Home /News /trend /

மது போதையில் திருமணம் செய்து கொண்ட 2 ஆண்கள் - அடுத்து தான் செம ட்விஸ்ட்..!

மது போதையில் திருமணம் செய்து கொண்ட 2 ஆண்கள் - அடுத்து தான் செம ட்விஸ்ட்..!

காட்சி படம்

காட்சி படம்

இப்படியெல்லாம் கூட நடக்குமா ? போதையில் திருமணம் செய்துக்கொண்ட இரண்டு ஆண்கள்..

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவதாக நாமெல்லாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், மது அருந்தும் பாரில் திருமணம் ஒன்று நிச்சயிக்கப்பட்டதாக நீங்கள் கேள்விபட்டது உண்டா? ஆச்சரியமோ, அதிர்ச்சியோ அடைய வேண்டாம். கலி காலத்தில் எல்லாம் சாத்தியமே.

தெலுங்கானா மாநிலத்தில் இத்தகைய நிகழ்வு அண்மையில் நடைபெற்றுள்ளது. மது மதியை மயக்கும் என்பதற்கு இந்த நிகழ்வு சான்றாக உள்ளது.

தெலுங்கானா மாநிலம், சங்காரெட்டி மாவட்டத்தின் ஜோகிப்பேட்டை பகுதியைச் சேர்ந்த 21 வயது நபர், அண்மையில் மெடேக் மாவட்டத்தை சேர்ந்த 22 வயது ஆட்டோ ஓட்டுநரை திருமணம் செய்திருக்கிறார். முன்னதாக, இந்த இருவரும் துமாபலாபேட்டை கிராமத்தில் உள்ள மதுக்கடை ஒன்றில் சந்தித்துள்ளனர். அங்கு எதார்த்தமாக இருவரும் பேசித் தொடங்க, உடனடியாக அது நட்பாக மாறியது.

இதைத் தொடர்ந்து, கடந்த மார்ச் மாதத்தில், ஜோகிநாத் குட்டா கோவிலில் 21 வயது நபருக்கு அந்த ஆட்டோ ஓட்டுநர் தாலி கட்டினார். இந்த திருமண நிகழ்வின்போது கூட அந்த இருவரும் கட்டுப்பாடு இல்லாத அளவுக்கு மது அருந்தியிருந்தனர். திருமணத்திற்கு பிறகு, இருவரும் அவரவர் வீடுகளுக்கு சென்று விட்டனர்.

also read : 41 ஆண்டுகளில் ஒருவர் மாறி, ஒருவராக 60 வழக்குகளை தொடுத்த தம்பதியர் - சமரசமாக உச்ச நீதிமன்றம் அறிவுரை!

இதற்கிடையே, அந்த 21 வயது இளைஞர், அண்மையில் ஆட்டோ ஓட்டுநரின் வீட்டுக்கு சென்று, இந்த திருமணம் குறித்து அவரது பெற்றோரிடம் தகவல் தெரிவித்துள்ளார். இதனால், அதிர்ச்சி அடைந்த பெற்றோர், மகனை கூப்பிட்டு விசாரித்துள்ளனர். அப்போது, தாங்கள் இருவரும் அடிக்கடி நேரில் சந்தித்து மது அருந்துவதை வாடிக்கையாகக் கொண்டிருந்தோம் என அவர் கூறியுள்ளார். மேலும், இருவருக்கும் திருமணம் நடந்ததையும் அவர் ஒப்புக் கொண்டார்.

ஆட்டோ ஓட்டுநரின் பெற்றோர் இந்த திருமணத்தை ஏற்கவில்லை. மேலும் அந்த 21 வயது நபரை வீட்டுக்குள் விட மறுத்தனர். இதை தொடர்ந்து, அந்த நபர் காவல் நிலையத்திற்குச் சென்று இதுகுறித்து புகார் அளித்தார். பின்னர், இந்த விவகாரத்தை காவல் நிலையத்திற்கு வெளியே பேசித் தீர்த்துக் கொள்வதாக இரண்டு தரப்பினரும் முடிவு செய்ததால், புகார் மனு திரும்பப் பெறப்பட்டது. இதற்குப் பிறகு, இரு தரப்புக்கும் இடையே சமரசம் ஏற்பட்டதா, இல்லையா என்பது குறித்த தகவல்களை காவல் துறையினர் பகிர்ந்து கொள்ளவில்லை.

also read : தவறுதலாக வேறு விமானத்தில் ஏறிய தம்பதியர்.. அடுத்த என்ன நடந்தது?

தாலி கட்டி மனைவியாக மாறிய 21 வயது நபர், திருமணத்திற்கு முன்பு கூலி வேலை செய்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில், திருமண வாழ்க்கையில் இருந்து பிரிந்து செல்ல அவர் ரூ.1 லட்சம் பணம் கேட்டதாகவும், இறுதியில் ரூ.10,000 கொடுத்து செட்டில்மெண்ட் செய்யப்பட்டதாகவும் தெலுங்கானாவில் இருந்து வெளியாகும் முன்னணி நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இறுதியாக, இரு குடும்பத்தினர் முன்னிலையில் இருவரும் பிரிந்து சென்றனர்.

 
Published by:Tamilmalar Natarajan
First published:

Tags: Trending

அடுத்த செய்தி