ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

மண்ணால் ஓவியங்களை வரைந்து அசத்தும் பெண்மணி - வைரலாகும் வீடியோ!

மண்ணால் ஓவியங்களை வரைந்து அசத்தும் பெண்மணி - வைரலாகும் வீடியோ!

மண்ணால் ஓவியங்களை வரைந்து அசத்தும் பெண்மணி

மண்ணால் ஓவியங்களை வரைந்து அசத்தும் பெண்மணி

ஜூலியா சயீத் தான் மட்டும் வரையாமல், குழந்தைகளுக்கும் இந்த கலையை கற்றுத்தந்து வருகிறார்.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :

ஓவியங்களை வண்ண நிறங்களை பயன்படுத்தி வரைவார்கள். ஆனால் பெண் ஒருவரோ மண்ணை பயன்படுத்தி ஓவியங்களை வரைந்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தி வருகிறார்.

சிரியாவை சேர்ந்த ‘ஜூலியா சயீத்’ என்ற பெண் மணற் சிற்பங்கள் செய்து அசத்தி வருகிறார். இவரது சொந்த ஊர் ராக்கா ஆகும். சிறுவயதில் இருந்தே ஓவியங்களின் மீது தீரா காதலை கொண்டவர். தனது வீட்டில் ஒரு அறை முழுக்க ஓவியங்களை வைத்திருக்கிறார்.ஒ ரு சமயத்தில் சில பிரச்சினை காரணமாக வீட்டை விட்டு வெளியேறும் சூழல் வந்தது.

அப்போது தான் சிறு வயதில் இருந்து பயன்படுத்திய ஓவியங்களையும், அதனை வரைய பயன்படுத்திய பொருட்களையும் விட்டுவிட்டு வந்துவிட்டார். அதன் பிறகு அவரால் ஒரு ஓவிய கருவியை கூட வாங்க பணம் இல்லை. அதனால் தான் வரையும் ஓவியங்களுக்கு வண்ணங்களுக்கு பதிலாக மண்ணை பயன்படுத்தலாம் என்று யோசித்தார். ஆரம்பத்தில் கொஞ்சம் கடினமாக இருந்தாலும், போகப்போக எளிதாக இருந்தது என்று கூறுகிறார் ஜூலியா சயீத் .

இதுகுறித்து விளக்கிய அவர், மண்ணால் ஓவியம் வரைவது எனக்கு பணத்தை மிச்சப்படுத்துகிறது. முதலில் நான் வேறு வழியின்றி பயன்படுத்தினேன். இப்போது எனக்கு ஓவியம் வரைய வண்ணங்கள் இருந்தாலும், எனக்கு மண்ணை பயன்படுத்தி வரைவது தான் பிடிக்கிறது’ என்று ராய்ட்டர்ஸ் நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறினார். ராய்ட்டர்ஸ் நிறுவனத்தின் ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோ வெளியான நிலையில் தற்போது வைரலாகி வருகிறது.

ஜூலியா சயீத் தான் மட்டும் வரையாமல், குழந்தைகளுக்கும் இந்த கலையை கற்றுத்தந்து வருகிறார். ஒவ்வொரு கலைஞரும் தங்கள் ஓவியத்தின் வெவ்வேறு அம்சங்களை வெளிக்கொண்டு வர பல்வேறு பொருட்களை பயன்படுத்துகின்றனர். சமீபத்தில் சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளையொட்டி, 60 கைவினைஞர்கள் கொண்ட குழு அரிசி, கோதுமை போன்ற தானியங்களைப் பயன்படுத்தி சுவாமி விவேகானந்தரின் 60 சதுர அடி உருவப்படத்தை உருவாக்கியுள்ளது.

Also read... தனது அன்பு மனைவியின் ஆசையை நிறைவேற்ற சுழலும் வீட்டை உருவாக்கிய கணவர்!

இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி ஏபிஜே அப்துல் கலாம், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பல பிரமுகர்களின் உருவப்படங்களை இதே பாணியில் உருவாக்கியுள்ளார் சதீஷ் குர்ஜார். பிரதமர் மோடியின் 20 ஆண்டு மக்கள் பணியை போற்றும் விதமாக 90 திட்டங்களை உள்ளடக்கிய பிரமாண்ட ஓவியத்தை, 60 மணி நேரத்தில் எட்டு மாணவர்கள் வரைந்தனர். இந்த ஓவியம் வரைவதற்கு 45 ஆயிரம் கலவை பேப்பர் கூழ், 30 கிலோ பசை மற்றும் 3 கிலோ வண்ண பெயின்ட் தேவைப்பட்டது.

அர்ஜென்டினா கலைஞர் லியாண்ட்ரோ கிரானடோ என்பவர், சில வருடங்களுக்கு முன்பு தனது நாசி வழியாக வண்ணப்பூச்சுகளை வரவைத்து, தனது கண்ணீர் மூலம் வெளியேற்றி உலகை ஆச்சரியப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Painting