மார்ச் மாதம் தீவிற்கு சென்ற சாகச தம்பதி - கொரோனாவில் இருந்து தப்பித்த அதிசயம்!

மார்ச் மாதம் தீவிற்கு சென்ற சாகச தம்பதி - கொரோனாவில் இருந்து தப்பித்த அதிசயம்!

மாதிரி படம்

இங்கிலாந்தின் லீட்ஸ் நகரைச் சேர்ந்த லூக்கா - சாரா தம்பதி (Luke and Sarah) சாகச பயணங்களை மேற்கொள்வதில் விருப்பம் உள்ளவர்கள்.

  • News18
  • Last Updated :
  • Share this:
இங்கிலாந்தைச் சேர்ந்த சாகச தம்பதியினர், மனிதர்கள் நடமாட்டமில்லாத தீவு ஒன்றில் குடியேறி கடந்த மார்ச் மாதம் முதல் வசித்து வந்ததால் கொரோனோவில் இருந்து தப்பியது தெரியவந்துள்ளது.

இங்கிலாந்தின் லீட்ஸ் நகரைச் சேர்ந்த லூக்கா - சாரா தம்பதி (Luke and Sarah) சாகச பயணங்களை மேற்கொள்வதில் விருப்பம் உள்ளவர்கள். கடந்த ஆண்டு மார்ச் மாதம் இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவியதால், முழு ஊரடங்கு பிறபிக்கப்பட்டது. ஆனால், கொரோனா வைரஸில் இருந்து தப்பிக்க திட்டமிட்ட அந்த தம்பதியினர், ஊரடங்கு அமல்படுத்துவதற்கு 2 நாட்களுக்கு முன்பே புதிய சாகச பயணத்தை மேற்கொண்டனர். 

அதன்படி அயர்லாந்தின் கவுண்டி டொனேகலின் (County Donegal) கடற்கரை பகுதியில் உள்ள ஓவே (Owey Island) என்ற மனிதர்கள் நடமாட்டம் இல்லாத தீவுக்கு சென்றனர். அங்கு மின்சாரம், எரிவாயு, ஓடும் நீர் என எதுவும் இல்லை. இருப்பினும் அந்த தீவில் முகாமிட்ட லூக்கா - சாரா தம்பதியினர் வசிப்பதற்கு சிறு குடிசை ஒன்றை அமைத்துள்ளனர்.  மழை நீர் சேகரிப்பு தொட்டி ஒன்றை அமைத்து, அதில் மழை நீரை சேமித்து குடிப்பதற்கு பயன்படுத்தும் அவர்கள், நெருப்புக்கு நிலக்கரியை உபயோகித்துள்ளனர். 

எலக்ட்ரானிக்ஸ் பொருட்களின் சார்ஜ் தேவையை பூர்த்தி செய்ய சோலார் (solar) பயன்படுத்தியுள்ளனர். மழைநீரைத் தவிர அந்த தீவில் இருக்கும் கிணறு ஒன்றில் இருக்கும் நீரை எடுத்து அன்றாட குளிப்பதற்கும், துணிகளை துவைப்பதற்கும் லூக்காவும், சாராவும் பயன்படுத்தியுள்ளனர்.  உணவு தேவைகளை பூர்த்தி செய்ய, லூக்காவும் சாராவும் அங்கு பயிர்களை வளர்த்ததுடன், முட்டைகளுக்காக கோழி வளர்ப்பிலும் ஈடுபட்டுள்ளனர். கரடுமுரடான பகுதியாக இருந்தாலும் அந்த சூழலுக்கு ஏற்ப தங்களின் வாழ்க்கை முறையை மாற்றி அமைத்துக்கொண்ட இருவரும் கடலில் மீன் பிடிப்பதிலும் கைதேர்ந்துள்ளனர்.

Also read... 71 வயதில் வெயிட்லிப்டிங் - ஒரே நாளில் 4 உலக சாதனைகளை படைத்த முதியவர்!

முதலில் மீன் பிடிப்பதென்றால் என்னவென்றே தெரியாமல் இருந்த லூக்கா, தற்போது அந்த பகுதியில் அதிகளவு கிடைக்கும் பொல்லாக் (Pollack) என்ற மீனை பிடிக்கும் அளவுக்கு கற்றுக்கொண்டுள்ளார். தீவில் சில வீடுகள் ஆங்காங்கே இருந்தாலும், அந்த வீடுகளில் கோடை காலங்களில் மட்டுமே மக்கள் வசிக்கிறார்கள். லீட்ஸ் அறிக்கையின்படி, அந்த தீவில் 1974ம் ஆண்டு வரை மட்டுமே மக்கள் வசித்துள்ளனர். அதன்பிறகு அங்கு யாரும் நிரந்தர குடியிருப்பு வாசிகள் இல்லை என அந்த அறிக்கை கூறியுள்ளது. 

ஓராண்டுக்கும் மேலாக தீவில் வசித்து வரும் தம்பதிகள் இருவரும், தாங்கள் பழமையான வாழ்க்கையை கற்றுக்கொண்டதாக தெரிவித்துள்ளனர். கொரோனா வைரஸ் பற்றி தாங்கள் மறந்து விட்டதாகவும், ஓராண்டு வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாகவும், புதுமையான பல அனுபவங்களை கொடுத்துள்ளதாகவும் லூக்கா - சாரா தம்பதி தெரிவித்துள்ளது. கடல் உணவுகளை உப்பிட்டு நீண்டநாட்கள் வைத்திருக்கும் நுட்பத்தை கற்றுக்கொண்டதாக தெரிவித்த லூக்கா, ஆரோக்கியமாக இருப்பதாகவும் கூறியுள்ளார். சிறிய படகு ஒன்றை பயன்படுத்தி மட்டுமே அவர்கள் அந்த தீவில் இருந்து வெளியேற முடியும்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: