Home /News /trend /

உலகின் முதல் 3D பிரிண்ட் செய்யப்பட்ட செயற்கைக் கண் பெற்ற நபர்!

உலகின் முதல் 3D பிரிண்ட் செய்யப்பட்ட செயற்கைக் கண் பெற்ற நபர்!

ஸ்டீவ் வெர்ஸ் பிரிட்டனைச் சேர்ந்த 40 வயதான பொறியாளர். 3D பிரிண்ட் செய்யப்பட்ட முழுமையான டிஜிட்டல் செயற்கை கண்ணை பெற்ற முதல் நபர் இவர் தான்.

    மருத்துவ உலகில் தொழில்நுட்பப் பயன்பாடு பல்வேறு அதிசயங்களை செய்து வருகிறது. அவற்றில் முக்கியமான டெக்னிக் 3D பிரின்ட் உடல் உறுப்புகள் மற்றும் பாகங்கள். புத்தகங்கள் மற்றும் ஆய்வுகள் என்ற அளவிலேயே இருந்த இந்த தொழில்நுட்பம், தற்போது புதிய சாதனையை உருவாக்கியுள்ளது. தொடர்ந்து முன்னேறி வரும் மெடிக்கல்-டெக்னாலஜி துறையில் 3D பிரிண்ட் டெக்னிக் பயன்படுத்தி செயற்கை கண்களை உருவாக்கும் முயற்சியில் வெற்றியைப் மருத்துவ் உலகம் பெற்றுள்ளது. முதன் முதலாக 3D பிரிண்ட் செய்யப்பட்ட செயற்கை கண்களை பெற்ற நபர் யாரென்று தெரியுமா?

    ஸ்டீவ் வெர்ஸ் பிரிட்டனைச் சேர்ந்த 40 வயதான பொறியாளர். 3D பிரிண்ட் செய்யப்பட்ட முழுமையான டிஜிட்டல் செயற்கை கண்ணை பெற்ற முதல் நபர் இவர் தான். லண்டனில் உள்ள மூர்ஃபீல்ட்ஸ் கண் மருத்துவமனையின் கிளினிக்கல் சோதனையின் பகுதியாக 3D பிரிண்ட் செயற்கை கண் பொருத்தப்பட்டுள்ளது. பிறக்கும் போதே கண்கள் முழுமையாக் வளர்ச்சி அடையவில்லை என்றாலோ அல்லது விபத்து, காயம் அல்லது கண்களில் கேன்சர் ஏற்படுவது உள்ளிட்ட பிற காரணங்களால் கண்கள் தீவிரமான பாதிப்பு அடைந்தாலோ, செயற்கை கண்கள் உதவியாக இருக்கும். மனிதர்களின் இயற்கையான கண்களைப் போலவே உருவாக்கப்பட்டுள்ள இந்த செயற்கைக் கண்ணை ‘பயோமிமிக்’ என்று மருத்துவர்கள் அழைக்கின்றனர்.

    பாரம்பரிய முறைப்படி, செயற்கைக் கண்களை உருவாக்க தேவைப்படும் நேரத்தை ஒப்பிடும் போது இது குறைவான நேரத்தில் உருவாக்கப் படுகிறது. பாரம்பரிய அக்ரிலிக் செயற்கைக் கண்கள் கையால் வரையப்பட்டவை மற்றும் அதனை முடிப்பதற்கு குறைந்தபட்சம் ஆறு வாரங்கள் தேவைப்படும். 3டி பிரிண்டிங் மூலம், கண்களின் அளவு துல்லியமாக ஸ்கேன் செய்யப்படுகிறது. ஒருமுறை ஸ்கேன் செய்தவுடன், ஸ்கேன் செய்யப்பட்ட கண்களின் ஃபைல்கள் ஜெர்மனியில் உள்ள 3D பிரிண்டிங் செய்யும் இடத்திற்கு அமைக்கப்படுகிறது.

    Also Read : கால்பந்து விளையாட்டில் அசத்தும் நாய் - வைரலாகும் வீடியோ

    அங்கு இரண்டரை மணி நேரத்திற்குள் பிரிண்ட் தயாராகி விடும். பிரிண்ட் செய்யப்பட்ட கண்களை மெருகூட்டி, நோயாளிகளுக்கு பொறுத்துவதற்காக கண் மருத்துவரிடம் அனுப்பப்படுகிறது. முழு செயல்முறையும் முடிவதற்கு இரண்டு முதல் மூன்று வாரங்கள் வரை தான் ஆகும். இந்த கிளினிக்கல் சோதனையை வழிநடத்தும், லண்டன் பல்கலைக்கழக மருத்துவமனையின் கண் மருத்துவம் மற்றும் கண் புற்றுநோயியல் பேராசிரியரான மன்தீப் சாகோ, இந்த புதிய டெக்னாலஜி உத்தரவாதமான சான்றுகளை வழங்குகிறது என்றும், “இது நீண்ட காலமாக காத்திருக்கும் பட்டியலில் இருப்பவர்களின் எண்ணிக்கையை கணிசமாக குறைக்கும்” தெரிவித்தார்.

    Also Read : மொபைல் போனை வியப்போடு பார்க்கும் குரங்குகள் - வைரலாகும் வீடியோ

    செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டீவ் வெர்ஸ், “2௦ வயதிலிருந்தே எனக்கு செயற்கை கண் தேவைப்பட்டது. ஒவ்வொரு முறை நான் வீட்டை விட்டு வெளியே செல்லும் போது, ஒருமுறைக்கு பல முறை கண்ணாடியைப் பார்ப்பேன். ஆனால் அதை நான் வெறுத்தேன். இந்த புதிய கண் மிகவும் அழகாக இருக்கிறது. இதற்காக தான் என் வாழ்க்கை முழுவதும் காத்திருந்தேன். அற்புதமாக உணர்கிறேன்” என்று தெரிவித்தார்.
    Published by:Vijay R
    First published:

    Tags: Viral

    அடுத்த செய்தி