Home /News /trend /

விரும்பி சாப்பிட்ட 'பகோடா' வையே குழந்தைக்கு பெயராக வைத்த இங்கிலாந்து தம்பதி!

விரும்பி சாப்பிட்ட 'பகோடா' வையே குழந்தைக்கு பெயராக வைத்த இங்கிலாந்து தம்பதி!

பகோரா

பகோரா

பிரசவ காலத்தில் அந்த குழந்தையின் தாய் பகோராவை விரும்பி அதிகம் உண்டுள்ளார். இதனால் தங்கள் குழந்தைக்கு அதையே பெயராய் வைக்க முடிவு செய்துள்ளனர்,

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai |
ஒரு நபர் தனது குழந்தைக்கு பிரபலமான நபர் அல்லது ஒரு இடத்தின் பெயரை சூட்டினார் என்று நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். ஏன் நம் ஊரில் அமைதி, நிம்மதி, போதும் பொண்ணு, முதலமைச்சர் என்று கூட பெயர் வைத்துப் பார்த்திருப்போம்.

ஆனால், பெற்றோர்கள் தங்கள் குழந்தைக்கு அவர்கள் விரும்பிய உணவுப் பொருட்களின் பெயரை வைத்ததை நீங்கள் இதுவரை கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இங்கிலாந்தில் உள்ள ஒரு குழந்தைக்கு பிரபல இந்திய உணவின் பெயர்வைக்கப்பட்டுள்ளது!

கேப்டன் டேபிள் அயர்லாந்தில் உள்ள நியூடவுன்பேயில் உள்ள ஒரு பிரபலமான உணவகம். சமீபத்தில், உணவகம் சமூக ஊடகங்களில் ஒரு மகிழ்ச்சியான பதிவை பகிர்ந்து கொண்டது. தங்கள் உணவகத்திற்கு அடிக்கடி வரும் ஒரு தம்பதியினர் இப்போது தங்கள் உணவகத்தில் உள்ள ஒரு உணவின் பெயரை பிறந்த குழந்தைக்குப் பெயராக வைத்துள்ளனர் என்று அவர்கள் பேஸ்புக்கில் அறிவித்தனர்.

சாந்தனு நாராயண் முதல் லக்ஷ்மன் நரசிம்மன் வரை..உலகின் டாப் நிறுவனங்களில் CEO-ஆக இருக்கும் இந்திய வம்சாவளிகளின் லிஸ்ட்!

இது என்ன இங்கிலாந்து உணவின் பெயராக தானே இருக்கும் என்று நீங்கள் யோசித்தால், அது தவறு. அது ஒரு இந்திய உணவின் பெயர், 'பகோரா' என்பதே. மழைக்காலங்களில் தேநீருடன் நாம் ரசித்து உண்ணும் அதே பக்கோடா என்று சொல்லப்படும் பகோரா தான்.

பிரசவ காலத்தில் அந்த குழந்தையின் தாய் பகோராவை விரும்பி அதிகம் உண்டுள்ளார். இதனால் தங்கள் குழந்தைக்கு அதையே பெயராய் வைக்க முடிவு செய்துள்ளனர்,

உணவகம் புதிதாகப் பிறந்த குழந்தையின் புகைப்படத்தைப் பகிர்ந்து, "பகோராவை உலகிற்கு வரவேற்கிறோம்! உன்னைச் சந்திக்க நாங்கள் காத்திருக்கிறோம்” என்று செய்தி வெளியிட்டுள்ளது. அதோடு 'பகோரா' இருக்கும் சில உணவுகளின் பெயர்களைக் கொண்ட அந்த உணவகத்தின் பில் ரசீதின் புகைப்படத்தையும் உணவகம் பகிர்ந்துள்ளது!



பல நெட்டிசன்கள் தங்களது அன்பான வாழ்த்துகளை தெரிவித்தனர். சில பயனர்கள் தங்கள் நகைச்சுவையான நக்கல் பதிவுகளையும் உள்ளிட்டுள்ளனர். அதில் ஒருவர் , "இது எனது இரண்டு டீன்கள் - சிக்கன் மற்றும் டிக்கா" என்று பதிவிட்டுள்ளார்.

மற்றொருவர் தனது குழந்தையின் புகைப்படத்தைப் பகிர்ந்து, "இது என் குழந்தை, பெயர் கிரிக்கெட் பந்து" என்று எழுதியுள்ளார்.
Published by:Ilakkiya GP
First published:

Tags: Child, Onion pakora, UK

அடுத்த செய்தி