Home /News /trend /

இங்கிலாந்து டவுன் மக்களுக்கு லாட்டரியில் அடித்த ஜாக்பாட்- பரிசுத்தொகையை எப்படி பகிர்ந்து கொண்டார்கள் தெரியுமா?

இங்கிலாந்து டவுன் மக்களுக்கு லாட்டரியில் அடித்த ஜாக்பாட்- பரிசுத்தொகையை எப்படி பகிர்ந்து கொண்டார்கள் தெரியுமா?

ஸ்டீல்-வொர்க்கராக பணியாற்றி ஓய்வு பெற்ற முதியவர் ஓவன் இவ்வளவு பெரிய தொகையை வெற்றி பெறுவேன் என்று நினைத்து பார்க்கவில்லை, மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்றும் பணத்தை வைத்துக்கொண்டு ஒரு உலக சுற்றுலா செல்ல வேண்டும் என்றும் புதிய கார் ஒன்று வாங்க வேண்டும் என்றும் திட்டம் இருப்பதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

மேலும் படிக்கவும் ...
ஒரு கிராமம் அல்லது சிறுநகரமோ ஒற்றுமையாக இருப்பது என்பது மிகவும் அரிதான விஷயம். பெரும்பான்மையானவர்கள் ஒற்றுமையாக இருக்கும் பொழுது ஒரு சிலருக்கு கருத்து வேறுபாடுகள் ஏற்படும். ஆனால் இங்கிலாந்தில் இருக்கும் ஒரு டவுனைச் சேர்ந்தவர்கள் அஞ்சல்கோடு ஜாக்பாட்டில் வெற்றி பெற்று இருக்கிறார்கள். UK வின் ஒரு நகரத்தில் வசிக்கும் 400க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்ட பீப்பிள் போஸ்ட் கோடு லாட்டரியில் ஜாக்பாட் தொகையான 36 கோடி ரூபாயை வென்றிருக்கிறார்கள்.வெற்றி பெற்ற தொகையை அனைவரும் சமமாக பகிர்ந்துள்ளார்கள் என்ற செய்தி வெளியாகி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இதைப் பற்றிய முழு விவரங்களை இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்...

இங்கிலாந்தில் தெற்கு வால்ஷ் பகுதியில் இருக்கும் ரைம்னி என்று ஊரில் வசிப்பவர்கள் £3.7 மில்லியன் லாட்டரியை வென்று இருக்கிறார்கள். பீப்பிள் போஸ்ட்கோட் லாட்டரியின் வலைத்தளத்தில் இதை பற்றிய விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இது சந்தா அடிப்படையிலான லாட்டரி வலைத்தளம் ஆகும். ஊர்மக்கள் தங்களுடைய அஞ்சல் கோடு பயன்படுத்தி கலந்துகொள்ளலாம்.

பலரும் இந்த வலைத்தளத்தில் சந்தா செலுத்தி பங்கேற்பாளராக தங்களை பதிவு செய்து கொண்டு டிக்கெட்டை வாங்கி உள்ளனர். வெற்றிபெற்ற தொகை அனைவருக்கும் சரிசமமாக வழங்கப்படாது. ஒரு நபர் எவ்வளவு டிக்கெட்டுகளை வாங்கியுள்ளாரோ அதற்கு ஏற்றார் போல டிக்கெட்டுகளின் மதிப்பிற்கு அடிப்படையில் தொகை பிரித்து வழங்கப்படும். Pen-Y-Dreஐ சேர்ந்த 9 நபர்கள் வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டனர். இரண்டு லாட்டரி டிக்கெட்களுடன் விளையாடிய எட்வர்ட் ஓவன் என்ற 70 வயது முதியவர் £3,70,000 பரிசுத் தொகையை வென்றுள்ளார்.

ஸ்டீல்-வொர்க்கராக பணியாற்றி ஓய்வு பெற்ற முதியவர் ஓவன் இவ்வளவு பெரிய தொகையை வெற்றி பெறுவேன் என்று நினைத்து பார்க்கவில்லை, மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்றும் பணத்தை வைத்துக்கொண்டு ஒரு உலக சுற்றுலா செல்ல வேண்டும் என்றும் புதிய கார் ஒன்று வாங்க வேண்டும் என்றும் திட்டம் இருப்பதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

ஒன்பது நபர்களில் மீதமுள்ள எட்டு நபர்கள் ஆளுக்கு ஒரு டிக்கெட் வைத்து விளையாடி இருக்கிறார்கள். அவர்களுக்கு தலா £1,85,000 லாட்டரி தொகை கிடைத்திருக்கிறது. லாட்டரி பரிசு பெற்றவர்களில் ஒருவரான 43 வயது லீசா இவ்வளவு பெரிய தொகையை வைத்துக் கொண்டு தனக்கு என்ன செய்ய வேண்டுமென்று தெரியவில்லை மிகவும் குழப்பமாக இருக்கிறது என்று மகிழ்ச்சியுடன் கூறினார். பணத்தை வைத்துக்கொண்டு ஒரு பயணம் செல்ல திட்டமிட்டிருப்பதாகவும் மாலத்தீவுக்கு செல்ல விருப்பம் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். லிசா ஒரு சாக்லேட் ஆலையில் க்வாலிட்டி கண்ட்ரோல் அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.

Also see... சைபர் குற்றங்களில் இந்தியாவின் இடம் பற்றிய அதிர்ச்சி தகவல்!

பெரிய பங்களா ஒன்றை வாங்க வேண்டும், மிகப்பெரிய பார்ட்டி ஒன்றை நடத்த வேண்டுமென்று ஜாக்பாட் வெற்றி பெற்ற ஒவ்வொரு நபரும் தங்கள் ஆசைகளை வெளிப்படுத்தினர். இந்த ஒன்பது நபர்களைத் தவிர, லாட்டரியில் பங்கேற்ற மீதமுள்ள 426 நபர்களுக்கு £3,894 முதல் £11,682 வரை பரிசுத்தொகை வழங்கப்பட்டது.
Published by:Vaijayanthi S
First published:

Tags: England

அடுத்த செய்தி