முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / ஆபீஸ் பார்ட்டிக்கு அழைப்பு விடுக்காததால் ரூ.72 லட்சம் நஷ்ட ஈடு வழங்கிய நிறுவனம்!

ஆபீஸ் பார்ட்டிக்கு அழைப்பு விடுக்காததால் ரூ.72 லட்சம் நஷ்ட ஈடு வழங்கிய நிறுவனம்!

மாதிரி படம்

மாதிரி படம்

Trends | கேசினோவில் அதிக காலம் பணியாற்றிய பணியாளராக இருந்தும் அவருக்கு பதவி உயர்வு வாய்ப்புகள் போன்ற அனைத்தும் மறுக்கப்பட்டன.

  • Last Updated :

இங்கிலாந்தில் உள்ள வேலைவாய்ப்பு நிறுவனம் அலுவலக விருந்துக்கு அழைக்கப்படாத பெண் ஊழியர் ஒருவருக்கு ரூ.72 லட்சம் இழப்பீடு வழங்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. 51 வயதான ரீட்டா லெஹர் என்பவர் ஆஸ்பர் கேசினோவின்பணிபுரியும் ஊழியர் ஆவார். இவரை பணி இடத்தில் நடத்தப்படும் பானங்களுக்கான காக்டெய்ல் விருந்துக்கு அழைக்கப்படாததால் அதுகுறித்து புகார் தெரிவித்துள்ளார். கலப்பு இனத்தைச் சேர்ந்த லெஹர், அவரது இனம் மற்றும் வயது காரணமாக அவர் விலக்கப்பட்டதாகக் குற்றம் சாட்டி உள்ளார்.

கலப்பு இனம் என்பதற்காகவே அவரை ஆபீஸ் பார்ட்டிக்கு அழைக்கவில்லை என்பதை உணர்ந்து லெஹர் இந்த புகாரை எழுப்பி உள்ளார். லெஹருக்கு பக்கபலமாக, வேலைவாய்ப்பு நீதிபதி சாரா மூர் தலைமையிலான தீர்ப்பாயம், லெஹரை பணி இடத்தில் இது போன்று விலக்குவது சரியானதல்ல என்பதை குறிப்பிட்டுள்ளார். மேலும் இது 'வேலையில் இது ஒரு தீங்கான செயல்' என்பதையும் அவர் கூறியுள்ளார். இப்படி ஒருவரை தனிமைப்படுத்துவதால், அவர் 'தனது சக ஊழியர்களுடன் நட்பை ஏற்படுத்தும் வாய்ப்பை இழக்க நேரிடும்' என்றும் நீதிபதி அமர்வில் தெரிவித்துள்ளார்.

ஒரு ஊழியரை மட்டும் அவரின் இனத்தின் காரணத்தால் இது போன்று தனிமைப்படுத்துவது எந்த வகையிலும் நியாயமற்றது. இது ஒருவருக்கு மிகுந்த வேதனையையும், மன உளைச்சலையும் உருவாக்கும். லெஹருக்கு நடந்துள்ள இந்த செயல் கண்டிக்கத்தக்கதாக உள்ளது என்றும் அவர்கள் கூறியுள்ளனர். இளையவர்களுக்கு அளிக்கப்பட்ட பயிற்சி வகுப்பு மறுக்கப்பட்ட பின்னர் லெஹர் மீதும் பாகுபாடு காட்டப்பட்டது கண்டறியப்பட்டது. இருப்பினும், 10 ஆண்டுகளுக்கும் மேலாக கேசினோவில் பணிபுரிந்த பிறகும் லெஹர் அதிலிருந்து வெளியேறினார்.

கேசினோவில் அதிக காலம் பணியாற்றிய பணியாளராக இருந்தும் அவருக்கு பதவி உயர்வு வாய்ப்புகள் போன்ற அனைத்தும் மறுக்கப்பட்டன. 2011 ஆம் ஆண்டு கேசினோவில் பணிபுரியத் தொடங்கிய ரீட்டா லெஹர், தன்னை விடவும் பணியில் குறைந்த அனுபவம் பெற்ற பலர் கருப்பினத்தவர் அல்லாத அல்லது கலப்பு பாரம்பரியம் அல்லாதவர்கள் என்று பல ஆண்டுகளாக பதவி உயர்வு பெற்றுள்ளதாக குற்றம் சாட்டினார்.

இதற்கிடையில், பதவி உயர்வுக்கான அவரது விண்ணப்பங்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டன என்பதையும் லெஹர் குறிப்பிட்டார். நிறுவனத்தின் தலைமைக்கு அவர்மீது பாகுபாடு காட்டப்படுவது குறித்த பிரச்சினையை எழுப்பியபோது, ​​அவர் மற்ற ஊழியர்களிடமிருந்து பிரிக்கப்பட்டார். ஆதாரங்களை முன்வைக்காமல் மேலும் ஏதேனும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவரது தலைமை இடத்தில் இருந்து எச்சரித்துள்ளனர்.

top videos

    பணியிடத்தில் பாரபட்சம் காட்டப்படுவதாக புகார் கூறியதால் லெஹர் பார்ட்டிக்கு அழைக்கப்படவில்லை என்று தீர்ப்பாயம் முடிவு செய்தது. அதன்படி, "அவர்மீது பாகுபாடு காட்டியதால் லெஹர் புகார் செய்துள்ளார். அதனால் அவரை மற்ற விஷயங்களில் இருந்து விலக்கி வைத்துள்ளனர் என்று நாங்கள் அனைவரும் முடிவு செய்கிறோம். பணி இடத்தில் பணிபுரியும் உறவுகள் ஒப்பீட்டளவில் இணக்கமாக இருந்த போதிலும், பாகுபாடு பற்றி புகார் செய்த ஒருவருடன் பழகுவதற்கு அந்த குழு விரும்பவில்லை. புகாரின் மீது அவர்களின் அதிருப்தியை உணர இது ஒரு வழியாகும், ”என்று நீதிபதி சாரா மூர் கூறினார். இதை கண்டிக்கும் விதமாக லெஹருக்கு இழப்பீடு வழங்குமாறு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

    First published:

    Tags: Trends, Viral