என்பது குழந்தைகளுக்கு மட்டும் இருக்க வேண்டும் என்றில்லை. இளசுகளுக்கும் உண்டு. முதியவர்களுக்கும் உண்டு. இதனை நிரூபிக்கும் வகையில் தாத்தா ஒருவர் ஊஞ்சலில் துள்ளி விளையாடும் வீடியோ இணையவாசிகளை வெகுவாகக் கவர்ந்துள்ளது.

 • Share this:
  இளமையில் அனைவருக்கும் பிடித்த விளையாட்டு என்றால் அது ஊஞ்சல் விளையாட்டு. பலரும் இதனை விளையாடாமல் தங்கள் மழலை பருவத்தை கடந்திருக்க மாட்டர். இதே விளையாட்டு முதுமையிலும் மீண்டும் பிடித்த விளையாட்டாக மாறி விடுகின்றது. தற்போது இதனை நிரூபிக்கும் வகையில் இணையத்தில் தாத்தா ஒருவர் உற்சாகமாக ஊஞ்சல் ஆடிய வீடியோ ஒன்று வைரலாகி வருகின்றது.

  அதில், பூங்காவில் முதலில் ஊஞ்சல் எப்படி ஆட வேண்டும் என சரியாக தெரியாத தாத்தா ஒருவர் அதில் அமர்ந்து பின்னர் தலைகீழாக கவிழ்ந்து விடுகின்றார். பின்னர் தனக்கு அருகில் இருக்கும் குழந்தைகளை பார்த்து அவர்கள் எவ்விதம் ஊஞ்சல் ஆடுகின்றனர் என பார்த்து கற்றுக்கொள்கின்றார். அதன் பின் ஊஞ்சலில் அமர்ந்து ஆடி விட்டு பின்னர் தலைகீழாக இறங்குகிறார்.

      

  இந்த வயதிலும், வயது ஒரு பொருட்டல்ல எனது மகிழ்வுக்கு என நிரூபித்த தாத்தாவின் செயலுக்கு இணையவாசிகள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். மேலும் இதே போன்று குழந்தைகள் யாரும் முயற்சிக்க வேண்டாம் எனவும் பதிவிட்டுள்ளனர்.

   

      

  இதற்கு முன்னர் இதே போன்று கடந்த ஆண்டு ஆந்திராவை சேர்ந்த ஜெயா என்பவர் தனது பேரன்களுக்கு ஊஞ்சல் ஆட சொல்லிக்கொடுக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி பலரையும் வியப்பில் ஆழ்த்தியது.
  Published by:Sankaravadivoo G
  First published: