Home /News /trend /

சிறுமியாக தூங்கியவர் இளம்பெண்ணாக எழுந்த சம்பவம் - ஆச்சரியமூட்டும் விசித்திர கதை.!

சிறுமியாக தூங்கியவர் இளம்பெண்ணாக எழுந்த சம்பவம் - ஆச்சரியமூட்டும் விசித்திர கதை.!

ellen sadler

ellen sadler

Sleeping Girl | 11 வயதில் தூங்கி 9 வருடங்கள் கழித்து எழுந்த ஒரு பெண்ணின் கதை தான் அது. ஆம், கிட்டத்தட்ட ஒன்பது வருடங்களாக அந்த பெண் தூக்கத்தில் இருந்தாள். சட்டென்று நம்ப முடியவில்லை இல்லையா? வாருங்கள் இந்த சுவாரஸ்ய கதை பற்றி தெரிந்து கொள்வோம்.

மேலும் படிக்கவும் ...
உலகில் பல விசித்திரமான விஷயங்களை பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். ஆனால் இப்போது இங்கே கூற போகும் விஷயத்தை கேட்டு நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.

சுமார் 150 ஆண்டுகளுக்கு முன் 19-ஆம் நூற்றாண்டு பிரிட்டனிற்கு ஒரு சுவாரஸ்யமான சகாப்தமாக இருந்தது. ஏனென்றால் அப்போது தான் மருத்துவ துறை அங்கு நவீனமயமாக்கப்பட்டது. மேலும் தொழில்துறை புரட்சியும் நடந்து கொண்டிருந்தது. இது தவிர  நினைவில் கொள்ளதக்க மற்றொரு சுவாரஸ்ய கதையும் இருந்தது.

11 வயதில் தூங்கி 9 வருடங்கள் கழித்து எழுந்த ஒரு பெண்ணின் கதை தான் அது. ஆம், கிட்டத்தட்ட ஒன்பது வருடங்களாக அந்த பெண் தூக்கத்தில் இருந்தாள். சட்டென்று நம்ப முடியவில்லை இல்லையா? வாருங்கள் இந்த சுவாரஸ்ய கதை பற்றி தெரிந்து கொள்வோம். சுமார் 9 வருடங்கள் தூக்கத்தில் இருந்த அந்த பெண்ணின் பெயர் எலன் சாட்லர் (Ellen Sadler). இவர் 1859-ஆம் ஆண்டு மே 15 அன்று 12 குழந்தைகளை கொண்ட ஒரு பெரிய குடும்பத்தில் பிறந்தார். எலனின் தந்தை வில்லியம் சாட்லர் ஒரு விவசாயி, அவர் தனது இளம் வயதிலேயே விபத்து ஒன்றில் இறந்துவிட்டார்.

இதனை தொடர்ந்து எலனின் தாயான அன்னே சாட்லர் (Anne Sadler), தாமஸ் ஃப்ரீவன் (Thomas Frewen) என்பவரை மறுமணம் செய்து கொண்டார். சிறுமியின் குடும்பம் டர்வில் என்ற கிராமத்தில் வசித்து வந்தது. இந்த கிராமம் ஆக்ஸ்போர்டு மற்றும் பக்கிங்ஹாம்ஷயர் இடையே அமைந்துள்ளது. 1871-ஆம் ஆண்டில் 11 வயது சிறுமியாக இருந்த எலன் சாட்லர், அப்போது வரை எந்த நோயின் அறிகுறிகளையும் கொண்டிருக்கவில்லை. 1871 மார்ச் 29 அன்று இரவு தூங்கிய எலன், மறுநாள் காலை விடிந்த பின்னரும் எழுந்திருக்கவில்லை.சத்தம் போட்டு கத்தி பார்த்தும் எழவில்லை, உடலை போட்டு குலுக்கி எழுப்ப நடந்த முயற்சிகளும் பலனளிக்கவில்லை. அவள் மீது தண்ணீரும் ஊற்றி பார்த்து விட்டார்கள் எழவில்லை. இதனால் அவர் இறந்துவிட்டதாக குடும்பத்தினர் நினைத்தனர். உடனடியாக மருத்துவரிடம் அழைத்துச் செல்லப்பட்டார். அவளது நாடித்துடிப்பை கவனித்த மருத்துவர் சிறுமியின் உடல்நிலையை முழுமையாக பரிசோதித்தபோது, ​​எலன் சாட்லர் உறக்கநிலையில் இருப்பது தெரிந்தது. எவ்வளவோ முயற்சி செய்தும் மருத்துவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. சிறுமிக்கு என்ன வியாதி என்று மருத்துவர்களால் கண்டறிய முடியவில்லை.

Also Read : ஆன்லைனில் ரூ.1.4 லட்சத்திற்கு ஆர்டர் செய்த ஒன்றரை வயது குழந்தை...

இதனை தொடர்ந்து ஸ்லீப்பிங் கேர்ள் என்று பிரபலமடைந்த எலன் சாட்லரை பார்த்து செல்ல நாடு முழுவதிலுமிருந்து பல மக்கள் வந்து சென்றனர். அப்படி ஒரு தூக்கம் தூங்கினார் எலன் சாட்லர். பார்க்க வரும் மக்கள் கொடுக்கும் பணத்தை கொண்டு குடும்ப செலவுகளை சமாளித்தார் சிறுமியின் தாய். அதே போல தூங்கும் ஒருவருக்கு உணவளிப்பது எவ்வளவு கடினம்.!! ஒரு சிறிய teapot-ஐ பயன்படுத்தி எலனின் தாயார் அவளுக்கு கஞ்சி, பால் போன்ற திரவ ஆகாரங்களை ஊட்டினார். பின்னர் எலனுக்கு ஏற்பட்ட மருத்துவப் பிரச்சனை நர்கோலெப்ஸி (Narcolepsy) என்ற ஒரு நீண்ட கால கோளாறு என்பது கண்டறியப்பட்டது. இது தூக்கம்-விழிப்பு சுழற்சிகளைக் கட்டுப்படுத்தும் திறன் குறைவதை உள்ளடக்கியது. இந்த கோளாறு Orexin பற்றாக்குறையால் ஏற்படுகிறது. ஓரெக்சின் என்பது மூளையின் ஹைபோகிரெடின் என்ற வேதிப்பொருள் ஆகும். இது தூக்கத்திலிருந்து நம்மை எழுப்ப உதவுகிறது.

Also Read : மேஜிக் செய்து குரங்கை அசரடித்த இளைஞர் - வீடியோ

சுமார் 9 ஆண்டுகள் நீண்ட தூக்கத்திற்கு பிறகு 1880-ஆம் ஆண்டு தனது 21-வது வயதில் கண் விழித்தார் எலன். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவளுடைய அம்மா அதற்குள் மாரடைப்பால் இறந்துவிட்டார். பின்னர் நோயிலிருந்து குணமான எலன் ஒரு விவசாயியை மணந்து 6 குழந்தைகளைப் பெற்றெடுத்தார். இறுதியாக 1901-ல் இறந்தார் எலன் சாட்லர்.
Published by:Selvi M
First published:

Tags: Sleep, Trending

அடுத்த செய்தி