TWO WOMEN JUMPED FROM MOVING TRAIN VIDEO GOES VIRAL SKV
ஓடும் ரயிலில் இருந்து கீழே குதித்து இறங்கும் பெண்கள்... இணையத்தில் குவியும் எதிர்ப்புகள் (வீடியோ)
ஓடும் ரயிலில் இருந்து கீழே குதித்த பெண்கள்
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் ஆபத்தை உணராது ஓடும் ரயிலில் இருந்து கீழே குதித்து இறங்கிச் செல்லும் பெண்களின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. பலரும் இது போன்ற செயல்கள் ஒரு தவறான உதாரணம் என கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
படியில் பயணம்... நொடியில் மரணம்... இது ஓடும் பேருந்துக்கு மட்டும் அல்ல. ஓடும் ரயில் வண்டிக்கும் இந்த விழிப்புணர்வு வாசகம் பொருந்தும். எனினும் ஆபத்தை உணராமல் சிலர் செய்யும் அலட்சிய பயணம் பலருக்கும் அச்சத்தை தரும் ஒன்றாகவுள்ளது.
நேரத்திற்கு செல்ல வேண்டும் என்பதனாலும், ரயில் கட்டணம் குறைவாக இருப்பதனாலும் பெரு நகரங்களில் உள்ளூர் ரயில் பயன்பாட்டை மக்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர். அவ்விதம் பயன்படுத்தும் போது சிலர் அஜாக்கிரதையாக ரயில் நிற்ப்பதற்குள் கீழே இறங்குவது, ஏறுவது, வாயிலில் கூட்டமாய் நின்று கொண்டிருப்பது என அலட்சியமாக இருக்கின்றனர்.
இதனிடையே தற்போது இரு பெண்கள் ரயில் நிற்பதற்குள் பொது வாயில் வழியே கீழே இறங்கிச் செல்லும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதில் ரயிலின் வாசலில் இரண்டு பெண்கள் உட்கார்ந்து கொண்டு தங்களது நிறுத்தம் வந்தவுடன் ரயில் நிற்பதற்கு முன்னதாகவே கீழே இறங்கிச்செல்கின்றனர். மேற்கு வங்காள மாநிலத்தின் தலைநகரமாக விளங்கும் கொல்கத்தாவில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இணையவாசிகள் பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.