• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • 6,300 அடி மலை உச்சியில் ஊஞ்சல் விளையாட்டு... பெண்களுக்கு நேர்ந்த விபரீதம் - அதிர்ச்சி வீடியோ

6,300 அடி மலை உச்சியில் ஊஞ்சல் விளையாட்டு... பெண்களுக்கு நேர்ந்த விபரீதம் - அதிர்ச்சி வீடியோ

வைரல் வீடியோ

வைரல் வீடியோ

ரஷ்யாவில் 6,300 அடி உயரம் கொண்ட குன்றின் மேல் அமைக்கப்பட்ட ஒரு ஊஞ்சலில் ஆடிக்கொண்டிருந்த இரண்டு பெண்கள் எதிர்பாராத விதமாக கீழே விழுந்தனர்.

  • Share this:
உலகில் பல சாகச விளையாட்டுகளுக்கு எல்லையே இல்லாமல் போனது. பெரிய பள்ளத்தாக்கில் ஒரே ஒரு கயிறு கட்டி நடப்பது. இரு மலை உச்சியை இணைக்கும் வகையில் இடைவெளி விட்டு பொருத்தப்பட்டிருக்கும் பலகையின் மேல் நடப்பது. இதுதவிர, மலையில் உச்சியில் இருந்து குதிக்கும் மங்கி ஜம்ப் விளையாட்டு, இதில் ஒருவரது காலில் மட்டும் கயிறு கட்டப்பட்டிருக்கும். இதுபோன்ற எண்ணற்ற விபரீத விளையாட்டுகள் உள்ளன. இந்த சாகச விளையாட்டுகளை மேற்கொள்ளவதில் மக்களும் அதிக ஆர்வம் காட்டி வருகின்றன. ஆனால், இந்த விளையாட்டில் ஏதேனும் விபரீதம் நடந்தால் என்ன நடக்கும்? அப்படியொரு அதிர்ச்சி வீடியோ தான் இப்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

ரஷ்யாவில் 6,300 அடி உயரம் கொண்ட குன்றின் மேல் அமைக்கப்பட்ட ஒரு ஊஞ்சலில் ஆடிக்கொண்டிருந்த இரண்டு பெண்கள் எதிர்பாராத விதமாக கீழே விழுந்தனர். இந்த சம்பவம் காண்போரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இது தொடர்பாக வெளியான அந்த வீடியோவில், ரஷ்ய குடியரசான தாகெஸ்தானில், காஸ்பியன் கடல் அருகே அமைந்துள்ள சுலக் பள்ளத்தாக்கின் மேல் கட்டப்பட்டுள்ள ஊஞ்சலில் அமர்ந்திருக்கும் பெண்கள் ஜோடியை காட்டுகிறது. அதாவது, ஊஞ்சல் 6,300 அடி உயரம் கொண்ட பள்ளத்தாக்கின் ஓரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் ஊஞ்சல் ஆடும் போது அந்தரத்தில் பறப்பது போல உணர்வர்.

Also Read : 90s கிட்ஸ்களின் கனவுக்கன்னி ஸ்ரேயா தற்போது என்ன செய்கிறார் தெரியுமா?

மேலும் ஊஞ்சல் ஆடும் நபர்களுக்கு எந்த ஒரு பாதுகாப்பு கவசமும் வழங்கப்படவில்லை. இரு பெண்களும் உற்சாகமாக ஊஞ்சலில் அமர்ந்து விபரீத விளையாட்டை மேற்கொண்டனர். ஊஞ்சலின் பின்னால் இருந்த ஒரு நபர் அதனை வேகமாக நகர்த்தினார். மூன்றாவது முறை வேகமாக நகர்த்தும் போது, ஊஞ்சல் நேராக செல்லாமல் சற்று பக்கவாட்டில் பறக்க ஆரம்பித்தது. பக்கவாட்டில் பறந்த வேகத்திலேயே மீண்டும் திரும்பிய ஊஞ்சல் இருக்கை, ஊஞ்சல் கம்பியில் வேகமாக இடித்தது. இந்த அதிர்ச்சியில் இருக்கை இருந்த பெண்கள் இருவரும் பள்ளத்தாக்கில் இருந்து கீழே விழுந்தனர். இந்த கொடூரமான விபத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.



இதயத்தை நொறுக்கும் இந்த வீடியோ 1 லட்சத்துக்கும் மேற்பட்ட முறை இணையத்தில் பார்க்கப்பட்டது மற்றும் சம்பவத்தில் அதிர்ச்சியடைந்த சக யூசர்களிடம் இருந்து ஏராளமான கருத்துகள் குவிந்தன. இந்த அதிர்ச்சி சம்பவத்தால் பலர் திகிலடைந்த நிலையில், ஊஞ்சலில் சரியான பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாததை பல ட்விட்டர் யூசர்கள் சுட்டிக்காட்டினர்.







அபாயகரமான வீழ்ச்சியில், குன்றின் விளிம்பிற்கு அப்பால் அமைந்துள்ள ஒரு மர பலகையில் பெண்கள் இருவரும் கண்டுபிடிக்கப்பட்டனர். அதிர்ஷ்டவசமாக உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லாமல், காயங்கள் மற்றும் கீறல்களுடன் இருவரும் உயிர்தப்பினர். மற்றும் அவர்களது உறவினர்களால் மீண்டும் பாதுகாப்பிற்கு கொண்டு வரப்பட்டதாக டெய்லி மெயில் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த சம்பவத்திற்கு பிறகு ரஷ்யாவின் ஜுபுட்லி கிராமத்திற்கு அருகே அமைத்துள்ள பல பள்ளத்தாக்கு ஊஞ்சல்களின் பாதுகாப்பு குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து தாகெஸ்தானில் உள்ள சுற்றுலா அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி, ஸ்விங் விளையாட்டில் அதன் பாதுகாப்பு தரத்தை உரிய நபர்கள் பூர்த்தி செய்யவில்லை. எனவே பெண்கள் இருவரும் ஸ்விங் இருக்கையில் இருந்து விழுந்தனர். உயிருக்கு மற்றும் ஆரோக்கியத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கும் எந்த விளையாட்டை உறுதி செய்வதற்காக சட்ட அமலாக்க முகவர் மற்றும் பிற சேவைகளால் தொடர்புடைய விசாரணைகள் நடத்தப்படுகின்றன என்று அந்த அறிக்கை மேலும் கூறுகிறது.

Also Read : ஆபாச பட புகார்... பிரபல நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் கைது

செய்தி ஊடகத்தின்படி, இந்த சம்பவத்தால் அதிர்ச்சியடைந்தாலும் பெண்கள் இருவருக்கும் பலத்த காயம் எதுவும் ஏற்படவில்லை என்று கூறியுள்ளது. ஊஞ்சல் அதிகபட்ச உயரத்தில் இருக்கும்போது பெண்கள் நழுவியிருந்தால் என்ன நடந்திருக்கும் என்று கற்பனை செய்வது மிகவும் அதிர்ச்சியாக இருப்பதாக அவர்கள் மேலும் குறிப்பிட்டுள்ளனர். உள்ளூர் காஸ்பெகோவ்ஸ்கி கவுன்சில் இதுபோன்ற செங்குத்து ஊஞ்சல் விளையாட்டை அகற்றக் வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளதாகவும் செய்தி அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பாவின் ஆழமான பள்ளத்தாக்காகக் கருதப்படும் சுலக் பள்ளத்தாக்கு, அமெரிக்காவின் கிராண்ட் கேன்யனை விட 63 மீட்டர் ஆழமும், ஐரோப்பாவின் டாடா ரிவர் கேன்யன் விட 620 மீட்டர் ஆழமும் கொண்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vijay R
First published: