இமைக்கும் நேரத்தில் சிறுத்தையிடமிருந்து தப்பிய இளைஞர்கள்! வைரல் வீடியோ

இமைக்கும் நேரத்தில் சிறுத்தையிடமிருந்து தப்பிய இளைஞர்கள்! வைரல் வீடியோ
  • Share this:
காட்டுப் பாதையில் இருசக்கர வாகனத்தில் சென்றவர்களைத் தாக்க முயன்ற சிறுத்தையிடம் நொடியில் தப்பிய இளைஞர்களின் வீடியோ வைரலாகிறது.

இந்திய வனத்துறை அதிகாரி(IFS) சுஸ்தானா நந்தா இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில்இரு சக்கர வாகனத்தில் இருவர் செல்கின்றனர். சாலையோரத்தில் உள்ள புதரில் மறைந்திருக்கும் சிறுத்தை அவர்களைத் தாக்க முயற்சிக்கிறது. நொடி பொழுதில் அந்த சிறுத்தையிடமிருந்து பைக்கின் பின்புறம் அமர்ந்திருப்பவர்கள் தப்பினர். 12 வினாடிகள் ஓடும் அந்த வீடியோ பார்ப்பவர்களை மிரளவைத்துள்ளது.

இதனை காரில் இருப்பவர் ஒருத்தர் வீடியோ எடுத்து உள்ளார். புதரில் சிறுத்தை பதுங்கிருப்பதை கவனித்த அவர் ஓரமாக நின்று வீடியோ எடுத்துள்ளார். இதை கவனிக்காமல் பைக்கில் வந்தவர்கள் கடந்து சென்றதால் சிறுத்தை அவர்களைத் தாக்க முயற்சி செய்தது.


இந்த வீடியோவை பகிர்ந்த வனத்துறை அதிகாரி, “அந்த சிறுத்தை எப்படி அவர்களை விட்டது. இருசக்கரவாகனத்தில் செல்பவர் அது தனது பாதை என்று நினைத்து செல்லும் போது, அந்த பாதைக்கு உண்மையான உரிமையாளரான சிறுத்தைக்கு வழிவிட நாங்கள் காத்திருந்தோம். இதுவே அவரது கடைசி சவாரியாக இருந்து இருக்கும். காட்டிக்கு மரியாதை கொடுக்க கற்று கொள்ளுங்கள்“ என்றுள்ளார்.வனத்துறை அதிகாரியின் இந்த பதிவிற்கு இது ஒரு இளம் சிறுத்தை அதனால் தான் அவர்கள் தப்பினர். இதுவே கொஞ்சம் வயது முதிர்ந்த சிறுத்தையாக இருந்தால் தெரியும் இருசக்கர வாகன ஓட்டிகளின் நிலைமை என்று பதிவிட்டுள்ளனர்.
First published: November 18, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்