ஆன்லைன் மற்றும் சோஷியல் மீடியாக்களில் அவ்வப்போது ஷேர் ஆகும் சில பாசிட்டிவ் வீடியோக்கள் நெட்டிசன்களின் கவனத்தை வெகுவாக ஈர்க்கின்றன. இந்த உலகம் மனிதர்கள் மட்டுமே வாழ படிக்கப்பட்டது இல்லை, நம்முடன் சேர்த்து பல கோடிக்கணக்கான சிறிய மற்றும் பெரிய உயிரினங்கள் மற்றும் விலங்குகள் ஒன்றாக சேர்ந்து வாழ்வதற்காக இருக்கிறது. நவீன கால் வாழ்க்கைமுறை மற்றும் மக்கள்தொகை பெருக்கத்திற்கு ஏற்ப இந்த செட்டப் நிறையவே மாறிவிட்டது என்றாலும் கூட கிராமங்களில் வசிக்கும் மக்களின் வாழ்வோடு விலங்குகளும் ஒன்றி காணப்படுகின்றன.
தவிர கிராமப்புற வாழ்க்கை கட்டமைப்பை பொறுத்த வரை பல விலங்குகள், அம்மக்களின் வாழ்வில் இன்றியமையாத முக்கிய அங்கமாக இருக்கின்றன. மனிதர்கள் காட்டும் பாசத்தை விட டபுள் மடங்கு பாசத்தை விலங்குகள் நம் மீது காட்டும் என்பது கண் கூடான உண்மை. இதை பிரதிபலிக்கும் வகையில் சமீபத்தில் ஆன்லைனில் வெறும் 14 நொடிகளே ஓடக்கூடிய இளம்பெண்ணும் ஆடு ஒன்றும் அடங்கிய வீடியோ ஒன்று மிகவும் வைரலாகி வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள சிறுமி ஒருவர் தன் பள்ளிக்கு செல்லும் போது, வழியில் இருக்கும் ஆடு ஒன்றும் அந்த பள்ளிக்கு செல்லும் இளம் சிறுமியை பின்தொடர்ந்து செல்வது நெட்டிசன்களை வியப்பில் ஆழ்த்தி இருக்கிறது. Dr.Ajayita என்ற ட்விட்டர் யூஸர் ஷேர் செய்துள்ள இந்த வைரல் வீடியோ கிளிப்பானது, இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் அமைந்திருக்கும் கிராமம் ஒன்றின் மலைப் பாதைகள் வழியே நீல நிற பள்ளி சீருடை அணிந்த இளம் சிறுமி முதுகில் பேக்கை மாட்டி கொண்டு தனது பள்ளிக்கு நடந்து செல்லும் காட்சிகளுடன் துவங்குகிறது.
அந்த பள்ளி செல்லும் சிறுமியை தனியாக செல்ல விடாமல், துணையாக ஆடு ஒன்று பின் தொடர்ந்து செல்கிறது. ஆடு பின்தொடர்வதை கண்டு அந்த சிறுமி சற்று வேகமாக நடக்கவோ அல்லது மெதுவாக ஓடவோ முயற்சிக்கும் போது அந்த சிறுமியின் வேகத்திற்கு ஏற்ப ஈடு கொடுத்து அந்த வெள்ளை நிற ஆடும் வேக வேகமாக அவளை பின்தொடர்கிறது. கிட்டத்தட்ட ஒரு பாடிகாட் போல அந்த சிறுமியை பின்தொடர்ந்து செல்கிறது அந்த ஆடு..
Two friends going to school in #HimachalPradesh ❤ pic.twitter.com/BzbhdouvHk
— Dr. Ajayita (@DoctorAjayita) September 20, 2021
இந்த வித்தியாசமான வீடியோவை ட்விட்டரில் ஷேர் செய்துள்ள Dr.Ajayita, இந்த போஸ்ட்டிற்கு "ஹிமாச்சலப் பிரதேசத்தில் பள்ளிக்குச் செல்லும் 2 நண்பர்கள்" என்று கேப்ஷன் கொடுத்துள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன் ஆன்லைனில் ஷேர் செய்யப்பட்டதில் இருந்து, இதுவரை இந்த வீடியோ சுமார் 2,500 லைக்ஸ்களையும், 21,000-க்கும் மேற்பட்ட வியூஸ்களையும் பெற்று இருக்கிறது.
Also read... கால்பந்து விளையாடிய கரடிகள்... ஒடிசாவில் நிகழ்ந்த வைரல் சம்பவம்!
இந்த வீடியோவை ரசித்த நெட்டிசன்கள், சமீபத்தில் ஆன்லைனில் பார்த்தத்திலே இது தான் அழகான வீடியோ மற்றும் இதை விட சிறந்த காட்சி வேறு எதுவும் இருக்க முடியாது என்று கமெண்ட்ஸ் மற்றும் ஷேர் செய்து வருகின்றனர். மற்றொரு யூஸர் இந்த வீடியோவை பார்த்து விட்டு, இதை பார்த்தால் என் பள்ளி நாட்கள் நினைவுக்கு வருகிறது. ஏனென்றால் நாம் பள்ளி செல்லும் போது சில நேரங்களில் என்னை ஒரு நாய் இதே போல பின்தொடர்ந்தது என்று குறிப்பிட்டுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Himachal Pradesh, Viral Video