இங்கிலாந்தில் வசிக்கும் காரா லூயிஸ் (Cara Louise) ஒரு பெண் வீட்டுக்குள் காவல்துறையினர் கூட்டம் கூட்டமாக நுழைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். காரணம் என்னவென்றால் காராவின் வீட்டு பின்புறம் ஒருவரிடன் சடலம் பிளாஸ்டிக் கவரால் மூடப்பட்டு இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதனை பார்த்த பக்கத்து வீட்டுக்காரர்கள் காரா யாரையோ கொலை செய்து உடலை கவரால் சுற்றி அங்கே வைத்திருக்கலாம் என்று சந்தேகித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்திருக்கின்றனர்.
இதனையடுத்து காவல்துறையினர் அவரது வீட்டை சோதனையிட வந்திருக்கின்றனர். தன் குழந்தைகளை பள்ளியில் இருந்து அழைத்து வந்த காரா, தன் வீட்டிக்கு அருகே காவல்துறையினர் வாகனம் இருப்பதையும் அதன் அருகே அவரது பக்கத்துக்கு வீட்டார் இருப்பதையும் பார்த்துள்ளார். அவரது பக்கதுக்கு வீட்டுக்காரர்களிடம், அப்படி என்ன செய்தீர்கள் என்று காமெடியாக கேட்டுள்ளார். அதன் பிறகே அவருக்கு தனது வீட்டுக்குத் தான் காவல்துறையினர் வந்துள்ளது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அதிர்ச்சியடைந்த அவருக்கு பின்னர் தான் விவரம் புரிந்திருக்கிறது.
கடந்த வருடம் அவரது குழந்தைகளுக்கு ஹாலோவீன் பார்ட்டி (Halloween party)க்காக போலியான சடலத்தை வடிவமைத்திருக்கிறார்கள். பின்பு தோட்ட பராமரிப்பு பணிக்காக அதனை வெளியில் வைத்த அவர், அதனை மீண்டும் உள்ளே எடுத்து வைக்க மறந்திருக்கிறார். அது தான் இவ்வளவு பிரச்சனைகளுக்கும் காரணம். இதுகுறித்து காரா காவல்துறையிடம் விளக்கி அவர்களை சமாதானப்படுத்தியிருக்கிறார். மேலும் காவல்துறையினரிடம் காராவின் மகன், அந்த போலி சடலத்தை அகற்ற விரும்பவில்லை என்று மேலும் பிரச்சனையை கிளப்பியிருக்கிறார்.
இதில் உச்சகட்டமாக காரா , சடலத்துக்கு கால் இவ்வளவு சின்னதாகவா இருக்கும் என்று காவல்துறையினர் கேள்வி எழுப்ப, அதற்கு அவர்கள் நீங்கள் பாதியாக அறுத்திருப்பீர்கள் என்று அவர்களும் பதிலுக்கு கிண்டலாக தெரிவித்திருக்கின்றனர். நல்லவேளை இதனை காவல்துறையினர் நகைச்சுவையாக எடுத்துக்கொண்டனர் என்று காரா நிம்மதி அடைந்திருக்கிறார். இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஒரு பக்கம் காவல்துறையினரின் துரித நடவடிக்கையை எண்ணி பாராட்டி வருகின்றனர்.
Also read... ட்விட்டரில் புதிரான புகைப்படத்தை பகிர்ந்த தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா!
இருப்பினும் ஒரு வார்த்தை அந்த பெண்ணிடம் அருகில் வசிப்பவர்கள் அது குறித்து கேட்டிருந்தால் இவ்வளவு பெரிய களேபரத்திற்கு இடம் இல்லாமல் போயிருக்கும் என்பது பலரது கருத்தாக இருக்கிறது.
பொதுவாக நம் நாடுகளில் நகரங்களை தவிர வீட்டருகில் வசிப்பவர்களிடம் நல்ல நட்பில் இருப்போம், அதனால் அவர்கள் வீடுகளில் என்ன நடந்தாலும் தெரிந்து விடும். அதனால் இந்த மாதிரி சம்பவங்கள் நம் நாட்டில் நடக்கும் வாய்யு குறைவு. மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வரும் இந்த காலகட்டத்தில் இந்த மாதிரி சம்பவங்கள் அவர்களது மன அழுத்தத்தை குறைக்கும்.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Dead body