இணையத்தில் வேடிக்கையான பல வீடியோக்களால் நிரம்பியுள்ளது, இவை நமது மனநிலையை அமைதியாக்கி, ஓய்வு நேரத்தில் நம்மை உற்சாகப்படுத்துகின்றன. செல்ல பிராணிகளின் வீடியோ முதல் வேடிக்கையான மனிதர்களின் வீடியோ வரை ஏராளமான வீடியோக்கள் உள்ளன. சமூக ஊடகங்களில் இது போன்ற விளையாட்டு நிறைந்த கிளிப்களுக்கு பஞ்சமில்லை. இப்படியொரு சம்பவம் தான், தற்போது இங்கிலாந்தில் நடத்துள்ளது. இங்கிலாந்தை சேர்ந்த ஒரு ஓட்டுநர் கோழி வாங்குவதற்காக தனது பேருந்தை நடுரோட்டில் நிறுத்தும் வீடியோ வைரலாகி வருகிறது. ஆனால், இந்த அசாதாரண நிகழ்வு இன்ஸ்டாகிராம் பயனர்களை அந்த டிரைவருக்கு துணையாக இருக்க வைத்துள்ளது.
இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட இந்த வீடியோவில், பேருந்து ஓட்டுநர் கீழே இறங்கி கோழி இறைச்சியை வாங்கி வர செல்கிறார். அப்போது ஓட்டுநர் வாகனத்தில் இருந்து இறங்கியதால், பயணிகள் அவர் வரும் வரை காத்திருக்கின்றனர். மேலும், எதிரே காரில் அமர்ந்திருந்த ஒரு பெண் அந்த வீடியோவை படம் பிடித்ததால், சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த பேருந்தை நோக்கி அவர் வேகமாக ஓடினார். ஆன்லைனில் வெளிவந்த வீடியோ கிளிப்பில் ஒரு வாசகமும் குறிப்பிட்டுள்ளது. அதில், “மேற்கு லண்டனில் மட்டுமே பேருந்து ஓட்டுனர் அனைவரையும் பேருந்தில் விட்டு விட்டு சிக்கன் கடைக்குச் செல்வதைக் காண்பீர்கள்,” குறிப்பிட்டுள்ளது.
இருப்பினும், பயணிகளுக்கு இடையூறு விளைவிக்காததை உறுதிசெய்யும் அதே வேளையில் உணவு சாப்பிடுவதற்காக வெளியே செல்ல வேண்டி இருந்த ஓட்டுநரை நெட்டிசன்கள் ஆதரித்து வருகின்றனர். மேலும், பலரும் அவரின் அந்த செயல் சரி தான் என்பதை குறிப்பிட்டு பதிவிட்டு வருகின்றனர். அதில் ஒருவர், “ஆம், கேன்டீன் வசதி இல்லாத கேரேஜில் அவருக்கு 40 நிமிட இடைவெளி கிடைத்திருக்கலாம், மேலும் 10 மணி நேரத்தில் சாப்பிட அவருக்கு இதுவே ஒரே வாய்ப்பாக்க இருந்திருக்கும்" என்று ஒரு பயனர் ஆதரித்து பதிவிட்டுள்ளார். மற்றொருவர், "எனக்கு இங்கு எந்தத் தவறும் தெரியவில்லை. அந்த மனிதர் செய்ததில் தவறு இல்லை" என்று குறிப்பிட்டுள்ளார்.
View this post on Instagram
இன்னொருவர், “பேருந்து ஓட்டுனர்களும் மனிதர்கள் தான். நாம் வாழ்வதற்கு உணவும் தண்ணீரும் எப்படி தேவையோ, அதுவே பேருந்து ஓட்டுனர்களுக்கும் தேவை. சிலர் சாதாரணமான விஷயங்களைப் பதிவு செய்வதை நிறுத்த வேண்டும், அந்த வீடியோவால் இப்போது டிரைவருக்கு வேலை போகலாம்?” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் சிலர், அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டு கொண்டுள்ளனர். ஆனால், பலரும் அவர்மீது எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது. அவ்வாறு செய்வது மனித தன்மை அற்ற செயல் என்று குறிப்பிட்டு வருகின்றனர்.
முன்னதாக, கமலா நகர் மார்க்கெட்டில் உள்ள ஸ்டால் அருகே பெரும் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தியபோது, டெல்லி டிரைவர் ஒருவர் தேநீர் அருந்துவதற்காக சாலையின் நடுவே பேருந்தை நிறுத்தினார். இந்த வீடியோவும் சமூக ஊடகங்களில் வைரலானது
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.