• HOME
 • »
 • NEWS
 • »
 • trend
 • »
 • Twitter Trends : நாயை கொன்ற சிறுவர்கள்.. சமைத்து சாப்பிட்ட சிம்பு; ஐ.ஐ.டியில் என்ன நடக்குது? - இன்றைய ட்விட்டர் ட்ரெண்டிங்!

Twitter Trends : நாயை கொன்ற சிறுவர்கள்.. சமைத்து சாப்பிட்ட சிம்பு; ஐ.ஐ.டியில் என்ன நடக்குது? - இன்றைய ட்விட்டர் ட்ரெண்டிங்!

ட்விட்டர் ட்ரெண்டிங்

ட்விட்டர் ட்ரெண்டிங்

இன்றைய தினம் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் IITMadras ,SilambarasanTR ,FridayMotivation , FridayFitness ,FridayThoughts,FridayVibes,AskSushant,PetrolDieselPriceHike,FridayFeeling, JusticeForBruno,PetrolPriceHike ஆகிய ஹேஷ்டேக்குகள் இடம் பிடித்துள்ளது.

 • Share this:
  இன்றைய தினம் ட்விட்டரில் #IITMadras என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகின்றது.

  சென்னை ஐ.ஐ.டி-யில் சாதி ரீதியான பாகுபாடு நிலவுவதாக கூறி உதவிப்பேராசிரியர் ஒருவர் வெளியேறியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சென்னை ஐஐடியில் மானுடவியல் மற்றும் சமூகவியல் துறையில் உதவிப்பேராசிரியராக பணிபுரிந்தவர் விபின் புதியதாத் வீட்டில். 2019-ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த அவர், திடீரென மின்னஞ்சல் மூலம் தனது ராஜினாமா கடிதத்தை ஐஐடி நிர்வாகத்திற்கு அனுப்பியுள்ளார்.

  அதில், தான் பணியில் சேர்ந்த காலம் முதலே பல்வேறு காலக்கட்டங்களில் சாதி ரீதியான பாகுபாட்டை சந்தித்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ள விபின், ஐஐடியில் இதுபோன்று பாகுபாடு பார்க்கப்படுவது அதிர்ச்சி அளிப்பதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் இதுபோன்ற பிரச்சனைகளை தீர்க்க தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பழங்குடி நல ஆணைய உறுப்பினர்களை கொண்டு விசாரணை நடத்த அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.  2019-ஆம் ஆண்டு ஐஐடியில் இஸ்லாமிய மாணவி பாத்திமா தற்கொலை செய்துக்கொண்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது பேராசிரியர் ஒருவர் சாதி ரீதியான பாகுபாடு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.இது தொடர்பாக ட்விட்டரில் #IITMadras என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகின்றது.

  முன்னதாக துணை குடியரசுத் தலைவர் வெங்கைய்யா நாயுடு ஐ.ஐ.டி வந்த வீடியோவை தற்போது ஐ.ஐ.டி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

  இன்றைய தினம் அடுத்த இடத்தில் ட்ரெண்டாகியுள்ள ஹேஷ்டேக் #SilambarasanTR

  நடிகர் சிம்பு பனீர் மஷ்ரூம் செய்த த்ரோபேக் வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.நடிகர் சிம்பு தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில், 'மாநாடு' திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள இந்த திரைப்படத்தில் கல்யாணி ப்ரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, எஸ்.ஏ.சந்திரசேகர், பிரேம்ஜி, கருணாகரன் மற்றும் பலர் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடல் ஜூன் 21-ஆம் தேதி வெளியானது. இதனைத் தொடர்ந்து படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்புக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.  உடல் எடையைக் குறைத்த சிம்பு தற்போது படங்களில் பிஸியாக இருக்கிறார். பத்து தல, மஹா, நதிகளிலே நீராடும் சூரியன் போன்ற படங்கள் அவரது கைவசம் உள்ளன.இந்நிலையில் கிச்சனில் தான் சமைக்கும் த்ரோபேக் வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார் சிம்பு.  அதில், "பன்னீர் மஷ்ரூம் செய்கிறேன். லாக்டவுன் என்பதால் ஷேவ் பண்ணிவிட்டேன்.என் முகமே இப்பதான் எனக்கு தெரியுது. இவ்வளவு நாள் தாடி வச்சிருந்ததால தெரியல" என தன்னை வீடியோ எடுக்கும் சையது நிவாஸிடம் பேசிக்கொண்டே நடிகர் சிம்பு சமைக்கிறார்.

  இந்த வீடியோவை தற்போது சிம்பு ரசிகர்கள் அதிகமாக பகிர்ந்து வருகிறார்கள்.

  இன்றைய தினம் அடுத்த இடத்தில் இணையவாசிகள் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள செய்தி சிறுவர்கள் நாயை படகில் கட்டி அடித்துக் கொன்ற செயல்.இதனை கண்டித்து #JusticeForBruno என்ற டேகில் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.

  கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே வளர்ப்பு நாயை கட்டிவைத்து இரக்கமே இன்றி அடித்து கொன்றவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என #JusticeForBruno என்ற ஹேஷ்டேக் வைரலாகி வருகின்றது.

  அடிமலதுராவை சேர்ந்த கிறித்துராஜ் என்பவர் புரூனோ என்ற நாயை 8 வருடங்களாக வளர்த்து வந்தார்.  அவரது வீட்டின் வழியே செல்லும் போது நாய் குறைத்த காரணத்தால் சிறுவன் தனது நண்பர்களோடு சேர்ந்து படகில் நாயை கட்டி வைத்து கொடுரூரமாக தாக்கியுள்ளான்.

  நாயை படகு ஒன்றில் தலைகீழாக தொங்கவிட்டு இரக்கமே இன்றி கட்டையால் அடித்தே சித்ரவதை செய்ததில் நாய் இறந்தே போனது.  இந்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பகிரப்பட்டு வருகின்றது. நாயை கொடூரமாக தாக்கும் வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், தற்போது டிவிட்டரில் #JusticeForBruno என்ற ஹாஸ்டாக் டிரெண்டாகி வருகிறது.

  இது தொடர்பாக நாயின் உரிமையாளர் கிறிஸ்துராஜா காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

  youths beat dog
  #JusticeForBruno


  மேலும் கேரள உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து ட்விட்டரில் #PetrolPriceHike என்ற ஹேஷ்டேக் அடுத்த இடத்தில் ட்ரெண்டிங்கில் உள்ளது.சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 100 ரூபாயை கடந்து விற்பனை செய்யப்படுவதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.பல்வேறு மாநிலங்கள் மட்டுமல்லாது, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் பெட்ரோல் விலை 100 ரூபாயை தாண்டியுள்ளது.  இந்நிலையில் சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 33 காசுகள் உயர்ந்து, 100 ரூபாய் 17 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் விலையில் மாற்றம் ஏதுமின்றி, நேற்றைய விலையான 93 ரூபாய் 72 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.  சென்னையில் பெட்ரோல் விலை 100 ரூபாயை கடந்து விற்பனை செய்யப்படுவது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.பெட்ரோல்,டீசல் விலை உயர்வை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றது.

  #FridayThoughts,#FridayVibes என்ற ஹேஷ்டேக் அடுத்த இடத்தில் ட்ரெண்டிங்கில் உள்ளது.காலை வணக்கம், இன்றைய ஆன்மீக தத்துவங்கள், தலைவர்களின் அனுபவங்கள் இதில் பகிரப்பட்டு வருகின்றன.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Sankaravadivoo G
  First published: