மும்பையில் கரை ஒதுங்கிய டால்பின் சடலங்கள் - அதிகரிக்கும் உயிரிழப்புக்கான காரணமான புரியாமல் திகைக்கும் மக்கள்

மும்பையில் கரை ஒதுங்கிய டால்பின் சடலங்கள் - அதிகரிக்கும் உயிரிழப்புக்கான காரணமான புரியாமல் திகைக்கும் மக்கள்

டால்பின்

தெற்கு பம்பாயின் பாந்த்ரா பகுதியில் ஒரு டால்பின் சடலம் கரைக்குச் வந்த மறுநாளே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
மும்பையில் கடந்த வியாழக்கிழமை மேலும் இரண்டு இந்தியப் பெருங்கடல் ஹம்ப்பேக் டால்பின்கள் ஒதுங்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த இரண்டு டால்பின்களும் முறையே 4 அடி மற்றும் 5 அடி நீளம் ஆகும். மேலும் அவை மஹிம் மற்றும் ஹாஜி அலி ஆகிய இரண்டு தனித்தனி இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டன. தெற்கு பம்பாயின் பாந்த்ரா பகுதியில் ஒரு டால்பின் சடலம் கரைக்குச் வந்த மறுநாளே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. அழிவின் விளிம்பில் உள்ள இந்தியப் பெருங்கடலின் ஹம்ப்பேக் டால்பின் இயற்கை பாதுகாப்பிற்கான சர்வதேச ஒன்றியத்தின் ஆபத்தான உயிரினங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதால், அதிகரித்து வரும் டால்பின் உயிரிழப்பால் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் வனவிலங்கு நிபுணர்களுக்கு கவலையடைந்த வருகின்றனர்.

இந்த ஆண்டில் மட்டும், குறைந்தது நான்கு கடல் ஹம்ப்பேக் டால்பின்கள் மும்பையில் கரை ஒதுங்கியுள்ளன. அதிலும் பாந்த்ரா பகுதியில் அதிகப்பட்ச சடலங்கள் கரை ஒதுங்கியதாக கூறப்படுகிறது. கடந்த திங்களன்று கஃப் பரேட் அருகே பாந்த்ராவில் ஒரு டால்பின் கரை ஒதுங்கியது.இதையடுத்து, பிரஹன் மும்பை மாநகராட்சியின் பேரழிவு கலத்தால் இறந்த ஹம்ப்பேக் வனத்துறையிடம் தெரிவிக்கப்பட்டது. பின்னர் டால்பின் சடலம் அங்கிருந்து அகற்றப்பட்டு கார்ட்டர் சாலையில் அருகே புதைக்கப்பட்டதாக இந்துஸ்தான் டைம்ஸ் அந்த நேரத்தில் செய்தி வெளியிட்டது.

இந்த ஆண்டு ஜனவரியில், பாந்த்ரா பேண்ட்ஸ்டாண்ட் பகுதிக்கு அருகில் இறந்த டால்பின் சடலம் உள்ளூர் குடிமக்களால் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து இந்த சம்பவம் குறித்து BMC அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. கடந்த ஆண்டும், இதுபோன்ற சில நிகழ்வுகள் அரங்கேறின. இவை மனிதர்களால் வேட்டையாடப்பட்டு கொல்லப்பட்டிருக்கலாம் என கூறப்பட்டது. இருப்பினும், கடந்த ஆண்டு ஊரடங்கு காரணமாக இந்த செயல்பாடுகள் குறைந்ததாக பலர் கூறினர். 2020 ஆம் ஆண்டில், மகாராஷ்டிராவின் கடற்கரையோரத்தில் கடல்சார் டால்பின்களைப் பாதுகாக்கும் திட்டத்தை மகாராஷ்டிரா மேற்கொண்டது. இந்த திட்டத்தின் மூலம் மகாராஷ்டிரா அரசாங்கத்தின் "சதுப்புநில செல்" மகாராஷ்டிர கடற்கரையில் சுமார் 700 கி.மீ. தூரம் வரை பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே இதுபோன்ற சம்பவம் நேர்ந்தது:

2019 ஆம் ஆண்டில், இந்தியன் ஹம்ப்பேக் டால்பின்கள் ஒரு பாட் பாந்த்ரா-வொர்லி கடல்-இணைப்பு பகுதியில் நீந்துவதைக் காண முடிந்தது. இது உள்ளூர் மக்களுக்கும் பாதுகாவலர்களுக்கும் மகிழ்ச்சியைத் தந்தது. ஆனால் சில நாட்களிலேயே உயிருள்ள டால்பின்களை பார்ப்பது மிகவும் அரிதான ஒன்றாக மாறியது. அவற்றின் இறப்புகள் கவலையை ஏற்படுத்தினாலும், இது புதிதாக நடக்கும் நிகழ்வு அல்ல என அப்பகுதி மக்கள் வருத்தம் தெரிவித்தனர். இது குறித்து ஃபர்ஸ்ட் போஸ்டின் 2016 ஆம் ஆண்டு அறிக்கையில், இதுபோன்ற 100 க்கும் மேற்பட்ட சம்பவங்கள் 2015ம் ஆண்டு முதல் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று கூறப்பட்டிருந்தது. கடந்த ஆண்டு, ஜூலை மாதம் பயந்தர் அருகே 8 அடி ஹம்ப்பேக் சடலமாக கரை ஒதுங்கியதும் குறிப்பிடத்தக்கது.

இறப்புகளுக்கு என்ன காரணம்?

இந்துஸ்தான் டைம்ஸின் ஜூலை 2018 அறிக்கையின்படி, டால்பின் சடலங்களின் பிரேத பரிசோதனையில் மூன்று டால்பின்களின் இறப்புக்கு சுவாச நோய்கள் காரணமாக இருந்தது என்று தெரியவந்துள்ளது. பூமியில் மாசு அளவு அதிகரிப்பது நீர்வாழ் பாலூட்டிகளின் சுவாச ஆரோக்கியம் பாதிக்கும் என்று நிபுணர்கள் குறிப்பிட்டனர். இதுகுறித்து 2018 ஆம் ஆண்டில் சதுப்புநில கலத்தில் உதவி கன்சர்வேட்டராக இருந்த மகரந்த் கோட்கே கடல் உயிரினங்களின் இயற்கை வாழ்விடங்களை அழிக்க கடலோர மாசுபாடு ஒரு முக்கிய காரணம் என்று கூறியிருந்தார்.

Also read... முகக்கவசம் அணிந்தது போல் Prank - சுற்றுலாப் பயணிகளின் பாஸ்போர்ட் பறிமுதல்!

இந்த வாரம் கரை ஒதுங்கிய இரண்டு டால்பின்களின் இறப்புக்கு காரணம் என்ன என்பது தெளிவாகத் தெரியவில்லை. திங்களன்று கஃப் பரேட்டில் ரத்தவெள்ளத்தில் கண்டெடுக்கப்பட்ட டால்பின் சடலம்,மீன்பிடி படகில் மோதியதாக உயிரிழந்திருக்கலாம் என வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். எவ்வாறாயினும், பல திமிங்கலங்களின் மரணத்திற்கான சரியான காரணத்தை ஒருபோதும் கண்டறிய முடியாது. ஏனெனில் சடலத்தின் சிதைந்த நிலை பிரேத பரிசோதனை சாத்தியமான காரணங்களை கண்டறிய உதவாது.

சுற்றுச்சூழல் ஆர்வலரும் வனவிலங்கு மற்றும் நலன்புரி சங்கத்தின் (RAWW) தலைவர் கூறுகையில், டால்பின்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் பலவீனமாக இருப்பதும் அவற்றின் இறப்புக்கு ஒரு காரணமாக இருக்கலாம் என தெரிவித்துள்ளார். இந்த பாலூட்டிகளை மீட்பதற்கு அல்லது பதிலளிப்பதற்கான நிலையான இயக்க முறைமை எங்களிடம் இல்லை. இந்த கடல் பாலூட்டிகளின் இறப்புக்கான சரியான காரணத்தைக் கண்டறிய உடனடியாக பிரேத பரிசோதனை செய்வது மிகவும் முக்கியமானது. இல்லையெனில், உடல்கள் சிதைவடையத் தொடங்குகின்றன என்று கூறியுள்ளார். பிரேத பரிசோதனை குழுக்கள் மற்றும் கால்நடை வல்லுநர்களின் தாமதம் மற்றும் பற்றாக்குறை பெரும்பாலும் நீர்வாழ் விலங்குகளின் இறப்புக்கான காரணமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: