அவசர போலீஸ் உதவி எண், முதல் தீயணைப்பு சேவை, மருத்துவ சேவை என்று பல விதமான அவசர சேவைகளுக்கும் ஹெல்ப்லைன் நம்பர்கள் உள்ளன. நம் நாட்டில் காவல்துறையினருக்கு 100 எண்ணை, ஆம்புலன்ஸ் சேவைக்கு 108 அழைப்பது போலவே, வெளிநாடுகளிலும் எமர்ஜென்ஸி நம்பர்கள் உள்ளன. எமர்ஜன்சி எண்கள் என்பது உண்மையிலேயே அவசரமாக காவல்துறை அல்லது வேறு ஏதேனும் ஸ்பெஷலிஸ்ட்டுகளின் உதவி தேவைப்படும் நபர்களுக்கு உதவியாக உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால், எது எமர்ஜன்சி என்பது சிலருக்கு புரியவில்லையா என்பது போல, போலீஸாரே எதிர்பார்க்காத வண்ணம் பீட்சா ஷாப்பிலிருந்து ஒரு அழைப்பு வந்துள்ளது!
இங்கிலாந்தின் எசெக்ஸ் போலீசாருக்கு, பீட்சா டெலிவரி செய்வதில் தாமதம் ஆகிறது என்பதை எமர்ஜென்ஸி எண்ணுக்கு அழைத்து போலீசாரிடம் ஒரு நபர் புகார் தெரிவித்துள்ளார்.
பீட்ஸா ஷாப்பில் இருந்து எமர்ஜென்ஸி நம்பருக்கு அழைப்பு வந்தவுடன் போலீஸார் ஏதேனும் பிரச்சனையாக இருக்கும் என்று நினைத்தபோது, போலீசாருக்கு புகார் செய்த நபர் கூறிய காரணம் மிகவும் வேடிக்கையாக இருந்தது! பீட்ஸா ஆர்டர் செய்து 30 நிமிடங்களுக்கு மேலாகயும் டெலிவரி செய்யப்படவில்லை என்பதை புகார் செய்வதற்காக எமர்ஜென்ஸி நம்பரை அழைத்ததாக அந்த நபர் தெரிவித்துள்ளார்.
போலீசாருக்கு வரும் அழைப்புகளில் பல அழைப்புகள் போலியாக அதாவது பிரான்ங்க் செய்யும் நோக்கத்தில் அழைக்கப்படுகின்றன என்பதால் அந்த நபரின் அழைப்பு உண்மையிலேயே புகார் அளிக்கத்தானா அல்லது விளையாடுகிறாரா என்பது தெரியவில்லை. அது மட்டுமில்லாமல் இதேபோன்ற வேடிக்கையான பல அழைப்புகள் வரும் என்று கூறப்படுகிறது. உதாரணமாக ‘டைம் என்ன’ என்பதைக் கேட்டு உறுதி செய்வதற்காக கூட பலர் எமர்ஜென்ஸி நம்பரை அழைத்திருக்கிறார்கள் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
Also Read : மாணவியை விசிறி விட சொல்லி வகுப்பறையில் நிம்மதியாக தூங்கிய அரசு பள்ளி ஆசிரியை
குறிப்பிட்ட நிமிடத்திற்குள் பீட்சா டெலிவரி செய்யப்படும் என்ற உறுதிமொழியுடன் பல பீட்ஸா நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. ஆர்டர் செய்த நொடி முதல் பீட்சா டெலிவரி ஆகும் வரை பலரும் டிராக்கரை பார்த்து கொண்டிருப்பார்கள். ஓரிரு நிமிடங்கள் தாமதமாக வந்தால் கூட பீசா டெலிவரிக்கு பணம் செலுத்த வேண்டாம் என்றெல்லாம் சில காலம் முன்பு வரை விதிமுறைகள் இருந்தன. இப்பொழுது கூட குறிப்பிட்ட நேரத்திற்குள் பீட்சா டெலிவரி செய்யவில்லை என்றால் நெகட்டிவ் ரிவ்யூ வழங்கப்பட்டு சமூக வலைத் தளங்களில் பகிரப்படுகிறது. ஆனால், பீட்சா அவுட்லெட்டிலேயே ஆர்டர் டெலிவரிக்காக காத்திருந்த நபர் அங்கிருந்து டெலிவரி செய்யப்படவில்லை என்பதை புகாராக தெரிவித்தது இதுவே முதல் முறை.
இதேபோன்ற வேடிக்கையான காரணங்களுக்காக அவசர போலீசுக்கு அழைப்புகளை தவிர்ப்பதற்காக இங்கிலாந்தில் இருக்கும் எசெக்ஸ் போலீஸ் மக்களுக்கு ஒரு வேண்டுகோளை விடுத்துள்ளது. தேவைப்பட்டால் மட்டுமே தங்களை அழைக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் அவசர தேவைகளுக்காக மட்டுமே அவசர தேவைகளுக்காக மட்டுமே தங்களுக்கு அழைத்த மக்களுக்கும் நன்றி தெரிவித்து உள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.