விடுமுறைக்காக சூப்பர் மார்க்கெட் ஊழியரின் சூப்பர் பிளான் - வைரலாகும் வீடியோ!

மயங்கி விழுந்தது போல் நடித்த ஊழியர்

இங்கிலாந்தில் சூப்பர் மார்க்கெட்டில் பணியாற்றிய ஊழியர் ஒருவரோ வித்தியாசமான முறையை கையாண்டு விடுமுறையை பெற்றிருக்கிறார்.

  • Share this:
விடுமுறைக்காக ஊழியர் ஒருவர் வேலை செய்யும்போது மயங்கி விழுந்த வீடியோவை நீண்ட நாட்களுக்குப் பிறகு டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

பள்ளி மற்றும் கல்லூரி செல்லும்போது, வீட்டுப் பாடம் செய்யவில்லை என்றாலோ? அல்லது ஊர்களில் ஏதேனும் திருவிழா நடந்தால் அதில் பங்கேற்பதற்காக பொய்யான காரணங்களை சொல்லி விடுமுறை எடுப்பதை பலரும் செய்திருப்பதை பார்த்திருக்கிறோம். சில அரிதான சமயங்களில் விடுமுறை வேண்டும் என்பதற்காக பொய்யான காரணத்தைக்கூறி வேலைக்கு சிலர் விடுமுறை எடுப்பார்கள். ஆனால், இங்கிலாந்தில் சூப்பர் மார்க்கெட்டில் பணியாற்றிய ஊழியர் ஒருவரோ வித்தியாசமான முறையை கையாண்டு விடுமுறையை பெற்றிருக்கிறார். அதாவது, வேலைக்கு சென்ற அவர், அங்கு மயங்கி கீழே விழுந்ததுபோல் நடித்து விடுமுறையை பெற்றுள்ளார்.சூப்பர் மார்க்கெட்டில் பணியாற்றிய அவர், 'பாக்சிங் டே' அன்று பணிக்கு சென்றுள்ளார். விடுமுறை கேட்பதற்கு சரியான காரணம் அவரிடம் இல்லை. மனம் ஒவ்வாமல் வேலைக்கு சென்ற அவர், வழக்கம்போல் பணியை தொடர்கிறார். திடீரென மயங்கி விழுவதுபோல் நடிக்கிறார். இதனால் அதிர்ச்சியடைந்த கடை உரிமையாளர்கள், ஊழியருக்கு உடல்நிலை சரியில்லை என கருதி விடுமுறை அளித்துள்ளார். தன்னுடைய இந்த நடிப்பு பற்றி நீண்ட நாட்களுக்குப் பிறகு மனம் திறந்துள்ள அந்த நபர், தான் எப்படி நடித்தேன்? என்ற வீடியோவையும் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

‘El Pedro என்ற டிவிட்டர் பக்கத்தில் ஜூன் 4ம் தேதி அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், சூப்பர் மார்க்கெட்டில் வழக்கம்போல் பில்போடும் பணியை செய்து கொண்டிருக்கிறார். கடைக்கு வந்த பெண் ஒருவர், பொருட்களை வாங்கியபிறகு அவரிடம் சென்று பில் போடுகிறார். இதனை முடித்த அந்த நபர், தான் இருக்கும் இடத்தில் இருந்து மயங்கி விழுந்ததுபோல் கீழே விழுகிறார். அந்த பெண் வாடிக்கையாளர் அவர் விழுந்ததை பார்த்ததும் பதறி துடிக்கிறார். இந்த நாடகத்தை அரங்கேற்றியபோது தனக்கு 18 வயது என்றும் அந்த நபர் தெரிவித்துள்ளார்.அவரின் இந்த வீடியோவை லட்சக்கணக்கான நெட்டிசன்கள் ரசித்துள்ளனர். உங்கள் நடிப்பை கடை உரிமையாளர் கண்டுபிடிக்க வில்லையா? என வினவியுள்ள நெட்டிசன்கள், மகா நடிகனாக இருந்திருக்கிறீர்கள் என்றும் கூறியுள்ளனர். மேலும், விடுமுறைக்காக தாங்கள் செய்த சேட்டைகளையும் கமெண்ட்டாக பதிவிட்டுள்ளனர். இதேபோல், தானும் மயங்கி விழுந்து விடுமுறை கேட்ட அனுபவம் இருப்பதாக ஒரு நெட்டிசன் தெரிவித்துள்ளார்.

Also read... "Go Corona Go" வீடியோ கேம்... 14 வயது சிறுவனின் முயற்சி!

மற்றொருவர், விடுமுறைக்காக தான் நிறுவனத்தில் மயங்கி விழுந்ததாகவும், முதலுதவி செய்த சக ஊழியர்கள், ஆம்புலன்ஸூக்கு அழைப்பு விடுத்து அதில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டனர். எனக்கு ஏற்பட்ட அந்த அனுபவத்தை மறக்க முடியாது எனக் கூறியுள்ள அவர், இப்போது நினைத்தால் கூட என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை எனத் தெரிவித்துள்ளார். தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பெரும்பாலானோரின் கவனத்தை ஈர்த்துள்ளது.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: