கொரோனா லாக்டவுன்; ஓராண்டாக தெருநாய்களுக்கு உணவளிக்கும் 2 பெண்கள்!

தெரு நாய்களுக்கு உணவளிக்கும் பெண்கள்

ஜம்மு காஷ்மீரில் கொரோனா லாக்டவுனால் உணவின்றி தவிக்கும் தெருநாய்களுக்கு கடந்த ஓராண்டாக 2 பெண்கள் உணவளித்து வருகின்றனர்.

 • Share this:
  நாடு முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ், கோடிக்கணக்ககான மக்களின் வாழ்வாதாரத்தை புரட்டிப்போட்டுள்ளது. லட்சக்கணக்கானோர் வேலையை இழந்துள்ளனர். கடன் வாங்கி தொழிலை தொடங்கியவர்களின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது. பெரும்பாலானோர் அன்றாடத் கூலித் தொழிலாளியாக இருப்பதால், கொரோனா அவர்களை பசியின் கோரப்பிடிக்கு தள்ளியுள்ளது. அரசு மற்றும் தன்னார்வலர்கள் வழங்கும் நிவாரணப் பொருட்களை மட்டுமே அவர்கள் நம்பியிருக்கின்றனர். இதுஒருபுறம் இருக்க தெருநாய்களின் நிலை மிகவும் பரிதாபத்துக்குரியதாக மாறியுள்ளது.

  லாக்டவுனால் ஹோட்டல்கள், ரெஸ்டாரன்டுகள் ஆகியவை மூடிக்கிடப்பதால், உணவுக்கு வழியின்றி பசியில் வாடி வருகின்றன. மனிதாபிமானம் மிக்கவர்கள் தங்களால் இயன்ற உணவுப் பொருட்களை தெரு நாய்களுக்கு கொடுக்கின்றனர். நாக்பூரைச் சேர்ந்த ரஞ்ஜீத் நாத் 30 முதல் 40 கிலோ பிரியாணியை சமைத்து தெரு நாய்களுக்கு கொடுத்துள்ளார். டெல்லியில் பெண் ஒருவர் குளிரால் வாடும் நாய்களுக்கு சாக்குப் பைகளைக் கொண்டு கூடாரம் அமைத்துக் கொடுத்துள்ளார். அங்கு ஏராளமான தெரு நாய்கள் தங்கிக் கொள்கின்றன.

  இதேபோல் ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த 2 பெண்கள் கடந்த ஓராண்டாக உணவின்றி தவிக்கும் தெருநாய்களுக்கு உணவுகளை வழங்கி வருகின்றனர். உதம்பூர் பகுதியில் வசித்து வரும் நேகா சர்மா மற்றும் பிரணவி சிங் ஆகியோர் இந்த மனிதநேயமிக்க பணியை தன்னலம் கருதாது செய்து வருகின்றனர். நாள்தோறும் 20 முதல் 25 நாய்களுக்கு தேவையான ரொட்டி, அரிசி சாதம், பால், தயிர் ஆகிய உணவுகளைக் கொடுக்கின்றனர்.

  இதுகுறித்து பேசிய இருவரும், தங்கள் வீட்டில் எப்போதும் ஒரு ரொட்டி மீதம் வைத்திருப்போம். வீட்டின் முன் வந்து நிற்கும் எந்தவொரு நாயும் பசுயுடன் போகாது. நாய்களுக்கு உணவளிப்பது நமது சமூக கடமை என தெரிவித்துள்ள அவர்கள், மக்களும் தெரு நாய்களை விரட்டாமல் அவற்றுக்கு உணவளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  நாள் ஒன்றுக்கு காலை மற்றும் மாலை என இரு வேளைகளிலும் நாய்களுக்கு உணவளிக்கின்றனர். 2012 ஆம் ஆண்டு Livestock எடுத்த புள்ளி விவரங்களின்படி, நாடு முழுவதும் ஒரு கோடிக்கும் மேலான தெருநாய்கள் இருக்கின்றன.

  10 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட இந்தப் புள்ளி விவரம், தற்போது இரட்டிப்பாகி இருப்பதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. இந்திய விலங்குகள் நல வாரியம் நாடு முழுவதும் உள்ள நகராட்சிகளுக்கு விடுத்துள்ள அறிவிப்பில், விலங்குகள் மற்றும் பறவைகள் உணவின்றி தவிப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

  தெருநாய்கள் மற்றும் பறவைகள் இறந்து கிடந்தால் உடனடியாக அகற்றுவதற்குரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவற்றால் வேறு வைரஸ் நோய்கள் பரவுவதற்கும் வாய்ப்புகள் உள்ளத்தாக கூறியுள்ளது.
  Published by:Vijay R
  First published: