Home /News /trend /

ட்விட்டரை கலக்கி வரும் இந்திய மற்றும் தெற்காசிய பாரம்பரிய பழக்கவழக்கங்கள்!

ட்விட்டரை கலக்கி வரும் இந்திய மற்றும் தெற்காசிய பாரம்பரிய பழக்கவழக்கங்கள்!

டிவிட்டர் இந்தியா 2021

டிவிட்டர் இந்தியா 2021

டிவிட்டரில் நெட்டிசன்கள் தாங்கள் பின்பற்றும் பாரம்பரிய பழக்கவழக்கங்களை பகிர்ந்து வருகின்றனர்.

  • Trending Desk
  • 3 minute read
  • Last Updated :
ஒவ்வொரு நாட்டுக்கும் தனிப்பட்ட கலாச்சாரம் மற்றும் பாரம்பரியமான பழக்கவழக்கங்கள் உள்ளன. தொன்மையான நாடான இந்தியா மற்றும் தெற்காசிய நாடுகளுக்கு பிரத்தியேகமான, வாழ்க்கை முறையோடு தொடர்புடைய பல்வேறு பழக்கவழக்கங்கள் இருக்கின்றன.

காகிதத்தையும் புத்தகத்தையும் கடவுளாக மதிக்கும் நாம் தப்பி தவறி கூட காகிதத்தின் மீது கால் பட்டுவிட்டால், ஐயையோ மன்னித்துவிடு என்று கண்களில் ஒத்திக் கொள்வோம். இதைப் போன்ற பழக்கவழக்கங்கள் தனிப்பட்ட முறையில் தோன்றி இருக்கலாம் அல்லது தலைமுறை தலைமுறையாக தொடர்ந்து வந்திருக்கலாம்.

சில பழக்கங்கள் வாழ்க்கைமுறை மாற்றத்தில் அடிப்படையில் தோன்றியிருக்கிறது. ஆனால், உலகம் எவ்வளவு நவீனமான மாறினாலும் பல பாரம்பரியமான பழக்கங்கள் நம்மிடையே தொடர்ந்து வருகிறது.

இதைப் பற்றிய டிவிட்டரில் கேள்வி எழுந்த போது, நெட்டிசன்கள் அதை வைரலாக பகிர்ந்து வந்து தாங்கள் பின்பற்றும் பாரம்பரிய பழக்கவழக்கங்களை பகிர்ந்து வருகின்றனர். மிகவும் சுவாரஸ்யமான பதில்கள் இங்கே.

ALSO READ |  சுஷாந்த் சிங் ராஜ்புத் பாடலுக்கு நடனமாடிய தான்சானியா இளைஞர் - இணையத்தில் வைரலாகும் வீடியோ

நான் இடது கை பழக்கம் கொண்டவன், ஆனால் வெளியே இருக்கும் போது, பணத்தை கொடுப்பதற்கு எனது இடது கையை பயன்படுத்தக் கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருப்பேன். இடது கையை பயன்படுத்துவது கெட்ட பழக்கமாகக் காணப்படுகிறது.

எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை. ஆனாலும் எண்ணெய் அறியாமல் புத்தகத்தையோ அல்லது காகிதத்தையோ காலால் தொட்டு விட்டால், அதைத் தொட்டு மன்னிப்பு கேட்கும் பழக்கம் எனக்கு இன்றுவரை இருக்கிறது.

ALSO READ |  திருமணத்தில் நடந்த விபரீதம் ... இணையத்தில் வைரலாகும் வீடியோ

செய்யும் தொழிலே தெய்வம். அந்த வகையில் இந்தியாவின் முதுகெலும்பான விவசாயத்துக்கும் உணவுக்கும் மரியாதை கொடுப்பதில் இந்தியர்களுக்கும் ஆசியர்களுக்கும் நிகர் இல்லை.

என்னுடைய அமெரிக்க நண்பன் தன்னுடைய உணவையும் ஷூக்களையும் ஒரே பையில் வைத்துக் கொண்டதைப் பார்த்து நான் திட்டினேன் கொஞ்ச நேரம் கழித்து தான் உணர்ந்து கொண்டேன், இந்தியர்கள் மட்டும் தான் உணவையும் காலணிகளையும் ஒன்றாக வைக்க மாட்டார்கள் என்று.

ALSO READ |  ஒரு பெண்ணின் வாழ்வையே மாற்றிய ஃபேஸ்புக் பதிவு

சீரியசாக சிலர் தங்களின் பழக்கத்தைப் பற்றி பகிர்ந்து பதிலளித்துக் கொண்டிருக்கும்போதே மிகவும் வேடிக்கையான ஆனால் நடைமுறையில் இருக்கும் பழக்கம் பற்றி பலரும் நகைச்சுவையாக பகிர்ந்துள்ளனர்.

வீட்டில் இருக்கும்பொழுது காலிங் பெல் அடித்தாலே, ஓடிச்சென்று துப்பட்டாவை எடுத்து போட்டுக் கொள்வேன் என்று வேடிக்கையாக ஒரு பெண் பகிர்ந்துள்ளார்.

ஒரு முறை பயன்படுத்திய எண்ணையை மீண்டும் பயன்படுத்தக்கூடாது, பாலிவுட் மற்றும் கிரிக்கெட்டை தீவிரமாக பின்பற்ற வேண்டும், பெரியவர்களை பெயர் சொல்லி அழைக்கக்கூடாது, விடைபெற்றுச் செல்லும்போது கதவருகில் நின்று ஒரு மணி நேரம் பேச வேண்டும், தலைக்கு தேங்காய் எண்ணெயை தடவ வேண்டும் என்று பல வீடுகளில் பல காலமாக காணப்படும் பழக்கங்களைப் பற்றி பகிர்ந்துள்ளனர்.

ALSO READ |  ஒரே நாளில் 10 முறை கோவிட் தடுப்பூசிகளை போட்டு கொண்டுள்ள நபர்... அதிகாரிகள் விசாரணை!

விலை 10 மடங்கு அதிகமாக இருந்தாலும், தள்ளுபடியில் விற்கும் பொருட்கள் மற்றும் நகைகளை வாங்கி குவிக்க வேண்டும். ஷாம்பு தீர்ந்த பிறகும், பாட்டிலில் தண்ணீர் ஊற்றி மிச்சமிருக்கும் ஒரு துளிகூட மிச்சம் இல்லாதவாறு அதையும் பயன்படுத்த வேண்டும். அதேபோல டூத் பேஸ்டின் கடைசிவரை பயன்படுத்த வேண்டும்.

 

  

  

  

  

  

 எல்லாவற்றையும் பற்றி அதிகமாக சிந்தித்து பெரிதாக யோசிப்பது ஆசியர்களின் பழக்கமாகக் கருதப்படுகிறது
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Twitter

அடுத்த செய்தி