Home /News /trend /

இந்த விசித்திரமான கடல் உணவின் விலை இவ்வளவா? மிரள வைத்த வைரல் போட்டோ! 

இந்த விசித்திரமான கடல் உணவின் விலை இவ்வளவா? மிரள வைத்த வைரல் போட்டோ! 

காட்சி படம்

காட்சி படம்

பீச்சில் வாக்கிங் சென்றுகொண்டிருந்த ஒரு பெண் எதிர்பாராத விதமாக விசித்திரமான உயிரினத்தின் மீது கால் வைத்துள்ளார். அதை புகைப்படமும் எடுத்து சமூக வலைதளங்களிலும் வெளியிட்டுள்ளார். அந்த் உயிரினத்தை பற்றிய சுவாரஸ்யமான தகவல்கலையும் நெட்டிசன்கள் பகிர்ந்து வருகின்றனர்.

மேலும் படிக்கவும் ...
இங்கிலாந்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கடற்கரையில் கண்டறிந்த விசித்திரமான உயிரினம் சுவையான மற்றும் விலையுயர்ந்த கடல் உணவு என்ற ஆச்சர்யமான உண்மை வெளிவந்துள்ளது.

பூமி நமக்கு மட்டும் சொந்தமானது கிடையாது, பிரபஞ்சத்தில் இருக்கும் பல உயிர்களுக்கும் இடமளிக்க கூடியது என்பதை உணர்த்தும் விதமாக பல வினோத செயல்கள் அவ்வப்போது அரங்கேறி வருகின்றன. கடற்கரைகள், ஏரிகள், பனிப்பாறைகள், வனப்பகுதிகள் ஆகிய இடங்களில் அவ்வப்போது கிடைக்கும் விசித்திரமான உயிரினங்களின் சடலங்களும், மக்கள் அவ்வப்போது பறக்கும் தட்டுக்களை பார்த்ததாக கூறும் செய்திகளும் ஏலியன்கள் இருப்பதற்கான சாத்தியகூறுகளை உணர்த்துகின்றன.

இதனிடையே இங்கிலாந்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கடற்கரையில் கண்டுபிடித்த விசித்திரமான உயிரினம் பற்றிய செய்திகள் சோசியல் மீடியாவில் பரபரப்பைக் கூட்டியுள்ளது. ஷெல் லாங்மோர் என்ற பெண்மணி, இங்கிலாந்தின் க்வினெட் கடற்கரைக்குச் சென்றிருந்த போது, பார்க்க ஏலியன் போல் தோற்றம் கொண்ட விசித்திரமான உயிரினத்தை பார்த்துள்ளார்.

பீச்சில் வாக்கிங் சென்றுகொண்டிருந்த அவர், எதிர்பாராத விதமாக அந்த உயிரினத்தின் மீது கால் வைத்துள்ளார். அப்போது தடுமாறி கீழே விழுந்தவர், ஜெல்லி மீன் போல் வளவளப்பாக கிடந்த விசித்திரமான உயிரினத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். அந்த உயிரினம் பற்றி சரிவர தெரியாததால் உடனே தனது செல்போனை எடுத்து புகைப்படம் எடுத்த ஷெல், அதனை முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அத்துடன் "இதனை நான் கண்டுபிடிக்கும் வரை அனைத்து உள்ளூர் வனவிலங்குகளையும் பார்த்துவிட்டேன் என்று நினைத்துக்கொண்டிருந்தேன் - இது ஒரு பெரிய அதிர்ச்சி! இது ஒரு விசித்திரமான தோற்றமுடைய உயிரினமாக இருந்தது, ஆனால் மிகவும் அழகாகவும் இருந்தது” என பதிவிட்டுள்ளார். இதனை நெட்டிசன்கள் பலரும் சோசியல் மீடியாவில் வேகமாக பகிர்ந்து வருகின்றனர். விசித்திரமான தோற்றம் கொண்ட உயிரினத்தை நெட்டிசன்கள் பலரும் ‘ஷேடோ மான்ஸ்டர்’ என செல்லப்பெயர் வைத்து அழைத்து வருகின்றனர்.

also read : இவ்ளோ தைரியமா! ஏவுகணைக்கு அருகில் நின்று ஷேவ் செய்யும் நபர்.. வைரல் வீடியோ

ஆனால் வல்லுநர்கள் இதை ஒரு அரிய மற்றும் மிகவும் விலையுயர்ந்த சுவையான கூஸ்னெக் பார்னாக்கிள்ஸ் என்று அடையாளம் கண்டுள்ளனர். கூஸ்னெக் பார்னாக்கிள்ஸ் ஸ்பெயினில் Costa da Morte அல்லது Coast of Death பகுதிகளில் அமைந்துள்ள நீருக்கடியில் பாறைகள் மற்றும் பிளவுகளில் இருந்து சேகரிக்கப்படுகிறது. அவை அரிதானவை மட்டுமல்ல, இந்த உயிரினங்களை கொண்டு வருவதில் பெரும் ஆபத்தும் உள்ளது.

இதனை சேகரிக்கும் நபர்கள் பெர்செபீரோஸ் என அழைக்கப்படுகிறார்கள். மிகப்பெரிய அலைகளில் மூழ்கி பாறை இடுக்குகளில் மறைந்திருக்கும் கடல்வாழ் உயிரினத்தை சேகரித்து வருகின்றனர். இவ்வளவு ரிஸ்க் இருப்பதால் இந்த சுவையான கடல் உயிரினத்தின் விலையும் காஸ்ட்லியாகவே உள்ளது.ஒரு கிலோகிராம் கூஸ்னெக் பார்னாக்கிள்ஸின் ஏற்றுமதி விலை 300 பவுண்ட்கள் ஆகும். அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.29,000 ஆகும். இப்படியொரு விசித்திரமான தோற்றம் கொண்ட கடல் உயிரினம் இவ்வளவு விலையுயர்ந்த உணவா என நெட்டிசன்கள் பலரும் ஆச்சர்யம் அடைந்துள்ளனர்.

 
Published by:Tamilmalar Natarajan
First published:

Tags: Viral News

அடுத்த செய்தி