Home /News /trend /

மழையில் இந்த குடையை பயன்படுத்த முடியாது... பிரபல நிறுவனம் கொடுத்த ஷாக்

மழையில் இந்த குடையை பயன்படுத்த முடியாது... பிரபல நிறுவனம் கொடுத்த ஷாக்

பிராண்டுகள் சேர்ந்து வடிவமைத்த குடை

பிராண்டுகள் சேர்ந்து வடிவமைத்த குடை

Trending | அடுத்த மாதம் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்னதாக, Gucci x Adidas குடை ஆன்லைனில் ப்ரமோட் செய்யப்பட்டு வருகிறது. இந்த குடையின் விலையை கேட்டால் ஆடி போய் விடுவீர்கள்.

மழையில் செல்ல 2 காதலர்களுக்கு குடை தேவையில்லை என்பது ஒரு வேடிக்கையான பழமொழி. உலகப் புகழ்பெற்ற பிராண்டுகளான லக்ஸரி ஃபேஷன் நிறுவனமான Gucci-யும், ஸ்போர்ட்ஸ் வியர் நிறுவனமான Adidas AG-யும் இணைந்து இந்த பழமொழியை உண்மையாக்கும் வகையில் ஒரு புதிய டைப் குடையை வடிவமைத்துள்ளது சோஷியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.

ஆம், இந்த 2 ஜாம்பவான் நிறுவனங்கள் இணைந்து மழை நீரை தடுக்காத அதாவது வாட்டர் ப்ரூஃப் இல்லாத குடையை வடிவமைத்துள்ளன. இந்த குடை சூரிய கதிர்களில் இருந்து பயன்படுத்துபவரை காப்பாற்றுவதற்காக மட்டுமே தயாரிக்கப்பட்டிருப்பதாக குறிப்பிட்டுள்ள நெட்டிசன்கள், இதை "சூரிய குடை" (sun umbrella) என்று குறிப்பிட்டு உள்ளனர். மழையை கூட தடுக்காத இந்த குடையின் விலையை கேட்டால் ஆடி போய் விடுவீர்கள்.

உலகின் முன்னணி பிராண்டுகளான Gucci மற்றும் Adidas AG ஆகியவை இணைந்து உருவாக்கி உள்ள இந்த வித்தியாசமான குடையின் விலை இந்திய மதிப்பில் வெறும் ரூ.1.27 லட்சம் தான். என்ன விளையாடுகிறீர்களா? வெயிலில் கூட அலையலாம், மழையில் எப்படியா அலைவது.. குடையே பெரும்பாலும் மழைக்காக தானே பயன்டுத்தப்படுகிறது. தண்ணீரை தடுக்காத ஒரு குடையின் விலை இவ்வளவா என்று நீங்கள் கொந்தளிப்பது எங்கள் காதுகளில் விழாமல் இல்லை.. உங்களை போலவே தான் பல லட்சக்கணக்கான நெட்டிசன்கள் இந்த தயாரிப்பை பற்றி சோஷியல் மீடியாக்களில் விமர்சித்து வருகிறார்கள்.



ஆனால் Gucci-யின் அதிகாரப்பூர்வ வெப்சைட்டில் உள்ள குறிப்பிட்ட குடைக்கு கொடுக்கப்பட்டுள்ள டிஸ்கிரிப்ஷன் படி " இது வாட்டர் ப்ரூஃப் இல்லை, இது சூரிய பாதுகாப்பு (sun protection) அல்லது ஃபேஷன் நோக்கங்களுக்கான பயன்பாட்டிற்கானது (Fashion & decorative use)" என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. சூரிய ஒளியில் இருந்து மட்டுமே தற்காத்து கொள்வதற்கான இந்த குடையை Gucci மற்றும் Adidas AG நிறுவனங்கள் அடுத்த மாதம் சீனாவில் 11,100 யுவான் அதாவது இந்திய மதிப்பில் தோராயமாக ரூ.1,27,491-க்கு அறிமுகப்படுத்த உள்ளன.

அடுத்த மாதம் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்னதாக, Gucci x Adidas குடை ஆன்லைனில் ப்ரமோட் செய்யப்பட்டு வருகிறது. இருப்பினும் மழைக்கு பயன்படாத இந்த வித்தியாசமான குடையை வடிவமைத்ததோடும் மட்டுமின்றி மிக அதிக விலைக்கு விற்க உள்ள Gucci மற்றும் Adidas AG ஆகிய இந்த இரண்டு பிராண்டுகளுக்கு எதிரான விமர்சனங்கள் சீனாவின் சோஷியல் மீடியா பிளாட்ஃபார்ம்களில் பரவலாக ஷேர் செய்யப்பட்டு வருகின்றன.

மேலும் சீனாவின் மிக பிரபலமான சோஷியல் மீடியாவான Weibo-வில் நீரை தடுக்காத இந்த குடைக்கு எதிரான ஹேஷ்டேக் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது மேலும்140 மில்லியனுக்கும் அதிகமான வியூஸ்களையும் பெற்று உள்ளது. இத்தகைய தயாரிப்புகள் "சாதாரண மக்களுக்காக" தயாரிக்கப்படுவதில்லை என்ற விமர்சனமும் சீன நெட்டிசன்களால் கடுமையாக முன்வைக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

 
Published by:Elakiya J
First published:

Tags: Trending

அடுத்த செய்தி