ஒருவர் மீது நாம் கொண்டிருக்கும் அன்பை எப்படியெல்லாம் வழித்து வெளிப்படுத்த முடியும்..? அவருக்காக பரிசுகள் வாங்கிக் கொடுக்கலாம்! இதுவே இறந்து போனவர்கள் என்றால் அவர்களின் நினைவாக மற்றவர்களுக்கு உதவி செய்யலாம், அவர்களுடைய பொருட்களை பொக்கிஷமாக பாதுகாக்கலாம். குறிப்பாக தாத்தா பாட்டி மீது குறையாத அன்பு கொண்ட பேரப் பிள்ளைகள் இருக்கிறார்கள். அவர்கள் இறந்து போனாலும் அவர்களுடைய வாஞ்சையும் அன்பும் காலம் காலமாக நிலைத்து இருக்கும். அதை நிரூபிக்கும் வகையில் மறைந்த தனது தாத்தா பாட்டி மீதான அன்பையும் மரியாதையும் ஒரு நபர் வித்தியாசமாக வெளிப்படுத்தியிருக்கிறார். டிவிட்டரில் வைரலாகும் அதைப் பற்றி இங்கே பார்க்கலாம்.
தனது தாத்தா மற்றும் பாட்டியின் நினைவாக, ஸ்பெஷலாக பச்சை குத்திக் கொண்ட நபர் புகைப்படம் மற்றும் டிவீட்டை எமோஷனலாக பதிவிட்டு இருக்கிறார். அவர் பகிர்ந்த புகைப்படங்களும், ட்வீட்டும் ட்விட்டரில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டு, ஒன்பது மாத இடைவெளியில் தாத்தா மற்றும் பாட்டி இருவரையுமே இழந்ததால் அவர்களுடைய நினைவு எப்பொழுதுமே நீங்காத வண்ணம், நிரந்தரமாக இருக்கும் படியான டாட்டூக்களை தன்னுடைய கையில் பச்சை குத்தியிருக்கிறார். இந்த நபர் இரண்டு புகைப்படங்களை பச்சைக் குத்தியுள்ளார். அந்த படங்கள் இரண்டுமே, தாத்தா மற்றும் பாட்டி இவருக்கு எவ்வளவு ஸ்பெஷலானவர் என்பதைக் குறிக்கிறது.
Read More : ஆம்புலன்ஸ் மூலம் மூட்டை மூட்டையாக செருப்பு விநியோகம்.. அதிர்ச்சி வீடியோ...!
கையில் பச்சை குத்திக் கொண்ட படத்தில் தாத்தாவின் உருவம் மற்றும் புலி போன்ற கோடுகள் கொண்ட முகமும், கையில் பின்பக்கத்தில் ஏதோ ஒரு பொருளை லேசாக மறைத்து வைத்திருப்பதைப் போலவும் இருக்கிறது. இன்னொரு டாட்டூவில், அவரது பாட்டி பயன்படுத்திய கோப்பை இருக்கிறது. இந்த படங்களை டாட்டூவாக ஏன் போட்டுக்கொண்டார் என்பதற்கான காரணத்தையும் அவர் வெளிப்படுத்தியிருக்கிறார்.
தன்னுடைய தாத்தா, வேடிக்கையாக தோட்டத்திலிருந்து புளியை எடுத்து ஒளித்து வைத்திருப்பது சிரிப்பதைப் போல உருவத்தையும், பாட்டி எப்போதும் பயன்படுத்தும், கையில் வைத்திருக்கும் கோப்பையின் உருவத்தையும் டாட்டுவாக தன்னுடைய கைகளில் வரைந்து இருக்கிறார் என்று விளக்கியுள்ளார். மேலும், அவரது தாத்தா மற்றும் பாட்டியின் புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.
இந்த பதிவு பல ஆயிரத்துக்கும் மேற்பட்ட லைக்குகளையும் பார்வையாளர்களையும் பெற்றுள்ளது. அதுமட்டுமில்லாமல் பல யூசர்களும் நெகிழ்ச்சியுடன் தங்களுடைய கமென்ட்களையும் பதிவுசெய்து வருகின்றனர்.
last year, within 9 months i lost my daadi and my naanu. today, i made permanent the ways i’d like to remember them.
my ajji with a strong cup of chaha and my ajoba- cheekily hiding imlis from his garden. pic.twitter.com/v42WedM8DT
— begum (formerly duchess) (@pettyparthy) February 8, 2023
ட்விட்டர் யூசர்கள் இது மிக மிக அழகாக இருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார்கள். இதை பார்க்கும்போது எனக்கும் உங்கள் தாத்தா பாட்டியை மிகவும் பிடிக்கிறது என்று நெகிழ்ச்சியுடன் ஒரு சிலர் ரீ ட்வீட் செய்து இருக்கின்றனர். புலி போன்ற உங்கள் தாத்தாவின் உருவத்தை நீங்கள் டாட்டூவாக வரைந்திருப்பது கண்ணீர் வருகிறது என்று மற்றொரு யூசர் மிகவும் நெகிழ்ந்து ட்வீட் செய்திருக்கிறார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Trending News, Viral News