ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

ட்விட்டரில் சைலன்ட் ஆக அறிமுகம் செய்யப்பட்டுள்ள 'ட்விட்டர் சர்க்கிள்'அம்சம் - என்ன பயன்?

ட்விட்டரில் சைலன்ட் ஆக அறிமுகம் செய்யப்பட்டுள்ள 'ட்விட்டர் சர்க்கிள்'அம்சம் - என்ன பயன்?

ட்விட்டர்

ட்விட்டர்

Twitter Update | ஐஓஎஸ்-க்கான ட்விட்டர், ஆண்ட்ராய்டு-க்கான ட்விட்டர் மற்றும் ட்விட்டர்.காம் ஆகியவற்றில் உலகளவில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நபர்களுக்கு மட்டுமே இந்த ட்விட்டர் சர்க்கிள் அம்சம் கிடைக்கிறது. "இந்த அம்சம் உங்களுக்குக் கிடைத்தால், நீங்கள் ஒரு புதிய ட்வீட்டை உருவாக்கும் போது கிரியேட் சர்க்கிள் என்கிற விருப்பத்தை பார்ப்பீர்கள் என்று ட்விட்டர் கூறுகிறது.

மேலும் படிக்கவும் ...

டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் சிஇஓ-வும், உலகின் பணக்காரர்களில் ஒருவருமான எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை "கையகப்படுத்தியதில்" இருந்து, அதாவது 44 பில்லியன் டாலர்களுக்கு வாங்கியதில் இருந்து, ட்விட்டர் சில பெரிய மாற்றங்களுக்கு உட்பட்டுள்ளது. டிவிட்டர் தளத்தில் எடிட் பட்டன் (Edit Button) சோதனையில் உள்ளது; இதுவரையிலாக இந்த மைக்ரோ பிளாக்கிங் தளத்தில் வெளியான எந்தவொரு அம்சத்தை காட்டிலும் எடிட் பட்டன் ஒரு மிகப்பெரிய அம்சமாக இருக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

அப்படியான எடிட் பட்டன் அம்சம் ஒருபக்கம் இருக்க, மறுகையில் நீங்கள் ட்வீட் செய்யும் முறையையே மாற்றக்கூடிய மற்றொரு புதிய அம்சம் ட்விட்டரில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அது ட்விட்டர் சர்க்கிள் (Twitter circle) என்று அழைக்கப்படுகிறது. அதாவது இன்ஸ்டாகிராம் ஸ்டோரீஸ்களுக்கு அணுக கிடைக்கும் க்ளோஸ்டு ப்ரெண்ட்ஸ் (Closed Friends) அம்சத்தை போன்றது. ட்விட்டர் எடிட் பட்டனை போலவே, இந்த அம்சமும் சோதனையில் உள்ளது, தற்போது வரை சிலருக்கு மட்டுமே அணுக கிடைக்கிறது.

குறிப்பிட்ட ட்விட்டர் சர்க்கிள் அம்சமானது, ட்விட்டர் சமூகங்களிலிருந்து மிகவும் வேறுபட்டது மேலும் இது ப்ரொடெக்டட் அக்கவுண்ட் அம்சத்திலிருந்தும் மிகவும் வேறுபட்டது. ட்விட்டர் சர்க்கிள் அம்சம், 150 பேர் கொண்ட சிறிய குழுவிற்கு ட்வீட் செய்ய உங்களை அனுமதிக்கும். அந்த 150 பேரால் மட்டுமே உங்கள் ட்வீட்டை பார்க்கவும், அணுகவும் முடியும், ஆனால் அவர்களால் அதை ரீட்வீட் செய்ய முடியாது.

ALSO READ | ஆழ்கடலில் வாழும் விஷத்தன்மை வாய்ந்த அரிய உயிரினம் கரையில் ஒதுங்கியது.. பீதியில் மக்கள்

 யாராவது உங்களை அவர்களின் ட்விட்டர் சர்க்கிளில் சேர்த்தால்,  குறிப்பிட்ட சர்க்கிளில் இருந்து உங்களை நீங்களே நீக்க முடியாது. அதிகபட்சம், அந்த சர்க்கிளில் இருந்து உங்களை நீங்களே மியூட் செய்து கொள்ளலாம், ஆனாலும் நீங்கள் அந்த ட்விட்டர் சர்க்கிளின் ஒரு பகுதியாக காட்டப்படுவீர்கள்.

"ட்விட்டர் சர்க்கிள் என்பது குறிப்பிட்ட நபர்களைத் தேர்ந்தெடுத்து, ட்வீட்களை அனுப்பி உங்கள் எண்ணங்களை ஒரு சிறிய கூட்டத்தினருடன் பகிர்ந்து கொள்வதற்கான ஒரு வழியாகும். உங்கள் ட்விட்டர் சர்க்கிளில் யார் இருக்க வேண்டும் என்பதை நீங்கள் தேர்வு செய்ய முடியும், மேலும் நீங்கள் சேர்த்துள்ள நபர்கள் மட்டுமே குறிப்பிட்ட சர்க்கிளில் பகிரப்படும் ட்வீட்களுக்குப் பதிலளிக்க முடியும்” என்று ட்விட்டர் நிறுவனம் இந்த அம்சம் குறித்து விவரிக்கிறது.

ALSO READ | இஷ்டம் போல் லீவு எடுத்துக் கொள்ளலாம்.. அசத்தும் நிறுவனம்.. ஊழியர்கள் என்ஜாய்

 “ட்விட்டர் சர்க்கிள் மூலம் நீங்கள் ஒவ்வொரு முறை ட்வீட் செய்யும் போது நீங்கள் உங்களின் பார்வையாளர்களை தேர்வு செய்ய முடியும். அதாவது உங்கள் சர்க்கிளுக்கு ஒரு ட்வீட்டையும், உங்களை ஃபாலோ செய்யும் அனைவருக்கும் இன்னொரு ட்வீட்டையும் அனுப்ப முடியும்” என்றும் ட்விட்டர் கூறுகிறது.

ஒவ்வொரு யூசருக்கும் ஒரு ட்விட்டர் சர்க்கிள் மட்டுமே இருக்க முடியும் என்பதை நினைவில் கொள்ளவும். மேலும், ஒரு ட்வீட்டை பதிவிடும் நேரத்தில் அதை யாருக்கு அனுப்பலாம் என்பதை நீங்கள் தேர்வு செய்யலாம். உங்கள் ட்விட்டர் ப்ரெண்ட் லிஸ்டில் இருந்து தனிப்பட்ட யூசர்களைத் தேர்ந்தெடுக்கலாம் அல்லது "அனைவருக்கும்" என்பதை தேர்வு செய்யலாம்.

ALSO READ | தேர்வில் ஒரு மார்க் எடுத்த மாணவரின் அலப்பறையை நீங்களே பாருங்கள் - வைரல் வீடியோ

“ஐஓஎஸ்-க்கான ட்விட்டர், ஆண்ட்ராய்டு-க்கான ட்விட்டர் மற்றும் ட்விட்டர்.காம் ஆகியவற்றில் உலகளவில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நபர்களுக்கு மட்டுமே இந்த ட்விட்டர் சர்க்கிள் அம்சம் கிடைக்கிறது. "இந்த அம்சம் உங்களுக்குக் கிடைத்தால், நீங்கள் ஒரு புதிய ட்வீட்டை உருவாக்கும் போது கிரியேட் சர்க்கிள் என்கிற விருப்பத்தை பார்ப்பீர்கள்" என்று ட்விட்டர் கூறுகிறது.

First published:

Tags: Twitter