முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / டாக்ஸியில் தவறவிட்ட மொபைல் போனை 8 மாதங்களுக்கு பிறகு திருப்பிக்கொடுத்த டிரைவர் - நெகிழ்ச்சி சம்பவம்!

டாக்ஸியில் தவறவிட்ட மொபைல் போனை 8 மாதங்களுக்கு பிறகு திருப்பிக்கொடுத்த டிரைவர் - நெகிழ்ச்சி சம்பவம்!

ஊபர் டேக்ஸி - மாதிரி படம்

ஊபர் டேக்ஸி - மாதிரி படம்

டிரைவர் தனது போனை திருப்பி அளித்தது, மனிதம் இன்னும் உயிர்ப்போடு தான் இருக்கிறது என்ற நம்பிக்கையை அது அளித்திருப்பதாக தெரிவித்தார்

  • 1-MIN READ
  • Last Updated :

தனது டாக்ஸியில் பயணித்த பெண் தவறவிட்ட மொபைல் போனை 8 மாதங்களுக்கு பிறகு திருப்பி கொடுத்த ஓட்டுநரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லண்டனை சேர்ந்த ஷேய் ஷேட் ( Shay Sade) என்ற பெண் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் உபேர் டாக்ஸியில் பயணித்திருக்கிறார். எதிர்பாராத விதமாக தனது மொபைல் ஃபோனை டாக்ஸியில் தொலைத்திருக்கிறார். இது அவருக்கு நீண்ட நேரத்துக்கு பிறகே தெரியவந்திருக்கிறது. தன் அறை , பேக் என எல்லாவற்றிலும் தேடிப்பார்த்திருக்கிறார். மேலும் வேறு மொபைல் போனில் இருந்து அந்த எண்ணுக்கு அழைத்திருக்கிறார்.

எனினும் அவரால் அந்த மொபைல் போனை தொடர்பு கொள்ள முடியவில்லை. அப்போது தான் அவருக்கு கடைசியாக தனது போன் சார்ஜ் இல்லாமல் இருந்தது நியாபகம் வந்திருக்கிறது. அன்றைய தினம் அவர் நிறைய டாக்ஸியில் பணித்ததால் அவர் எந்த டாக்ஸியில் தனது மொபைல் போனை தொலைத்தோம் என்பது தெரியாமல் இருந்திருக்கிறது.

இந்நிலையில் அந்த பெண்ணின் மொபைல் போன் தன் காரில் இருப்பதை டிரைவர் பார்த்திருக்கிறார். ஆனால் அவரிடம் ஷேய் ஷேடின் வேறு எண் இல்லாததால் அவரால் அந்த மொபைல் போனை திருப்பிக்கொடுக்க முடியவில்லை. இதனையடுத்து அந்த டாக்ஸி டிரைவர் தன்னிடமே ஷேடின் மொபைல் போனை பத்திரமாக வைத்திருந்து ஷேடை எப்போதாவது சந்தித்தால் அளிக்கலாம் என்று முடிவு செய்திருக்கிறார்.

இதனையடுத்து சுமார் 8 மாதங்களுக்கு பிறகு கடந்த ஏப்ரல் 30 ஆம் தேதி எதேச்சையாக ஷேட் மீண்டும் அதே டாக்ஸியில் பயணம் செய்திருக்கிறார். இதனையடுத்து ஷேடை அடையாளம் கண்டுகொண்ட டிரைவர் அவரிடம் மொபைல் போனை திருப்பிக்கொடுத்திருக்கிறார். தனது மொபைல் போன் தொலைந்து விட்டது, இனி எப்போதும் கிடைக்காது என்று மனதளவில் முடிவுக்கு வந்திருந்த ஷேடிற்கு இது மிகப்பெரிய ஆச்சரியமாக இருந்திருக்கிறது. டிரைவருக்கு மனதார நன்றி தெரிவித்து, அவரது செயலுக்கு மிகுந்த பாராட்டு தெரிவித்திருக்கிறரார்.

காரணம் தனது மொபைல் போன் தொலைந்து போனதும், அதனை அந்த டிரைவர் விற்றிருக்க வேண்டும், அல்லது தனது சொந்த பயன்பாட்டிற்கு பயன்படுத்தியிருக்க வேண்டும் என ஷேட் நினைத்தார். ஆனால் அப்படி செய்யாமல் அந்த டிரைவர் தனது மொபைல் போனை திருப்பிக்கொடுத்தை எண்ணி நெகிழ்ச்சியடைந்தார்.

இதற்கு முன் அவர் நிறைய பொருட்களை இது போன்று தொலைத்திருக்கிறார். ஆனால் அது திரும்ப கிடைக்கவில்லை. ஆனால் தற்போது டிரைவர் தனது போனை திருப்பி அளித்தது, மனிதம் இன்னும் உயிர்ப்போடு தான் இருக்கிறது என்ற நம்பிக்கையை அது அளித்திருப்பதாக தெரிவித்தார். இதனையடுத்து உபேர் நிறுவனம் பயணிக்கு அவரது செல்போனை திருப்பிக்கொடுத்த டிரைவரை நினைத்து பெருமையாக இருப்பதாக கருத்து தெரிவித்திருக்கிறது.

First published:

Tags: England, London, Mobile phone, Taxi, Uber