Home /News /trend /

விண்வெளிக்கே சென்று உணவு டெலிவரி செய்த உபெர் ஈட்ஸ்... ஜப்பானிய கோடீஸ்வரரால் நிகழ்ந்த சாதனை!

விண்வெளிக்கே சென்று உணவு டெலிவரி செய்த உபெர் ஈட்ஸ்... ஜப்பானிய கோடீஸ்வரரால் நிகழ்ந்த சாதனை!

விண்வெளிக்கே சென்று உணவு டெலிவரி செய்த உபெர் ஈட்ஸ்

விண்வெளிக்கே சென்று உணவு டெலிவரி செய்த உபெர் ஈட்ஸ்

விண்வெளியில் தங்களது முதல் உணவு விநியோகத்திற்குப் பிறகு, நிறுவனம் "SPACEFOOD" என்ற விளம்பரக் குறியீட்டின் கீழ் இலாபகரமான சலுகைகளையும் வழங்கியது.

சமீபத்தில் விண்வெளிக்கு உணவு விநியோகம் செய்து வரலாறு படைத்தது Uber Eats டெலிவரி நிறுவனம். ஜப்பானிய பேஷன் அதிபரான யுசாகு மேசாவாவுடன் இணைந்து Uber Eats நிறுவனம், சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள விண்வெளி வீரர்களுக்கு ஜப்பானிய பதப்படுத்தப்பட்ட உணவுகளை அனுப்பி வைத்தது. சர்வதேச விண்வெளி நிலையத்தில் 12 நாள் பணிக்காக சோயுஸ் விண்கலத்தில் யுசாகு விண்வெளிக்குச் சென்றார். இந்த விண்கலம், ஜப்பானிய கோடீஸ்வரருடன், உபெர் ஈட்ஸ் நிறுவனத்தின் சிறப்பு உணவுப் பைகளை எடுத்துச் சென்றது.

அந்த பழுப்பு நிற பையில் கேனில் அடைத்து வைக்கப்பட்ட ஜப்பானிய உணவுகள் வைக்கப்பட்டிருந்தன. வரலாற்று சிறப்புமிக்க இந்த டெலிவரியின் வீடியோ அமெரிக்க உணவு விநியோக சேவை நிறுவனமான உபெர் ஈட்சின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பகிரப்பட்டது. இதில் கோடீஸ்வரர் யூசாகு உபெர் ஈட்ஸ் டெலிவரி பையை எடுத்துக்கொண்டு போர்டல் வழியாக நுழைவதைக் காணலாம். யுசாகுவின் கையிலிருந்து பை மிதந்து வந்து விண்வெளி வீரரை அடைகிறது. மேலும் பையில் இருந்த உணவு கேன் வெளியே வருவதையும் வீடியோவில் காணலாம்.

இந்த வீடியோவை வெளியிட்டதோடு, விண்வெளி வீரர்களுக்கு அனுப்பப்பட்ட உணவுகள் குறித்தும் உபெர் ஈட்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி, உணவு கேன்களில் மிசோவில் வேகவைத்த கானாங்கெளுத்தி, இனிப்பு சாஸில் சமைத்த மாட்டிறைச்சி, மூங்கில் தளிர்களுடன் வேகவைத்த கோழி மற்றும் பிரேஸ் செய்யப்பட்ட பன்றி இறைச்சி ஆகியவை இருப்பதாக தெரிவித்துள்ளது. விண்வெளி வீரர்களுக்கான நிலையான விண்வெளி உணவில் இருந்து இந்த உணவு ஒரு "welcome break" ஆக இருக்கும் என்று Uber Eats வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



விண்வெளியில் தங்களது முதல் உணவு விநியோகத்திற்குப் பிறகு, நிறுவனம் "SPACEFOOD" என்ற விளம்பரக் குறியீட்டின் கீழ் இலாபகரமான சலுகைகளையும் வழங்கியது. இதுகுறித்து நிறுவனம் தெரிவித்துள்ளதாவது, பூமியில் உள்ள மக்கள் இந்த சாதனையை கொண்டாட வேண்டும். இந்த டெலிவரி Uber இன் ஒரு மாபெரும் சாதனையைக் குறிக்கிறது. ஏனெனில் மக்கள் விண்வெளி உட்பட எங்கு சென்றாலும் அவர்கள் விரும்பும் எதையும் கொடுக்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்" எனத் தெரிவித்துள்ளது.

இந்த உணவு நிறுவனத்துடன் இணைந்த கோடீஸ்வரர் யுசாகு, கஜகஸ்தானின் பைகோனூர் காஸ்மோட்ரோமில் இருந்து ஸ்பேஸ்எக்ஸ் தயாரித்த சோயுஸ் விண்கலத்தில் விண்ணுக்குச் சென்றார். பில்லியனரும் தொழில்முனைவோருமான இவர் ஒரு விண்வெளி ஆர்வலர் என்பதை அவரது பயணம் உணர்த்துகிறது. இவர் கடந்த 2018-இல் சந்திரனுக்கு செல்லும் முதல் சுற்றுலா விமானம் குறித்து ஸ்பேஸ்எக்ஸ் அறிவித்த போது, விமானத்தின் அனைத்து இருக்கைகளையும் வாங்கி தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்தார்.

Also read... Corona Vaccination | ஒரே நாளில் 10 முறை கோவிட் தடுப்பூசிகளை போட்டு கொண்டுள்ள நபர்... அதிகாரிகள் விசாரணை!

ஸ்பேஸ்எக்ஸ் அறிவித்த இந்த பயணம் 2023-இல் திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது ISS-ல் அவரது 12 நாள் பயணத்திற்கு யுசாகு எவ்வளவு செலவிட்டார் என்பதை குறித்து அவர் எந்த வித தகவலையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் மதிப்பீடுகளின்படி, அந்தத் தொகை சுமார் 80 மில்லியன் டாலர் இருக்கும் என்று கூறப்படுகிறது. அதாவது தோராயமாக ரூ.608 கோடி இருக்கலாம்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Uber eats

அடுத்த செய்தி