அமெரிக்காவின் நியூ ஜெர்ஸி மாகாணத்தில் உள்ள கிளிண்டன் நகரில் இருக்கும் மகளிர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இரண்டு பெண் கைதிகள் கர்ப்பம் அடைந்துள்ளனர். மகளிர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த திருநங்கை கைதியுடன் இவர்கள் செக்ஸ் உறவு கொண்டதன் காரணமாக இது நிகழ்ந்துள்ளது.
கிளிண்டன் பகுதியில் உள்ள எட்ன மாஹன் சீர்திருத்த மையத்தில் சுமார் 800 பெண் கைதிகள் உள்ளனர். இவர்களில் 27 பேர் திருநங்கைகள் ஆவர். இதுகுறித்து அமெரிக்க அரசு நிர்வாகத்திற்கு பெண் கைதி ஒருவர் எழுதியுள்ள கடிதத்தில், 2104ம் ஆண்டு வரையில் பரோலில் வெளிவர இயலாத தண்டனையின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பெண் கைதி ஒருவர் தற்போது 5 மாத கர்ப்பத்துடன் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
சிறைக் கைதிகள் சிலர் சிறை வளாகத்தின் பொது இடங்களில் பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர் என்றும், அவர்களைப் பிரித்து வைக்க வேண்டும் என்றும் அந்தக் கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
திருநங்கை தான் காரணம் :
பெண் கைதிகள் இருவர் கர்ப்பம் அடைந்திருப்பதற்கு டெமி மைனர் என்ற திருநங்கை தான் காரணம் என்பது தெரிய வந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அதே சமயம், இந்த பெண்கள் இருவரும் கருத்தொற்றுமை அடிப்படையில் தான் திருநங்கையுடன் செக்ஸ் உறவு கொண்டனர் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மகளிர் சிறையில் திருநங்கைகள் ஏன்?
நியூஜெர்ஸி நகரில் உள்ள ஆண்கள் சிறையில், பெண் கைதி ஒருவர் தவறான பாலின அடையாளத்தின் பேரில் அடைக்கப்பட்டதாகவும், அங்கு அவர் 18 மாதங்கள் ஆண்களுடன் தங்கியிருக்க நேர்ந்ததாகவும் முன்னொரு முறை பிரச்சினை வெடித்தது.
இதனால், கைதிகள் எந்த பாலின அடையாளத்தை வெளிப்படுத்துகிறார்களோ அதன் அடிப்படையில் அவர்களை சிறையில் அடைக்க வேண்டும் என்ற கொள்கை முடிவை நியூ ஜெர்ஸி மாகாண அரசு கடந்த 2021ஆம் ஆண்டில் அமலுக்கு கொண்டு வந்தது. இதன்படி, பிறப்பால் எந்தப் பாலினமாக இருந்தாலும், திருநங்கையாக வாழுபவர்களை பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்யாமலேயே மகளிர் சிறையில் அடைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி திருநங்கை கைதிகள் மகளிர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
Read More : பெண் கர்ப்பம்... ஏலியன் காரணமா? பெண்டகன் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
கைதியின் ஒப்புதல் வாக்குமூலம் :
கர்ப்பம் அடைந்துள்ள பெண் கைதி ஒருவருக்கு ஏற்கனவே குழந்தை இருப்பதாகக் கூறப்படுகிறது. பிளாக்ஸ்பாட் தளம் ஒன்றில், “சுதந்திரம், காதல், கர்ப்பம், சிரமம்’’ என்ற தலைப்பில் அந்தக் கைதி வாக்குமூலமாக ஒரு விஷயத்தை எழுதியிருக்கிறார்.
அந்தப் பதிவில், “நான் இப்போது 3 மாத கர்ப்பிணியாக இருக்கிறேன். எட்ன மாஹன் சிறையில் உள்ள ஒருவருடன் உறவு கொண்டதால் இது நிகழ்ந்துள்ளது. பொதுவாக இந்தச் சிறைச்சாலையானது ‘பலவந்த பாலியல் வன்கொடுமை நடைபெறும் இடம்’ என்று பெயர் பெற்றது. ஆனால், நான் பாலியல் வன்கொடுமை செய்யப்படவில்லை. என்னை யாரும் எதுவும் செய்யும்படி கட்டாயப்படுத்தவில்லை.
இங்குள்ள திருநங்கை ஒருவர் மீது நான் காதல் கொண்டு, கருத்தொற்றுமை அடிப்படையில் செக்ஸ் உறவு வைத்துக் கொண்டதால் தான் இது நிகழ்ந்தது. எனினும், இந்த சிறையில் கருத்தொற்றுமை அடிப்படையிலான உறவும் தடை செய்யப்பட்டிருக்கிறது’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.