Home /News /trend /

பெண்கள் வேலையை விடுவது குறித்து சர்ச்சைக்குரிய கருத்து - டிவீட் செய்தவரை வறுத்தெடுத்த நெட்டிசன்கள்

பெண்கள் வேலையை விடுவது குறித்து சர்ச்சைக்குரிய கருத்து - டிவீட் செய்தவரை வறுத்தெடுத்த நெட்டிசன்கள்


பெண்கள் வேலையை விடுவது குறித்து சர்ச்சைக்குரிய கருத்து

பெண்கள் வேலையை விடுவது குறித்து சர்ச்சைக்குரிய கருத்து

Trend | டிவிட்டரில்’Gabbbar’ என்ற பெயரில் அக்கவுண்ட் வைத்திருப்ப்பவர் பெண்கள் வேலையை விடுவது குறித்த கருத்தை ஒன்றை தெரிவிக்க, தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

நாட்டில் லட்சக்கணக்கான குடிமக்கள் வேலை இல்லாமல் இருக்கின்றனர். குறிப்பாக, பெண்களை எடுத்துக் கொண்டால் இந்த நிலைமை இன்னும் மோசமாக இருக்கிறது. கடந்த 5 ஆண்டுகளில், பணியிடங்களில் பெண்களின் பங்களிப்பு என்பது 46 சதவீதத்தில் இருந்து 40 சதவீதமாக குறைந்துள்ளது. சுமார் 21 மில்லியன் பெண்கள் பணியை விட்டு விலகியுள்ளனர். இந்திய பொருளாதாரம் குறித்த மத்திய கண்காணிப்பு அமைப்பு (CMIE) வெளியிட்ட புள்ளிவிவரங்களில் இது தெரியவந்துள்ளது.

இதுதொடர்பான செய்தியைப் பார்த்து சமூக வலைதளங்களில் பலரும் தங்களுடைய கவலைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் டிவிட்டரில் ’Gabbbar’ என்ற பெயரில் அக்கவுண்ட் வைத்திருப்ப்பவர் இதுகுறித்த கருத்தை ஒன்றை தெரிவிக்க, தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், “கடந்த ஆண்டுகளில் 20 மில்லியன் பெண்கள் பணியை விட்டு விலகியுள்ளதாக பெரிய அளவுக்கு பேசி வருகின்றனர். இந்தியாவில் பணியிடங்களில் பெண்களின் எண்ணிக்கை குறைந்து வருவதற்கான காரணம் இதுதான். குடும்பத்தின் வருமானம் அதிகரிக்கும் போது பெண்கள் தங்களுடைய குடும்பத்தை கவனிக்க தொடங்குகின்றனர். வேலை செய்ய வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு ஏற்படுவதில்லை’’ என்று கூறியுள்ளார்.

நெட்டிசன்கள் கண்டனம்:

கப்பார் வெளியிட்ட கருத்து வைரல் ஆகியுள்ள நிலையில், மற்றொரு பக்கம் பலத்த சர்ச்சைகளையும் அது ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, நெட்டிசன்கள் பலர் அவரது கருத்திற்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். லெட்சுமி சௌத்ரி (Lakshmi Chaudhry) என்பவர் வெளியிட்ட கமெண்டில், “என்ன முட்டாள் தனமான பதிவு ஒது. அதிக வருமானம் என்றால் ஆண்களுக்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கின்றன என அர்த்தம் ஆகிறது.

ALSO READ |  திருமண அரங்கிற்கு தேவதை போல பறந்து வந்த மணப்பெண் - இது நம்ம லிஸ்டுலயே இல்லயே!
 

ஏனென்றால், 1) ஒரு குடும்பத்தின் ஆண் பிள்ளைகளுக்குத் தான் கல்வியில் முக்கியத்துவம் கிடைக்கிறது. 2) மற்ற ஆண்களிடம் இருந்து பாதுகாப்பு வேண்டும் என்ற காரணத்தை சுட்டிக்காட்டி பெண்கள் வீட்டில் இருக்க நிர்பந்தம் செய்யப்படுகின்றனர். 3) ஆண்கள் நல்ல விதமான வேலைகளுக்கு தேர்வு செய்யப்படுவதால், பெண்கள் அதைவிட மோசமான வேலைகளுக்கு தேர்வு செய்யப்படுகின்றனர்’’ என்று தெரிவித்துள்ளார்.

 

 



 

ஒற்றை வருமானம் போதாது

விலைவாசி அதிகரித்து வரும் நிலையில், இன்றைய சூழலில் ஒற்றை வருமானம் போதாது என்றும், ஆண், பெண் இருவருமே வேலைக்கு செல்ல வேண்டும் என்றும் Ria என்ற பதிவாளர் கூறியுள்ளார். அவரது பதிவில், “முதலில் பெண்களுக்காக நீங்கள் பேச வேண்டாம் என தயவுகூர்ந்து கேட்டுக் கொள்கிறேன். பெரும்பாலான பெண்கள் தங்கள் வேலையை விட்டுவிட்டு குடும்பத்தை கவனிக்க விரும்புவதில்லை. பெரும்பாலான பெண்கள் அந்த சூழலுக்கு தள்ளப்படுகின்றனர்.

ALSO READ |  ஆயிரம் கோடிகளை கொட்டி வாங்கியாச்சு - ட்விட்டரில் பணம் சம்பாதிக்க எலான் மஸ்க் அடுத்த திட்டம்!

அது மட்டுமில்லாமல் என்ன மாதிரியான நாட்டில் நீங்கள் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள்? இன்றைய தினம் குழந்தையை வளர்ப்பது செலவு மிகுந்த விஷயமாக இருக்கிறது. பெரும்பாலும் ஒற்றை வருமானது போதாது’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Twitter

அடுத்த செய்தி