Twitter Trending : வரிகட்டுங்க விஜய் Vs கடனை அடைங்க அஜித்.. ட்விட்டரில் போட்டி போடும் அஜித் ,விஜய் ரசிகர்கள் - இன்றைய ட்ரெண்டிங்

இன்றைய ட்ரெண்டிங்

Twitter Trending : வரிகட்டுங்க_விஜய் Vs கடனைஅடைங்க_அஜித்.. ட்விட்டரில் போட்டி போடும் அஜித் ,விஜய் ரசிகர்கள் - இன்றைய ட்ரெண்டிங்

  • Share this:
    வெளிநாட்டு சொகுசு காருக்கு வரி விதிக்க தடை கோரிய வழக்கில் நடிகர் விஜய்க்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகர் விஜய் கடந்த 2012 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து ரோல்ஸ் ராய்ஸ் என்ற சொகுசு காரை இறக்குமதி செய்தார். இந்த காருக்கு நுழைவு வரி செலுத்தாததால் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பதிவு செய்யவில்லை. இதையடுத்து ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவு வரி செலுத்த வணிக வரி துறை உதவி ஆணையர் உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை எதிர்த்தும் வரி விதிக்க தடை விதிக்கக் கோரியும் நடிகர் விஜய் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ். எம். சுப்ரமணியம், மக்கள் செலுத்தக்கூடிய வரி தான் பள்ளிகள், மருத்துவமனைகள் உள்ளிட்ட நல திட்டங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது என்றும், தமிழ்நாட்டில் நடிகர்கள் நாடாளும் அளவிற்கு வளர்ந்துள்ள நிலையில், அவர்கள் உண்மையான ஹீரோக்களாக இருக்க வேண்டுமே தவிர, ரீல் ஹீரோக்களாக இருக்கக் கூடாது எனவும் நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

    சமூக நீதிக்கு பாடுபடுவதாக பிரதிபலிக்கும் நடிகர்கள், இதுபோன்ற வரி ஏய்ப்பு செய்வது ஏற்றுக்கொள்ள இயலாது என்றும், வரி ஏய்ப்பு என்பது தேசத்துரோகம் எனவும் தெரிவித்தார். இறக்குமதி செய்யப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் காருக்கான வரியை இரண்டு வாரங்களில் செலுத்த வேண்டும் என நடிகர் விஜய்க்கு உத்தரவிட்டு விஜயின் மனுவை தள்ளுபடி செய்தார்.

    மேலும், நடிகர் விஜய்க்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்த நீதிபதி, அதனை முதலமைச்சர் கொரோனா நிவாரண நிதிக்கு இரண்டு வாரத்தில் வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார். இதனிடையே ட்விட்டரில் இந்திய அளவில் வரிகட்டுங்க_விஜய் என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகின்றது. இதற்குப் போட்டியாக கடனைஅடைங்க_அஜித் என்ற ஹேஷ்டேக்கும் ட்ரெண்டாகி வருகின்றது. மேலும் விஜய் ரசிகர்கள் WeSupportThalapathyVijay என்ற ஹேஷ்டேக்கையும் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.









    தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியை ஆதரித்து ட்விட்டரில் எடப்பாடி என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகின்றது. இதில் அதிமுக தொண்டர்கள் பலரும் TN People Miss u thalaiva என பதிவிட்டு வருகின்றனர்.









    ட்விட்டரில் MadrasHighCourt என்ற ஹேஷ்டேக் இன்று அதிகம் பயன்படுத்த பட்டு வருகின்றது.சொகுசு காருக்கு வரி விதிக்க தடை கோரிய வழக்கில் நடிகர் விஜய்க்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த செய்தியின் தொடர்ச்சியாக பலரும் MadrasHighCourt என்ற ஹேஷ்டேக் பபயன்படுத்தியுள்ளனர்.





    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sankaravadivoo G
    First published: