போலி ஆணுறுப்பு மூலம் போதைப் பொருள் கடத்திய நபர்... வசமாக பிடிப்பட்டது எப்படி?

பெல்ஜியம் விமான நிலையத்தில் போலி ஆணுறுப்பு மூலமாக போதைப் பொருள் கடத்திய நபர் பிடிப்பட்டார்.

போலி ஆணுறுப்பு மூலம் போதைப் பொருள் கடத்திய நபர்... வசமாக பிடிப்பட்டது எப்படி?
மாதிரி படம்
  • Share this:
பிரிட்டனை சேர்ந்த நபர் பிப்ரவரி மாதத்தில் பெல்ஜியம் பிரஸ்ஸல்ஸ் விமான நிலையத்தில் இருந்து ஜமைக்கா செல்ல முற்பட்டார். அவருக்கு நடத்தப்பட்ட போதை மருந்து சோதனையில் அவர் தோல்வியடைந்தார். இதையடுத்து மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது அவர் போலி ஆணுறுப்பு மூலமாக 127 கிராம் போதை பொருள் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.

விமான நிலையத்தில் பிடிபட்ட நபர் போதை பொருளை விற்க அதை வாங்கவில்லை என்றும் தனது சொந்த பயன்பாட்டிற்காக தான் வாங்கினேன் என்று தெரிவித்துள்ளார். சட்ட விரேதமாக போதை பொருள் கடத்தியதாக அவருக்கு 36 மாத சிறை தண்டனை விதிக்கப்பட வேண்டும். ஆனால் அவரின் உடல்நிலையை கருத்தில் கொண்டு தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

தி நியூசிலாந்து ஹெரால்ட் வெளியிட்டுள்ள இந்த செய்தியின் படி, போதை பொருள் கடத்திய நபருக்கு நுரையிரல் தொற்று காரணமாக சிகிச்சை எடுத்து வருகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கின் இறுதி தீர்ப்பு ஜீன் 24-ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.
First published: June 22, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading