ட்விட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் ஆகிய சமூக வலைத்தளங்கள் இன்று நமது வாழ்வின் ஒருபகுதியாகவே மாறிவிட்டன. சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக வலம் வருவது என்பது மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியதாகிவிட்டது.
ஏனென்றால் சோசியல் மீடியாக்கள் எப்போது யாரை ஹீரோவாக்கும், யாரை ஜீரோவாக்கும் என தெரியாது. அடுத்தவரை ட்ரால் செய்து பகிரப்படும் மீம்ஸ்கள் மில்லியன் கணக்கில் லைக்குகளை குவித்து வைரலாவதும் உண்டு, மனிதனின் ஆக்கப்பூர்வமான சாதனைகள் பற்றி ட்வீட்டிற்கு ஒரு லைக் கூட கிடைக்காமல் போன கதைகளும் உண்டு.
இதேபோல் தான் சோசியல் மீடியாவில் ஃபேஸ்புக், யூ-டியூப், இன்ஸ்டாகிராம் போல் அல்லாமல் ட்விட்டரில் பாலோயர்களை பெறுவது என்பது அவ்வளவு எளிதான விஷயம் கிடையாது. பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள் கோடிகளை செலவழித்து போலியான பாலோயர்களை உருவாக்குவதாக கூட குற்றச்சாட்டுக்கள் உண்டு. ஆனால் சாமனியர்களுக்கு அது சாத்தியம் கிடையாது ட்விட்டரில் ஒரு அக்கவுண்ட்டை ஓபன் செய்துவிட்டு, யாராவது பாலோ செய்யமாட்டார்களா? என காத்திருக்க வேண்டியது தான்.
இந்நிலையில் ஒரு ட்விட்டர் யூஸர் ஒருவர் ஒரே ஒரு ட்வீட் மூலம் ஆயிரக்கணக்கான பாலோயர்களைப் பெற்றுள்ளது சமூக வலைத்தளங்களில் வைரலாக பேசப்பட்டு வருகிறது. ஜெஃப் க்ராவன் என்ற நபர் தனது ட்விட்டர் பக்கத்தில், ஒரு ட்வீட் தன்னை 300-லிருந்து 8,000-க்கும் அதிகமான பாலோயர்ஸ் கிடைப்பதற்கு காரணமானது என பகிர்ந்துள்ளார். தனது போனில் கூட ட்விட்டர் கிடையாது என்றும், தூங்கும் நேரத்தில் கடவுள் புரிந்த அருளால் இதுபோன்ற மேஜிக் நிகழ்ந்ததா? என்றும் ஆச்சர்த்துடன் பதிவிட்டுள்ளார்.
What in God's name happened while I was asleep. I don't have Twitter on my phone anymore lol
— Jeff Craven (@jeffbcraven) March 15, 2022
இதை எல்லாம் விட அல்டிமேட் என்னவென்றால் 8 ஆயிரம் பாலோயர்களை ஒரே நாளில் பெற்றது எப்படி என ஜெஃப் பதிவிட்டுள்ள ஒரு ட்வீட் மீண்டும் வைரலாகி வருகிறது.
அந்த ட்விட்டர் பதிவில், எனது 6 படிகளைக் கொண்ட திட்டம் இதோ...
1. மீடியாவை சேர்ந்த நண்பர் 2009-ம் ஆண்டு ட்விட்டரில் இணையும் படி கூறியிருக்க வேண்டும்.
2. அவர்கள் சொன்னதற்காக ட்விட்டர் அக்கண்வுட் ஒன்றை ஆரம்பியுங்கள். ஆனால் அதை பயன்படுத்தாதீர்கள்
3. சில வருடங்களுக்கு நல்ல வேலை கூட கிடைக்காமல், கிடைக்கும் சின்ன சின்ன வேலைகளை செய்து வாழ்க்கையை ஓட்டுங்கள்
4. 2011ம் ஆண்டு மீடியாவில் பணிக்கு சேரலாம், அதுவரை ட்விட்டர் அக்கவுண்ட்டை பயன்படுத்தவில்லை.
5. 2018-ல் Biz ஐ அறிமுகப்படுத்தும் போது அதை பயன்படுத்தவும்
6. 300 பின்தொடர்பவர்களை மட்டுமே கொண்டிருப்பதாக வைரல் ட்வீட் செய்யுங்கள்.
இந்த ஹோட்டலுக்கு சென்று 'நன்றி', 'ப்ளீஸ்' என்று சொன்னால் உங்களுக்கு சிறப்பு தள்ளுபடி நிச்சயம்
ஜெஃப்பின் பின் தொடர்வோர் பட்டியலில் முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் பெயரும் இடம் பிடித்திருப்பதைக் கண்டு பலரும் ஷாக்காகியுள்ளனர்.
இதுகுறித்து ட்வீட் செய்துள்ள ஜெஃப் எனக்கு வரும் DM-கள் அனைத்தும் வேடிக்கையாக உள்ளது. தற்போதைக்கு அவை அனைத்தையும் நான் புறக்கணிப்பது நல்லது. முன்னாள் அமெரிக்க அதிபருடன் எனக்கு எந்த சம்பந்தமும் கிடையாது. ஆனால் 2008-ம் ஆண்டு ஓபாமாவின் பாலோயர்களை அவர் பின் தொடர்ந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
இந்த ட்விட்டர் பதிவை பார்க்கும் போது ஜெஃப்பிற்கு பாலோயர்கள் அதிகரித்து வருவது ஏதாவது டெக்னிக்கல் பிரச்சனையாக இருக்குமா..? என நெட்டிசன்கள் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.