• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • 51 பப்புக்கு சென்று குடித்த இளைஞர் - கின்னஸில் இடம்பெறும் ஆச்சர்யமான சாதனை!

51 பப்புக்கு சென்று குடித்த இளைஞர் - கின்னஸில் இடம்பெறும் ஆச்சர்யமான சாதனை!

மாதிரி படம்

மாதிரி படம்

மாட் எல்லிஸ் என்ற பிரிட்டிஷ் இளைஞர் ஒருவர் தான் அந்த சாதனைக்கு சொந்தக்காரர்.

  • Share this:
இளைஞர் ஒருவர் 51 பப்புக்கு சென்று குடித்து கின்னஸ் சாதனையை படைத்துள்ளார்.

கின்னஸ் சாதனைக்கு என்று எந்த வரையறையும் கிடையாது. தனித்துவமான வித்தியாசமான எல்லா சாதனைகளும் ‘கின்னஸ்’ புத்தகத்தில் இடம்பெறும். மனிதர்கள் மட்டுமின்றி நாய்கள் போன்ற செல்ல பிராணிகள் செய்யும் வித்தியாசமான செயல்களும் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெறும்.

உலகம் முழுவதும் சாதனை செய்பவர்களின் பெயர் பட்டியல் இந்த புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும். கின்னஸ் உலக சாதனையில் தங்கள் பெயரை பதிவு செய்ய வித்தியாசமான செயல்களை பலரும் செய்து வருகின்றனர். விளையாட்டு, சாகசம், உணவு உண்ணுவது, பாடுவது, நடனம் ஆடுவது என்று எல்லா துறைகளிலும் வித்தியாசமான சாதனைகளை பலர் செய்து வருகின்றனர்.

சிலர் கின்னஸில் இடம்பெறுவதற்காகவே தலைகீழாக யோசித்து பல்வேறு ஐடியாக்கள் கண்டுபிடித்து, அதனை சாதனையாக செய்கிறார்கள். உதாரணமாக தலை கீழாக நடப்பது, தண்ணீருக்கு உள்ளே அதிக நேரம் இருப்பது,உயரமான மலையில் ஏறுவது, சீக்கிரமாக அதிக உணவுகளை சாப்பிடுவது என பல சாதனைகள் வரிசைக்கட்டி நிற்கின்றன. இந்த நிலையில் ஒருவர் அசால்டாக பப்புக்கு செல்வதை சாதனையாக செய்து இருக்கிறார். ஆச்சர்யமாக இருக்கிறது அல்லவா? ஆனால் உண்மை தான்.

Also read... 7 அடி 0.7 அங்குல உயரம் - உலகின் உயரமான துருக்கி பெண்!

மாட் எல்லிஸ் என்ற பிரிட்டிஷ் இளைஞர் ஒருவர் தான் அந்த சாதனைக்கு சொந்தக்காரர். மாட் எல்லிஸ் மது குடிக்கும் பப்புக்கு சென்று சாதனை படைத்திருக்கிறார். அவர் கிட்டத்தட்ட 9 மணி நேரத்தில் 51 மதுக்கடைகளுக்குச் சென்று குடித்து ஒரு புதிய “உலக சாதனை” படைத்துள்ளார். மாட் எல்லிஸ் ஒவ்வொரு பப்பிலும் குறைந்தது 125 மில்லி குடிக்க வேண்டும். அதன்படியே குடித்தும் முடித்துள்ளார்.

இவர் மதுவுடன் கலந்து குடித்ததில் பெரும்பாலும் ஆரஞ்சு ஜூஸ் மற்றும் டயட் கோக் ஆகியவை அடங்கும். இந்த சாதனையின் போது 6.3 லிட்டர் மது மற்றும் குளிர்பானம் குடித்துள்ளார். மது வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள மாட் எல்லிஸ் எல்லா வகையான மதுக்கடைகளுக்கும் செல்பவர் ஆவார். நிறைய இடங்களுக்கு செல்வது பிடிக்கும் என்பதால், இதனையே ஒரு சாதனையாக செய்தால் என்ற எண்ணம் அவருக்கு தோன்றியது.

அதன்படியே ஆசையை நிறைவேற்றியும் உள்ளார். இந்த சாதனை பதிவை கின்னஸ் ரெக்கார்ட்ஸ் நிறுவனத்திற்கு சமர்ப்பித்துள்ளார். இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே 2011ல் 13 பேர் கொண்ட குழு 24 மணி நேரத்தில் 250 பார்களில் குடித்தார்கள். கின்னஸ் ரெக்கார்ட்ஸ் நிறுவனம் மாட் எல்லிஸின் சாதனையை அங்கீகரித்தால், இந்த சாதனையை செய்த முதல் நபர் என்ற பெயர் வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: