குடும்பமே மறுத்த நிலையில் கொரோனாவால் இறந்த இந்து நபருக்கு இறுதிச்சடங்கு செய்த முஸ்லீம் சகோதரர்கள்...!

குடும்பமே மறுத்த நிலையில் கொரோனாவால் இறந்த இந்து நபருக்கு இறுதிச்சடங்கு செய்த முஸ்லீம் சகோதரர்கள்...!

கொரோனாவால் இறந்த இந்து நபருக்கு இறுதிச்சடங்கு செய்த முஸ்லீம் சகோதரர்கள்

மாநிலம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்த நோயாளிகளின் உடல்களால் மயானம் நிரம்பி வழிகிறது.

  • News18
  • Last Updated :
  • Share this:
மனிதாபிமான அடிப்படையில், இரண்டு இளம் முஸ்லீம் சகோதரர்கள் தெலுங்கானாவில் கொரோனா வைரஸால் இறந்த ஒரு இந்து நபரின் உடலின் இறுதி சடங்குகளைச் செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தெலுங்கானா மாநிலத்தின் பெடா கோடப்கல் மண்டலத்தில் உள்ள கட்டேபள்ளி கிராமத்தில் நடந்துள்ளது. மாநிலம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்த நோயாளிகளின் உடல்களால் மயானம் நிரம்பி வழிகிறது. மேலும், உறவினர்கள் கூட இறந்தவர்களின் இறுதி சடங்குகளை செய்ய விரும்பாத நேரத்தில், இறந்த நபரின் இறுதி சடங்குகளைச் செய்வதன் மூலம், இரு முஸ்லீம் சகோதரர்களும் வகுப்புவாத நட்பிற்கு ஒரு முன்மாதிரியாக திகழ்ந்துள்ளனர்.

அதன்படி கொரோனாவால் உயிரிழந்த நபரின் பெயர் மொகுலையா, இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு நோய்வாய்ப்பட்டதை தொடர்ந்து, எடுத்துக்கொண்ட பரிசோதனையில் தனக்கு கொரோனா இருப்பது தெரியவந்தது. நோயறிதலைத் தொடர்ந்து, அவர் பன்சுவாடாவில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் அவருக்கு கொடுக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்கவில்லை. இதையடுத்து மருத்துவமனையில் தான் அவர் தனது இறுதி மூச்சினை விட்டார். அவரது மறைவு குறித்து குடும்ப உறுப்பினர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. ஆனால் வைரஸ் தொற்று தங்களுக்கும் பரவி விடுமோ என்ற பயத்தில் மொகுலையாவின் குடும்ப உறுப்பினர்கள் அவரது உடலை பெற்றுக்கொள்ளவோ, இறுதி சடங்குகளை செய்யவோ மறுத்துவிட்டனர்.

Also read... கோவிட்-19: தடுப்பூசி போடுங்க, ஃப்ரீயா 2 கிலோ தக்காளி வாங்கிட்டு போங்க - சத்தீஸ்கர் அதிகாரிகளின் புது ஐடியா!

அப்போதுதான் இறந்தவரின் இறுதி சடங்குகளை செய்ய ஷாஃபி மற்றும் அலி என்ற இரண்டு சகோதரர்கள் முன்வந்துள்ளனர். மொகுலையாவுடன் இவர்கள் எந்த இரத்த உறவையும் கொண்டிருக்கவில்லை என்றாலும், ஆம்புலன்ஸ் ஓட்டும் இரு சகோதரர்களும் அவரது உடலை பன்சுவாடா அருகிலுள்ள இந்து மயானத்திற்கு தங்கள் சொந்த செலவில் எடுத்துச் சென்றனர். அங்கு இந்து முறைப்படி மொகுலையா உடலுக்கு இறுதி சடங்குகளையும் செய்தார்கள். இதனை கண்ட பல உள்ளூர்வாசிகள் ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தியதோடு, இரு சகோதரர்களின் தன்னலமற்ற செயலை அவர்களை பாராட்டி வருகின்றனர். இவர்களின் கருணைச் செயல் இனவாத நல்லிணக்கத்திற்கான வெற்றியாகக் கருதப்படுகிறது.

மற்ற மாநிலங்களை போலவே, தெலுங்கானா மாநிலத்திலும் வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அம்மாநிலத்தில் கடந்த 21ம் தேதி நிலவரப்படி 5,926 பேருக்கு புதிதாக வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அங்கு கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 3.61 லட்சமாக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டு மொத்தம் 42 ஆயிரத்து 853 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அம்மாநிலத்தில் மொத்த கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 1,856 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் தொற்று அதிகரித்து வருவதால் தெலுங்கானாவில் நேற்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஏப்ரல் 20ம் தேதி முதல் இம்மாத இறுதி வரை (ஏப்ரல் 30) இரவுநேர ஊரடங்கு அமலில் இருக்கும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இரவு நேர ஊரடங்கு இரவு 9 மணி முதல் அதிகாலை 5 மணி வரை அமல்படுத்தப்படுகிறது.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: