செடிகளைச் சாப்பிட்டதால் தெலங்கானாவில் இரண்டு ஆடுகள் கைது!

ஆடுகளின் உரிமையாளர் மீது நகராட்சி அதிகாரிகள் 1000 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.

news18
Updated: September 12, 2019, 8:04 PM IST
செடிகளைச் சாப்பிட்டதால் தெலங்கானாவில் இரண்டு ஆடுகள் கைது!
ஆடு
news18
Updated: September 12, 2019, 8:04 PM IST
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் காவலாளர்களால் இரண்டு ஆடுகள் கைது செய்யப்பட்டுள்ள செய்தி பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 

அந்த ஆடு அரசாங்கள் வளர்த்து வந்த செடிகளை நோட்டமிட்டு தொடர்ந்து வளர விடாமல் சாப்பிடு வந்துள்ளன. இன்று அந்த இரண்டு ஆடுகள் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது கையும் களவுமாக போலீசாரிடம் சிக்கியுள்ளன. தெலுங்கானாவில் ஹுசுராபாத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதனால் ஆடுகளின் உரிமையாளர்களுக்கு நகராட்சி அதிகாரிகள் 1000 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.

இந்த செடிகள் Save The Trees அமைப்பினரால் நடப்பட்டுள்ளது. அவர்கள் வளர்த்து வந்த செடிகள் தொடர்ந்து காணாமல் போவதாக காவல் துறையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


அந்த அமைப்பினர் இதுவரை ஹுசுராபாத் சாலையில் 900 மரச்செடிகளை நட்டுள்ளனர். அதில் 250 செடிகளை மேய்ந்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர்.பின் இந்த வழக்கை தீவிரமாக கண்கானித்து யார் அந்த குற்றவாளிகள் என கண்கானித்துக்கொண்டிருந்த போது 260-வது செடியை மேய வந்தபோது கையும் களவுமாக பிடித்துள்ளது காவல்துறை. பின் ஆடுகளின் உரிமையாளருக்கு தகவல் தெரிவித்து அவர் அபராதத்தை கட்டிய பின் ஆடுகளை அனுப்பி வைத்துள்ளனர்.

Loading...

இப்படி விலங்குகள் கைது செய்யப்படுவது முதல்முறையல்ல. 2015-ம் ஆண்டில் இந்திய அதிகாரிகள் புறாவை பாகிஸ்தானின் உளவாளியாக இருக்குமோ என்ற சந்தேகத்தில் கைது செய்தனர். அதேபோல் மல்வாலா கிராமத்தில் அதாவது பாகிஸ்தான் பார்டரிலிருந்து நான்கு கிலோமிட்டர் தொலைவில் உருது மொழியில் இறக்கைகளில் தகவல்கள் பதியப்பட்டிருந்ததைத் தொடர்ந்து கைது செய்தனர்.

பார்க்க :

எதிர்பார்ப்பை எகிற வைக்கும் பிகில் இசை வெளியீட்டு விழா!

First published: September 12, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...