• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • புற்றுநோயால் உயிருக்கு போராடிய நாயை மகிழ்விக்க கடைசி ட்ரெக்கிங் கூட்டிச் சென்ற உரிமையாளர்!

புற்றுநோயால் உயிருக்கு போராடிய நாயை மகிழ்விக்க கடைசி ட்ரெக்கிங் கூட்டிச் சென்ற உரிமையாளர்!

நாயை மகிழ்விக்க கடைசி ட்ரெக்கிங் கூட்டிச் சென்ற உரிமையாளர்

நாயை மகிழ்விக்க கடைசி ட்ரெக்கிங் கூட்டிச் சென்ற உரிமையாளர்

ஒரு உரிமையாளருக்கு வளர்ப்பு நாய்கள் எந்தளவு சந்தோஷத்தை கொடுக்கிறதோ அதைவிட பலமடங்கு வருத்தத்தை அவை இவ்வுலகை விட்டு பிரியும் போது கொடுக்கின்றன.

  • Share this:
செல்லப்பிராணிகள் என்றாலே மனதில் சந்தோஷமும், அன்பும், பாசமும் பொங்கி வழியும். ஏனெனில் அவை பெரும்பாலும் நம் முகத்தில் புன்னகையை மட்டுமே மலர செய்கின்றன. அதிலும் நாய்கள் அன்பும் அரவணைப்பும் அதிகம் கொண்டிருக்கும் ஒரு நன்றியுள்ள ஜீவன். அவற்றை ஒரு குழந்தை போலவே பலர் வீட்டில் பராமரித்து வருகின்றனர். அவை செய்யும் சில வேடிக்கையான விஷயங்கள் மனதை கவரும் வபுற்றுநோயால் உயிரோடு போராடிய நாயை மகிழ்விக்க கடைசி ட்ரெக்கிங் கூட்டிச் சென்ற உரிமையாளர் கையில் இருக்கும். ஒரு உரிமையாளருக்கு வளர்ப்பு நாய்கள் எந்தளவு சந்தோஷத்தை கொடுக்கிறதோ அதைவிட பலமடங்கு வருத்தத்தை அவை இவ்வுலகை விட்டு பிரியும் போது கொடுக்கின்றன. அந்த வகையில் இங்கு ஒரு நெகிழ வைக்கும் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.

லண்டனைச் சேர்ந்த ஒருவர் தனது செல்ல நாயை அதன் இறுதி நாட்களுக்கு முன்னதாக வெல்ஷ் மலையில் கடைசியாக ஒரு பயணத்திற்கு அழைத்துச் சென்றார். அவர் தனது செல்ல தோழனின் கடைசி நாட்களை சாலைப் பயணத்துடன் சிறப்பானதாக்க விரும்பினார். 10 வயதான லாப்ரடார் பல மாதங்களாக லுகேமியா எனும் புற்றுநோயால் போராடி வந்தது. தனது நாய் இறப்பதற்கு முன்பு இறுதியாக அதனை மலை உச்சிக்கு கொண்டு செல்ல அதன் உரிமையாளர் கார்லோஸ் ஃப்ரெஸ்கோ முடிவெடுத்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஃப்ரெஸ்கோ, எப்போதும் மோன்டி என அழைக்கப்படும் தனது நாயை ஒரு சக்கர வண்டியில் அமர்த்திக்கொண்டு நகரத்தைச் சுற்றி பார்க்க கிளம்புவார். பல வழிப்போக்கர்கள் நாயை பார்த்தவுடன் அன்பை பொழிய தொடங்குவர். பின்னர் இதனை நிலை பற்றிய உண்மை அறிந்தவுடன் கண்ணீருடன் ஆறுதல் தெரிவித்து செல்வர் என்று ஃப்ரெஸ்கோ கூறியுள்ளார். நாயின் உடல்நிலை மிகவும் மோசமடைய ஆரம்பித்த பிறகு, 18 மாதங்களாக லுகேமியா நோயால் பாதிக்கப்பட்ட தனது மோன்டியுடன் ப்ரெகோன் பீக்கான்களில் இருந்து பென் ஒய் ஃபேன் வரை ஒரு கடைசி பயணத்தை மேற்கொள்ள திட்டமிட்டார். 10 வயதான மோன்டி பல ஆண்டுகளாக தனது உரிமையாளருடன் பல முறை ட்ரெக்கிங் சென்றுள்ளது. மலைகளுக்கு சென்றால் நாய் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் என்று அவர் நம்பினார்.

இதுகுறித்து பிபிசி செய்தியுடன் பேசிய ஃப்ரெஸ்கோ, “எனது நாயின் உடல்நிலை மோசமடைந்து வருவதை நான் அறிவேன். அது வெளியில் செல்லும்போதெல்லாம் மிக நன்றாக இருக்கும். ஆனால் புற்றுநோயால் அதன் தசைகளுக்கு போதுமான ஆக்சிஜன் கிடைக்கவில்லை. எனவே எனது நாய் நடப்பதற்கு சிரமப்படும். மேலும் நாயை மகிழ்விக்க அதனை மலையேற்றத்திற்கு கூட்டிச் சென்றேன். பின்னர், துரதிர்ஷ்டவசமாக, ஜூன் 21ம் தேதி அன்று, எனது நாய் உயிரிழந்தது. உயிரிழப்பதற்கு முன்னதாக மோன்டி படுக்கையில் எனது கால்களுக்கு அருகில் சுருண்டு படுத்துக்கொண்டது.

Also read... Guinness Record: இப்படியும் ஒரு கின்னஸ் சாதனையா? நீங்களே பாருங்கள் - வீடியோ!

கேமராவில் சிக்கிய அரியவகை கிளாஸ் ஆக்டோபஸ்..வியப்பில் ஆழ்ந்த நெட்டிசன்கள் - வீடியோ!

பின்னர் நான் எழுத்து பார்க்கும்போது அதன் உயிர் பிரிந்திருந்தது. எனது நாய் மிகவும் சிறப்பு வாய்ந்த பையன், ஒரு தசாப்தமாக என் பக்கத்திலேயே இருந்தார்" என்று ஃப்ரெஸ்கோ அதனை நினைவுகளை பகிர்ந்து கொண்டார். இந்த நிலையில் உயிரிழந்த நாயை தனது சொந்த வீட்டு தோட்டத்தில் அடக்கம் செய்வதற்காக மோன்டியை லண்டனுக்கு அழைத்துச் சென்றார். நாயின் இறுதி சாகசத்தின் புகைப்படங்கள் பேஸ்புக்கில் தி ப்ரெகோன் மற்றும் ராட்னர் எக்ஸ்பிரஸ் என்ற பேஜ் வெளியிட்டன. கார்லோஸ் மற்றும் மோன்டி ஆகியோரின் கடைசி ஜோடி படங்கள் ஆன்லைனில் மக்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளன.

இந்த பதிவுக்கு ஒரு யூசர் கருத்துத் தெரிவிக்கையில், “உங்கள் அருமையான உண்மையுள்ள நண்பர் மோன்டியுடன் இது போன்ற ஒரு அற்புதமான கடைசி நடை. நீங்கள் மிகவும் அக்கறையுள்ள மனிதர். உங்களை இறைவன் ஆசீர்வதிப்பார்" என்று பதிவிட்டிருந்தார். மற்றொரு யூசர் " உங்கள் அழகான நண்பர் இப்போது கடவுளின் தோட்டத்தில் இருப்பார். அவரால் நீங்கள் மிகவும் நேசிக்கப்படுகிறீர்கள், ” என்று எழுதியிருந்தார்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: