• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • சிலந்தி கடித்ததால் ஒரே வாரத்தில் 3 முறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண் - நடந்தது என்ன?

சிலந்தி கடித்ததால் ஒரே வாரத்தில் 3 முறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண் - நடந்தது என்ன?

மாதிரி படம்

மாதிரி படம்

சிலந்தி கடித்தால் அதிக தொற்று உடலில் ஏற்பட்டதால் உடனே அவசர சிகிச்சை சேவையை அழைத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

  • Share this:
சாதாரணமாக எதாவது சிறிய பூச்சி நம்மை கடித்த விட்டாலே நாம் மிகவும் பயந்து விடுவோம். அதனால் நமக்கு எதாவது ஆகிவிடுமோ, உடலுக்கு அதன் விஷம் பரவி விடுமோ, இதனால் மயக்கம் வருமா போன்ற உள்ளுணர்வுகள் நம்மை மருத்துவமனையை நோக்கி செல்ல வைக்கும். இதே நிகழ்வு ஒரே வாரத்தில் தொடர்ந்து 3 முறை நடந்து வந்தால் என்னவாகும் என்பதை சற்று நினைத்து பாருங்கள். இப்படிப்பட்ட ஒரு திகில் சம்பவம் தான் லண்டனை சேர்ந்த பெண் ஒருவருக்கு நடந்துள்ளது.

ஜோ கென்யோன் என்கிற 34 வயது பெண்மணி லண்டனில் வசித்து வருகிறார். அங்கு இவர் ரேடியோ புரொடியூசராக வேலை செய்து வருகிறார். வழக்கம் போல் காலையில் எழுந்து கழிவறைக்கு சென்றுள்ளார். அப்போது தனது தொடையில் எதோ சிவப்பாக வீக்கம் போன்று தென்பட்டுள்ளது. அதை தொட்டதும் அவருக்கு அதிக வலி ஏற்பட்டது. பூச்சி எதாவது கடித்திருக்கும் என்று நினைத்துக் கொண்டு உடனே மருத்துவமனைக்கு வலியுடன் சென்றுள்ளார்.

பூச்சி கடித்த இடத்தை பரிசோதித்த மருத்துவர்கள், சிலந்தி கடித்ததால் தான் இப்படி வலிக்கிறது என்று கூறியுள்ளனர். பிறகு அதற்கான மருந்துகளை தந்து அவருக்கு தேவையான சிகிச்சைகளை மருத்துவர்கள் செய்துள்ளனர். கென்யோனும் சிறிது நேரத்திற்கு பிறகு வீடு திரும்பி உள்ளார். இதே போன்ற நிகழ்வு அவருக்கு அடுத்தடுத்து நடக்க தொடங்கி உள்ளது.

அதே வாரத்தில் இரண்டாவது முறையாக அவரை சிலந்தி கடித்தது. இதை நினைத்து அவர் மிகவும் அதிர்ச்சியில் இருந்தார். மூன்றாவது முறையாக சிலந்தி கடித்ததும் மருத்துவமனைக்கு செல்ல முயற்சித்த போது அவரால் நடக்க முடியவில்லை. அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள், இது போன்று சிலந்தி கடித்தால் சில சமயங்களில் உங்களுக்கு நோய் தொற்று ஏற்பட்டு தசைகள் சிதைவடைந்து நீங்கள் இறக்க கூட நேரிடலாம் என்று கூறியுள்ளனர்.

இதை கேட்ட அப்பெண் அதிர்ந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து பேசிய அந்த பெண், "ஒரு சாதாரண சிலந்தி கடித்ததால் என் உயிருக்கே ஆபத்தாகி விடுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர், இது எனக்கு மிகுந்த பயத்தை தருகிறது, எனது மனநிலையை எப்படி விவரிப்பது என்று எனக்கு தெரியவில்லை" என அதிக வருத்தத்துடன் கென்யோன் தெரிவித்துள்ளார். மீண்டும் இதே நிகழ்வு மூன்றாவது முறையாக ஒரே வாரத்தில் அவருக்கு நடந்தது.

Also read... அமெரிக்க பெண்ணுக்கு வித்தியாசமான நோய் - மருத்துவர்கள் குழப்பம்!

சிலந்தி கடித்தால் அதிக தொற்று உடலில் ஏற்பட்டதால் உடனே அவசர சிகிச்சை சேவையை அழைத்து மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டார். சிலந்தி கடித்த இடத்தை முற்றிலுமாக சுத்தம் செய்து அதற்கான மருந்துகளை அந்த இடத்தில் தடவி சிகிச்சை செய்துள்ளனர். இவருக்கு ஒரே வாரத்தில் 3 முறை இப்படி சிலந்தி கடித்ததால் அதிக தொற்று உடலில் ஏற்பட்டுள்ளது. இதனால் தான் இதன் பாதிப்பு அதிகம் இருந்தது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இந்த நிகழ்வு நடந்து சில மாதங்கள் ஆன பிறகும் கென்யோனுக்கு சிலந்தி கடித்ததால் ஏற்பட்ட அந்த தழும்பு மாறாமல் அப்படியே இருந்து வருகிறது. இதனால் அவர் தினமும் தனது கழிவறையை சுத்தம் செய்து வருகிறார். நாம் இருக்கும் இடத்தை சுத்தமாக வைத்து கொண்டாலே எந்தவித பாதிப்புகளும் நமக்கு ஏற்படாது என்பதை கென்யோனுக்கு நடந்த இந்த சம்பவம் நமக்கு உணர்த்துகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: