• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • நாடுகள், யூனியன் பிரதேசங்கள், அமைச்சர்கள் பெயரை விவரிக்கும் இரண்டு வயது சிறுவன்!

நாடுகள், யூனியன் பிரதேசங்கள், அமைச்சர்கள் பெயரை விவரிக்கும் இரண்டு வயது சிறுவன்!

மிருத்யுஞ்சய் நாயக்

மிருத்யுஞ்சய் நாயக்

முதலில் ஊரடங்கு காலத்தில் எழுத்துக்கள் மற்றும் எண்களைக் கற்றுக்கொள்ள தொடங்கினார்.

  • Share this:
சுபாம் என்ற புனைப்பெயர் கொண்ட ஒடிசாவின் மிருத்யுஞ்சய் நாயக், இந்தியா புக் ஆஃப் ரெக்கார்டில் இடம்பிடித்துள்ளார். வெறும் இரண்டு வயதாகும் இவர், கலாம் உலக புத்தக சாதனையையும் படைத்துள்ளார்.

சில நொடிகளில் பல நாடுகள், யூனியன் பிரதேசங்கள், தலைநகரங்கள், நகரங்கள் மற்றும் கண்டங்களை பெயர்களை சரியாக சொல்லும் திறமையை மிருத்யுஞ்சய் பெற்றுள்ளார். அவர் தனது கூர்மையான நினைவாற்றல் மற்றும் புத்திசாலித்தனத்தின் காரணமாக இரண்டு சாதனைகளை படைத்துள்ளார். அவரது தனித்துவமான திறமையை ஏராளமானோர் பாராட்டியுள்ளனர். பல்வேறு நாடுகளின் பிரதமர்கள், அமைச்சர்கள், கவுன்சில்கள் மற்றும் நாணயங்களையும் கூறுகிறார்.

பொது அறிவு தகவல்களில் சிறந்து விளங்குவது மட்டுமின்றி, ஸ்லோகம் மற்றும் மந்திரங்களை சரளமாக ஓதுவதிலும் வல்லவராக இருக்கிறார். இதுகுறித்து பேசிய அவரது தந்தை பிரதாப் நாயக், ஊரடங்கின் போது “ஊரடங்கின் போது வீட்டில் அனைவரும் ஒன்றாக இருந்தபோது அவனது திறமையை நாங்கள் கவனித்தோம், எனது மகனிற்கு கூர்மையான நினைவாற்றல் இருப்பதை கவனித்த நாங்கள், அதற்கேற்ற பொது அறிவு தகவல்களை கற்றுக்கொடுத்து அவனை தயார் படுத்தினோம்.

முதலில் ஊரடங்கு காலத்தில் எழுத்துக்கள் மற்றும் எண்களைக் கற்றுக்கொள்ள தொடங்கினார். முதல் நாளிலிருந்தே எனது மகனிற்கு சிறந்த நியாபகத்திறன் இருப்பதை நான் கண்டறிந்தேன். அதன் பின்னர் தான் பொது அறிவு தகவல்களை கற்றுக்கொடுத்தேன். நாங்கள் கற்றுக்கொடுப்பதை கவனித்து பின்னர் தன்னிச்சையாக அவரே அதனை கூறுவார். மேலும் அனைத்தையும் மிகவும் எளிதாகவும், விரைவாகவும் கற்று கொண்டான். முக்கிய நாடுகள், அவற்றின் தலைநகரங்கள், முக்கிய தலைவர்களின் பெயர்களை நான் கற்றுக் கொடுத்தேன், நான் கற்றுக்கொடுத்த அனைத்து விஷயங்களையும் சரியாக நியாபகத்தில் வைத்திருந்தான்.

Also read... வேலை கிடைக்காத விரக்தியில் ரயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்ற இளம்பெண் - காப்பாற்றிய டிரைவர்!

அதனை பார்த்து வியந்த நாங்கள் தொடர்ந்து அவனது விருப்பப்படி கற்பிக்கிறோம் கூறியுள்ளார். இந்த கற்பிக்கும் பணியில் சுபாமின் தாய் தீபாஞ்சலி நாயகும் முக்கிய பங்காற்றி வருகிறார். கலாம் உலக சாதனை புத்தகத்தில் ஒடிசாவிலிருந்து, ஐந்து வயதுக்குட்பட்ட வயதினருக்கு நடந்த போட்டியில் சுபாம் மட்டுமே இடம் பெற்றுள்ளார். அவர் தற்போது ஏசியன் புக் ஆஃப் ரெக்கார்டில் இடப்பெற பயிற்சி பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக சிறுமி ஒருவர் 36 புத்தகங்களை 1 மணி நேரம் 45 நிமிடங்களில் படித்து முடித்து உலக சாதனை செய்துள்ளார். இந்த சாதனைக்காக லண்டன் உலக சாதனை புத்தகத்திலும் ஆசியா சாதனைப் புத்தகத்திலும் சிறுமி கியாரா கவுர் இடம் பிடித்துள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் 13-ம் தேதியன்று 36 புத்தகங்களை இடைவிடாமல் 105 நிமிடங்களில் படித்ததற்காக ‘குழந்தை மேதை’ என்று லண்டன் உலக சாதனை புத்தகம் கியாரா கவுரை பாராட்டி உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: