விலை மலிவான பொருட்கள் முதல் லட்சக்கணக்கான விலை மதிப்புள்ள காஸ்டலி பொருட்கள் வரை அனைத்தையும் மக்கள் தற்போது ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கி வருகிறார்கள்.
பெரும்பாலானோருக்கு ஆன்லைன் பர்ச்சேஸ் இனிய அனுபவமாக இருக்கும் நிலையில், சிலருக்கு அதிர்ச்சியான அனுபவமாக அமைந்து விடுகிறது. ஆர்டர் செய்தது மிகவும் காஸ்டலியான பொருள் என்றால், யூஸர்களுக்கு வருவது மிகவும் விலை மலிவான அல்லது வினோதமான பொருளாக இருக்கும் எண்ணற்ற சம்பவங்கள் இந்தியாவில் மட்டுமல்ல சரவதேச அளவில் பலமுறை நிகழ்ந்துள்ளன.
இதே போன்ற சம்பவம் சமீபத்தில் இங்கிலாந்தில் தனது மகளுக்காக ஆசை ஆசையாக சுமார் ஒன்றரை லட்சம் மதிப்பிலான காஸ்டலியான லேப்டாப் ஒன்றை ஆரடர் செய்த தந்தை ஒருவருக்கு, நடந்துள்ளது. தான் ஆர்டர் செய்த லேப்டாப்பிற்கு பதில் சுமார் 5 பவுண்ட்ஸ் (ரூ.500) மதிப்புள்ள நாய்களுக்கான பேக்கேஜ் உணவை பெற்றுள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இதனால் கடும் அதிர்ச்சியடைந்த ஓய்வுபெற்ற ஐடி மேனேஜரான ஆலன் வுட், உடனடியாக அமேசான் கஸ்டமர் கேர்-க்கு கால் செய்து தனக்கு தவறான பொருள் டெலிவரி செய்யப்பட்டது தொடர்பாக புகார் தெரிவித்திருக்கிறார். ஈ-காமர்ஸ் பிளாட்ஃபார்ம்களில் இருந்து தவறான பொருட்களை பெறுவது முழுவதும் புதிதல்ல என்றாலும், அமேசான் வாடிக்கையாளர் சேவையின் எதிர்மறையான அணுகுமுறை ஆலன் வுட்-ஐ மிகவும் கவலையடையச் செய்தது.
ஏனென்றால் ஆலன் அமேசான் நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு புகார் செய்த போது முதலில் ரீஃபன்ட் கொடுக்க மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தகவல்களை ஷேர் செய்துள்ள ஆலன், அமேசானை முதலில் தொடர்பு கொண்ட போது குழப்பம் தீர்க்கப்படும் என்று நான் நம்பினேன், ஆனால் அமேசான் வாடிக்கையாளர் சேவையுடன் சுமார் 15 மணி நேரத்திற்கும் மேலாக பேசிய பிறகும் அவர்கள் எனக்கு உதவ முடியாது என்று சொன்னார்கள் என சோஷியல் மீடியாவில் பகிர்ந்து கொண்டுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.