பைக் சாகசத்தில் ஈடுபட்ட பெண்கள் - இன்ஸ்டாவில் வைரலான வீடியோவால் கடுப்பான போலீஸார்!

பைக் சாகசத்தில் ஈடுபட்ட பெண்கள் - இன்ஸ்டாவில் வைரலான வீடியோவால் கடுப்பான போலீஸார்!

பைக் சாகசத்தில் ஈடுபட்ட பெண்கள்

உத்தரபிரதேசத்தின் காஜியாபாத் மாவட்டத்தை சேர்ந்தவர் இளம்பெண் ஷிவாங்கி தபாஸ். இவரது தோழி ஸ்னேஹா ரகுவன்ஷி (மல்யுத்த வீராங்கனைகள்).

  • News18
  • Last Updated :
  • Share this:
பொதுவாக ஆண்கள் தான் பைக் சாகசத்தில்(Bike stunt) ஈடுபட்டு தங்களது திறமையை ஊரறிய வேண்டும் என்று கெத்து காட்டுவார்கள். ஆனால் இரு பெண்கள் நாடு ரோட்டில் பைக் சாகசத்தில் ஈடுபட்டு அதற்காக அபராதத்தை தண்டனையாக பெற்றுள்ளனர்.

இந்த சம்பவம் உத்திரபிரதேச மாநிலத்தில் நடைபெற்றுள்ளது. ஸ்பாட்டில் பைக் சாகசம் செய்து பின் இடத்தை விட்டு சென்றிருந்தால் கூட இந்த விவகாரம் வெளியே தெரிந்திருக்காது. ஆனால் போக்குவரத்துக்கு விதிமுறைகளை மீறி தாங்கள் பைக்கில் சாகசம் செய்த நிகழ்வை வீடியோவாக படம் பிடிக்க செய்துள்ளனர் இரு பெண்களும்.

குறிப்பிட்ட அந்த வீடியோ இன்ஸ்டாவில் வைரலானதை தொடர்ந்தே இருவரும் காஜியாபாத் போலீஸாரிடம் சிக்கியுள்ளனர். உத்தரபிரதேசத்தின் காஜியாபாத் மாவட்டத்தை சேர்ந்தவர் இளம்பெண் ஷிவாங்கி தபாஸ். இவரது தோழி ஸ்னேஹா ரகுவன்ஷி (மல்யுத்த வீராங்கனைகள்).
இவர்கள் இருவரும் மஞ்சு தேவி மற்றும் சஞ்சய் குமார் சொந்தமான பைக்கை எடுத்து கொண்டு வேடிக்கையாக சில விஷயங்களை ரோட்டில் செய்து வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் வேடிக்கை முற்றி போய், ஹெல்மெட் போன்ற பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் அவர்களுக்கும் பாதுகாப்பு இன்றி, எதிரே வருபவர்களை பற்றிய கவலையும் இல்லாமல் நடு ரோட்டிலேயே பைக் சாகசங்களில் ஈடுபட்டுள்ளனர். இதில் ஒரு சாகசமாக குறிப்பிட்ட பைக்கை ஸ்னேஹா ஓட்ட, அப்படியே அவரது தோளில் உட்கார்ந்தபடியே ஷிவாங்கி தபாஸ் உற்சாகமாக தலையில் தொப்பி அணிந்தபடி ஆரவாரம் செய்துள்ளார்.

இந்த பொறுப்பற்ற செயலின் போது இரு பெண்களுமே சிவப்பு நிற டீ ஷர்ட் மற்றும் கருப்பு டெனிம் பேண்ட்களை அணிந்திருந்தனர். இந்த ஸ்டன்டின் போது இவர்கள் பைக்கிற்கு எதிரே கார் உட்பட சில வாகனங்கள் கடந்து செல்கின்றன, ஆனால் இருவரும் சிறிதும் பதற்றமின்றி சாகசம் செய்வதிலேயே குறியாக இருந்தனர். தங்களின் இந்த சாகசம் அடங்கிய வீடியோவை கெத்து என நினைத்து இன்ஸ்டாவில் ஷேர் செய்துள்ளனர். சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து வைரலான இந்த வீடியோ சமீபத்தில் காஜியாபாத் போலீஸார் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

Also read... அதிக நேரம் சோசியல் மீடியாவில் மூழ்கும் நபர்களுக்கு பற்களை கடித்தல், தூக்கமின்மை போன்ற பிரச்சனைகள் வரலாம் - ஆய்வில் தகவல்!

தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் சாகச நாயகிகள் ஷிவாங்கி தபாஸ் மற்றும் ஸ்னேஹா ரகுவன்ஷி இருவரும் போக்குவரத்து விதிகளை மீறியது உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து காஜியாபாத் போலீசார் பைக் உரிமையாளருக்கு ரூ.17,000 அபராதமும், இரு பெண்களுக்கும் சேர்த்து ரூ.11,000 அபராதமும் விதித்தனர். அனுமதியின்றி பொது இடங்களில் ஸ்டண்ட் செய்வது, தலைக்கவசம் இன்றி வாகனம் ஓட்டியது உள்ளிட்ட பல போக்குவரத்து விதிமுறை மீறல்களின் கீழ் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

மேலும் இதுபோன்ற பொறுப்பற்ற செயல்கள் அபாயகரமான விபத்துகளுக்கு வழிவகுக்கும் என்பதால், அவர்கள் மீது தீவிரமாக நடவடிக்கை எடுப்பதாக போலீசார் குறிப்பிட்டுள்ளனர்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: