ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

டிவிட்டரில் கேட்கப்பட்ட ஒற்றை கேள்வி - புதிய வணிகமாக மாறிய தருணம் குறித்து பதிவாளர் மகிழ்ச்சி.!

டிவிட்டரில் கேட்கப்பட்ட ஒற்றை கேள்வி - புதிய வணிகமாக மாறிய தருணம் குறித்து பதிவாளர் மகிழ்ச்சி.!

ட்ரெண்டிங்

ட்ரெண்டிங்

Samosa Corners | பொதுவாக ஃபேஸ்புக், யூடியூப் போன்ற வலைதளங்களில் வீடியோக்களை வெளியிட்டு பலர் பணம் சம்பாதிப்பதும், பலர் பிராண்டட் தொழில் நிறுவனங்களை நிறுவி வருவதையும் நாம் பார்த்து வருகிறோம்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

சமூக வலைதள நிறுவனங்களில் பணியாற்றுபவர்களுக்கு இது இறங்குமுக காலமாக இருக்கிறது. ஆள்குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள ஃபேஸ்புக் திட்டமிட்டு வருகிறது. குறிப்பாக, டிவிட்டர் நிறுவனத்தை விலைக்கு வாங்கியுள்ள எலான் மஸ்க், ஊழியர்களை கொத்து, கொத்தாக பணிநீக்கம் செய்து வருகிறார்.

டிவிட்டர் இந்தியா நிறுவனத்தில் மட்டும் 50 சதவீத ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், எண்ணற்ற ஊழியர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குள்ளாகியுள்ளது. ஆனால், இதற்கு நேர்மாறாக பலரது வாழ்வில் ஒளிவிளக்கு ஏற்றுவதற்கு டிவிட்டர் காரணமாக இருக்கிறது.

பொதுவாக ஃபேஸ்புக், யூடியூப் போன்ற வலைதளங்களில் வீடியோக்களை வெளியிட்டு பலர் பணம் சம்பாதிப்பதும், பலர் பிராண்டட் தொழில் நிறுவனங்களை நிறுவி வருவதையும் நாம் பார்த்து வருகிறோம். அதேபோல, சமூக வலைதளத்தில் தங்களின் வணிகம் அல்லது ப்ராடக்ட் குறித்து பதிவிட்டு, அதன் மூலமாக வணிகம் செய்பவர்களையும் பார்த்து வருகிறோம்.

வணிகமாக மாறிய ஒற்றை கேள்வி

டிவிட்டரில் ஏதேனும் கேள்விகளை முன்வைத்து சிலர் வாக்குப்பதிவு நடத்துவதை பார்த்திருப்பீர்கள். அதுபோல ஷ்ரேயாஸ் தோஷி என்ற நபர் விளையாட்டுத்தனமாக டிவிட்டரில் வாக்குப்பதிவு ஒன்றை நடத்தப்போக, அதுவே தனியொரு வணிகமாக மாறியிருக்கிறது. இதுகுறித்த மகிழ்ச்சியை டிவிட்டரில் அவர் பகிர்ந்து கொண்டுள்ளார்.

முன்னதாக, “சமோசாவில் உங்களுக்கு எந்த பகுதி மிகவும் பிடித்தமானது.?" என்ற வாக்குப்பதிவை இவர் நடத்தியிருந்தார். எண்ணற்ற பயனாளர்கள் சமோசா பிடித்தமானது என்று வாக்களித்திருந்தனர். இதற்கிடையே, இந்த வாக்குப்பதிவை பார்த்து மனம் உந்தப்பட்ட நபர் ஒருவர், சாமோசாவிற்கு என்று பிரத்யேக சேல்ஸ் கார்னர் ஒன்றை திறந்துவிட்டார். அந்தக் கடையின் படத்தை இவருக்கு அனுப்பியும் வைத்தார்.

Also Read : Math Riddles | மூளைக்கு சவால்.. காலியாக உள்ள கட்டத்திற்கான சரியான எண்ணை கணடுபிடித்தால் நீங்கள் ஜீனியஸ்

அந்த மகிழ்ச்சியை டிவிட்டரில் ஷ்ரேயாஸ் தோஷி பகிர்ந்து கொண்டுள்ளார். அவரது பதிவில், “இப்போதெல்லாம் டிவிட்டர் வாக்குப்பதிவு பதிவுகள் புதிய ப்ராடக்டுகளாக உருவெடுத்து வருகின்றன. அண்மையில் சமோசா குறித்த எனது வாக்குப்பதிவை பார்த்து ஈர்க்கப்பட்டு சமோசா பார்டி என்ற பெயரில் சேல்ஸ் கார்னர் தொடங்கியுள்ளனர். அந்த கடையின் நிறுவனர் எனக்கு படங்களை அனுப்பி வைத்துள்ளார்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

டிவிட்டரில் இந்தப் பதிவு வைரல் ஆகியுள்ளது. பலரும் சமோசாவை சிலாகித்து பதிவிட்டு வருகின்றனர். பயனாளர் பதிவு செய்துள்ள கமெண்ட் ஒன்றில், “இப்போதெல்லாம் பெரிய அளவுக்கான மசாலா இன்றி சிறிய வகை சமோசா தயாரிக்கப்படுகின்றன. அவை மொறுமொறுப்பு சுவையை கொடுத்தாலும், ஒரு முழுமையான சமோசாவுக்கு ஈடாகாது. வதக்கிய வெங்காயம், காரட் மற்றும் உருளைக்கிழங்கு மசால் ஸ்டஃப் செய்யப்பட்ட முழுமையான சமோசாவில் தான் ருசி அதிகம். இதையெல்லாம் எடுத்துவிட்டால், அது ப்ரெட் இல்லாத பீட்ஸா போல ஆகிவிடும்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Published by:Selvi M
First published:

Tags: Tamil News, Trending, Twitter