Home /News /trend /

நீரில் மூழ்கிய நாயை காப்பாற்ற போன நபருக்கு நேர்ந்த பரிதாப சம்பவம்.!

நீரில் மூழ்கிய நாயை காப்பாற்ற போன நபருக்கு நேர்ந்த பரிதாப சம்பவம்.!

ரீஸ் டெய்லர்

ரீஸ் டெய்லர்

Dog Rescue | ஒரு உயிரை காப்பாற்ற சென்றதால் தனது உயிருக்கே ஆபத்து ஏற்படும் நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டார் 27 வயதான ரீஸ் டெய்லர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
ஆபத்தில் இருக்க கூடிய சக உயிருக்கு உதவுவதே மனித தன்மை. இப்படி மனித தன்மை கொண்ட உணர்வுடன் இந்த உலகில் சிலர் மட்டுமே இருக்கின்றனர். அப்படி சக உயிருக்கு உதவும் போது தனது உயிருக்கே ஆபத்து நேர்ந்தால் அதை என்னவென்று சொல்வது. இப்படியொரு மோசமான சம்பவம் தான் 27 வயதான ரீஸ் டெய்லர் என்பவருக்கு நேர்ந்துள்ளது. இவர் ஒரு உயிரை காப்பாற்ற சென்றதால் தனது உயிருக்கே ஆபத்து ஏற்படும் நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டார்.

இங்கிலாந்தில் உள்ள நார்விச் படகு நிலையத்தில் பென்ட்லி என்ற நாய் ஒரு படகின் ஓரத்தில் இருந்து தண்ணீரில் விழுந்தது. ரீஸ் வழக்கம் போல ஜிம்மிலிருந்து சைக்கிளில் திரும்பி வந்து கொண்டிருந்தபோது, அங்கு ​​நீரில் மூழ்கித் தவிக்கும் நாயை பார்த்துள்ளார். அதை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்கிற எண்ணத்தில் அதன் அருகில் சென்று காப்பாற்ற முயற்சித்துள்ளார்.

எந்த தயக்கமும் இல்லாமல், ரீஸ் தனது  ஆடைகளை கழற்றிவிட்டு நாயைக் காப்பாற்ற ஆற்றில் குதித்தார். அப்போது நாயின் உரிமையாளர், "தயவுசெய்து உதவுங்கள், எனது நாய் நீரில் மூழ்கப் போகிறது" என்று கத்தி உள்ளார். அந்த நபரின் கூக்குரலையும் ரீஸால் கேட்க முடிந்தது. தண்ணீரில் மூழ்கி கொண்டிருந்த நாயை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று போராடி அதன் அருகில் காப்பாற்ற சென்றார் ரீஸ். ஆனால், அப்போது நடந்தது தான் எதிர்பாராத சம்பவம்.



யாரும் எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி கொண்டிருந்த நாய் ரீஸின் கண்களுக்கு அருகில் கடித்துவிட்டது. இதனால் ரீஸிற்கு படுகாயம் ஏற்பட்டது. அந்த நாயை காப்பாற்ற சென்ற ரீஸிற்கு இப்படியொரு நிலைமை ஏற்பட்டிருக்க கூடாது. இருப்பினும் அந்த நாய் பயத்தால் தான் இப்படி செய்து விட்டது என்று பலரும் கூறி வருகின்றனர். இது குறித்து ரீஸிடன் கேட்டபோது, "நான் வளரும்போது என் அம்மா உள்ளூர் விலங்குகள் தங்குமிடம் ஒன்றில் வேலை செய்து வந்தார். எனவே எங்களிடம் நாய்கள், பூனைகள், முயல்கள், புறா, வான்கோழிகள் இருந்தன. எங்களிடம் இருந்த எந்த செல்ல பிராணிகளும் எங்களை காயப்படுத்தியதில்லை. என்று கூறினார்.

Also Read : ரயில் தண்டவாளத்தில் இன்ஸ்டா ரீல்ஸ் செய்த இளைஞர்.. நொடிப்பொழுதில் நடந்த விபரீதம்

நாயிடம் கடிவாங்கிய ரீஸ், அதை காப்பாற்றாமல் விடவில்லை. ஒருவழியாக அதை காப்பாற்றி உரியவர்களிடம் ஓப்படைத்து விட்டார். அதன் பிறகு, ரீஸை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அப்போது அவருக்கு புருவத்தில் தையலுடன் சேர்த்த கட்டு போடப்பட்டது. ரீஸ் நீரில் மூழ்கிய நாயை காப்பாற்றும் போது தனக்கு ஏற்பட்ட காயத்தை கூட பெரிதாக பொருட்படுத்தவில்லை என்றே கூறுகிறார். அந்த நாய் மிகவும் பயந்து போய் இருந்தது. அதனால் தான், அது அவ்வாறு செய்துவிட்டது என்று பெருந்தன்மையுடன் ரீஸ் சொல்லி கொண்டார். இந்த நிகழ்விற்கு பிறகு, அந்த நாயின் உரிமையாளர்களான ஜேட் லானிகன் மற்றும் ஜேக்கப் வில்லியம்ஸ் ஆகியோர் தங்கள் நாயைக் காப்பாற்றி உதவிய ரீஸுக்கு நன்றி தெரிவித்து கொண்டனர்.
Published by:Selvi M
First published:

Tags: Dog, Trending

அடுத்த செய்தி