இமயமலையில் கண்டுபிடிக்கப்பட்ட 2 புதிய வகை பிரமாண்ட பறக்கும் அணில்கள்

அணில்

தற்போது இமயமலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள 2 பறக்கும் அணில்களும் பூனைகள் போன்ற அளவில் உள்ளதாக விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

 • Share this:
  இமயமலையில் இருந்து விஞ்ஞானிகள் பிரம்மாண்டமான இரண்டு புதிய பறக்கும் அணில் வகைகளை கண்டுபிடித்துள்ளனர். பறக்கும் அணில் உலகின் மிக அரிதான மற்றும் குறைவாக ஆய்வு செய்யப்பட்ட பாலூட்டிகளில் ஒன்றாக கருதப்படுகிறது. பறக்கும் அணில் வகை இருப்பதை விஞ்ஞானிகள் ஏற்கனவே அறிந்திருந்தனர். இந்நிலையில் தற்போது அதை ஹை ஹிமாலயாஸில் (high Himalayas) ஆஸ்திரேலியா மற்றும் சீனாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இதன் அறிவியல் பெயர் யூபெடாரஸ் சினிரியஸ் (Eupetaurus cinereus) ஆகும். இது "கம்பளி பறக்கும் அணில்" (woolly flying squirrel) என்றும் அழைக்கப்படுகிறது.

  தற்போது இமயமலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள 2 பறக்கும் அணில்களும் பூனைகள் போன்ற அளவில் உள்ளதாக விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்துள்ளனர். கம்பளி அணில் பொதுவாக 16,000 அடி உயரத்தில் அமைந்துள்ள கரடுமுரடான இமயமலை வாழ்விடத்தில் காணப்படுகிறது. இது 1994ம் ஆண்டில் வடக்கு பாகிஸ்தானில் மீண்டும் கண்டுபிடிக்கப்படும் வரை சுமார் 70 ஆண்டுகளாக அழிந்து விட்டதாக நம்பப்பட்ட மிகப்பெரிய அணில் இனங்களில் ஒன்றாகும். ஆனால் அருங்காட்சியக மாதிரிகள் மற்றும் யூபெட்டரஸின் வெளியிடப்பட்ட பதிவுகளை கவனமாக ஆய்வு செய்த பின், விஞ்ஞானிகள் வெவ்வேறு பகுதிகளில் இந்த இனம் இருக்க கூடும் என்பதை தெரிந்து கொண்டனர்.

  Also Read : நெபுலாவின் கண்கவர் புகைப்படத்தை கடற்பசுக்களோடு ஒப்பிட்ட நாசா: ஆச்சர்யத்தில் நெட்டிசன்கள்!

  இதில் இமயமலை - வடக்கு பாகிஸ்தான் மற்றும் வடமேற்கு இந்தியா குறிப்பாக உத்தரகண்ட்; தென்-மத்திய திபெத், வடக்கு சிக்கிம் மற்றும் மேற்கு பூட்டான்; மற்றும் வடமேற்கு யுன்னன், சீனா உள்ளிட்ட இடங்கள் அடக்கம். woolly flying squirrel-ன் மறு கண்டுபிடிப்புக்கு பிறகு, இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம் அணில் "அழிவின் விளிம்பில் இருக்கும் ஆபத்தான உயிரினம்" என்று வகைப்படுத்தியது. இருப்பினும், இந்தியா, திபெத் மற்றும் நேபாளம் முழுவதும் இருக்கும் இமயமலை பகுதியில் விஞ்ஞானிகள் அணில்கள் தொடர்பான ஆய்வை துவங்கும் வரை கம்பளி பறக்கும் அணில் பற்றிய விழிப்புணர்வு மிக குறைவாகவே இருந்தது.

  சமீபத்தில் இமயமலையின் மிக உயரமான சில இடங்களில் ஆயிரக்கணக்கான மைல்கள் தொலைவில் வாழும் 2 தனித்துவமான கம்பளி பறக்கும் அணில் இருப்பதை விஞ்ஞானிகள் குழு கண்டறிந்துள்ளது. இவற்றிற்கு திபெத்திய கம்பளி பறக்கும் அணில் (Tibetan woolly flying squirrel) மற்றும் யுன்னன் கம்பளி பறக்கும் அணில் (Yunnan woolly flying squirrel) என்று பெயரிடப்பட்டுள்ளது. இவற்றின் விவரங்கள் மே 31 அன்று ஆக்ஸ்போர்டு அகாடமிக்'ஸ் ஜுலாஜிக்கல் ஜர்னல் ஆஃப் தி லின்னியன் சொசைட்டியில் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இந்திய இமயமலையின் பகுதிகள் குறிப்பாக சிக்கிமைச் சுற்றியுள்ளவை, இந்த மிக அரிதான பாலூட்டிகளின் தாயகமாக இருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

  Also Read : 28 மனைவிகள் முன் 37-வது திருமணம் செய்த பலே தாத்தா - வைரல் வீடியோ

  இந்த புதிய உயிரினங்களைக் கண்டுபிடித்த குழுவில் விஞ்ஞானிகள் ஒரு பகுதியாக இருந்த ஆஸ்திரேலிய அருங்காட்சியகத்தின் கூற்றுப்படி, கம்பளி பறக்கும் அணில் 3 அடி நீளமும் 2.5 கிலோ எடையும் கொண்டதாக இருக்கலாம். இந்தியா, பூட்டான் மற்றும் திபெத்தை ஒட்டிய இமயமலைப் பகுதியில் திபெத்திய கம்பளி பறக்கும் அணில் வாழ்கிறது என்று இந்த ஆராய்ச்சி குறிப்பிடுகிறது, அதேசமயம் யுன்னான் கம்பளி பறக்கும் அணில் தென்மேற்கு சீனாவின் யுன்னான் மாகாணத்தை பூர்வீகமாகக் கொண்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  கம்பளி அணில் இயற்கையில் டார்க் மற்றும் கிரெயிஷ் பிரவுன் (grayish-brown) நிற ரோமங்களைக் கொண்டிருக்கிறது. இது அவற்றின் சுற்றுப்புறங்களுடன் உருமறைப்புக்கு உதவுகிறது. இந்த நிற ரோமத்தை கொண்டிருப்பதால் இதை கண்டறிவதில் மேலும் சிரமம் ஏற்படுகிறது. இவை உலகின் மிகப் பெரிய அணில்கள், எனவே அவற்றின் விஞ்ஞானப் பெயர்களைப் பெறுவதற்கு 2021 ஆம் ஆண்டு வரை எடுத்திருப்பது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது.

  இந்த 2 புதிய அணில்கள் அழகாகவும், மென்மையாகவும் இருப்பவை. இவை உலகின் ஹை ஹிமாலயாஸ் மற்றும் திபெத்திய பீடபூமியில் வாழ்கின்றன என்று ஆஸ்திரேலிய அருங்காட்சியகத்தின் தலைமை விஞ்ஞானி பேராசிரியர் கிறிஸ்டோபர் ஹெல்கன் தெரிவித்தார். மேலும் இதற்கு "பறக்கும் அணில்" என்று பெயர் வைக்கப்பட்டிருந்தாலும் இவை பறக்காது. பாறைகள் மற்றும் பாறைகளுக்கு இடையே தங்கள் முன் மற்றும் பின் கால்களுக்கு இடையில் நீட்டப்பட்ட தோலைப் பயன்படுத்தி சறுக்குகின்றன என்றும் தெரிவித்தார்.
  Published by:Vijay R
  First published: